என் மீது குற்றம் சுமத்துபவர்களுக்கு என்னிடமிருந்து சில கேள்விகள்

07.01.2012 அன்று  நான் ஒஸ்லோ முத்தமிழ் அறிவாலய நிர்வாக உறுப்பினர் திரு. அமிர்தலிங்கம் அவர்களால் முத்தமிழ் அறிவாலயத்தில் வைத்து பலர் முன்னிலையில் என்னை பல முறை மேற்சட்டையில் பிடித்துத்தள்ளி. தாக்க முற்பட்பட்டார்.

முத்தமிழ் அறிவாலய  நிர்வாகத்தினர் தமது பாடசாலையின் உட்பிரச்சனைக்கு என்னை பலிக்கடாவாக்க முயற்சிப்பதால், பின்வரும் கேள்விகளை‌க் கேட்கத் தூண்டுகிறது எனது மனம்.

முத்தமிழ் அறிவாலய நிர்வாகத்தினரே!

நீங்கள் என் மீது ஒரு துண்டுப்பிரசுரத்தை உங்கள் பாடசாலையில் ஒட்டியதாக குற்றம் சுமத்துகிறீர்கள்.  நான் உங்களுடன் பேச அஞ்சி, ஒளிந்து ஓடுவதாகவும் உங்கள் அங்கத்தவர்களிடமும், நண்பர்களிடமும் கூறுகிறீர்கள்

நான் ‌ உங்களுடன் பேசத் தயார் என்று ஒரு மின்னஞ்சல் உங்கள் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பியிருந்தேன் நினைவிருக்கிறதா? அதில் என்னை குற்றம் சுமத்துபவர்கள் சமூகமளிக்கும் எந்தக் கூட்டத்திற்கும் வரத் தயார் என்றும், 2011 மார்களி 21ம் திகதி மாலை உங்களுடன் பேசச் சம்மதம் என்றும் அறிவித்த மின்னஞ்சலின் பிரதி இப் பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது
அம் மின்னஞ்சல் எப்போது, யாருக்கு யாரால் அனுப்பப்பட்டது என்பதை Google Mail இவ்வாறு பதிவு செய்திருக்கிறது.
-Date: Wed, 21 Dec 2011 20:51:11 +0100 Delivered-To: adsayaa@gmail.com Message-ID: Subject: =?UTF-8?B?TWlzdW5kZXJzdGFuZGluZyDgrongrrDgr4jgrq/grr7grp/grrLgr406IOCujuCuqeCupA==?= =?UTF-8?B?4K+BIOCuleCusOCvgeCupOCvjeCupOCvgQ==?= From: Sanjayan To: =?UTF-8?B?VmlqYXllbmRyYW4g4K6H4K6z4K614K6+4K6y4K+I?= Cc: Chandru Content-Type: multipart/alternative; boundary=90e6ba3fcc6f7a641104b49f8133ூ

இப் பதிவின் இறுதியில் நான் இணைத்துள்ள இந்த மின்னஞ்சலை நீங்கள் வாசித்தால், நான் எப்போதும்  உங்களுடன் பேசுவதற்கு தயாராக இருந்தேன் என்பது புரியும்.  உங்களின்  வாதம் பொய்யானது என்பதும் புரியும்.  எல்லோரையும்  அழையுங்கள், பேசுவோம் என்ற எனது விருப்பத்தை நீங்கள் ஏற்கவில்லை என்பதே உண்மை.

ஏன் ”என் மீது குற்றம் சுமத்தியவர்களை” நீங்கள் என்னுடன் பேசவதற்கு அழைக்கவிரும்பவில்லை என்பதை 07.01.2012 அன்று உங்கள் பாடசாலையில் உங்கள் வழங்கப்பட்ட மற்றுமொரு தன்னிலை விளக்க துண்டுப்பிரசுரத்தில் இருந்து அறிந்து கொண்டேன்.

நமக்குள் ஏன் பிரச்சனை, வளர்ந்த மனிதர்கள் நாம். எனவே பேசித்தீர்க்க முயற்சிப்போம் என்ற நண்பரின் வேண்டுகோளை ஏற்று,  திரு. விஜயேந்திரன், திரு. கிருபாமூர்த்தி, அந்த குறிப்பிட்ட நண்பர், நான் ஆகியோர்  சந்தித்து போது நீங்கள் கூறியதாவது:

” பாடசாலையில் திரு. குமாருக்கு துண்டுப்பிரசுரம் வைப்பதற்கு ஒரு பெற்றோருக்கும் அவசியம் இல்லை. நீர் ஒருவர் தான் வெளியாள் அங்கு நின்றிருந்தீர். அதை விட நீர் தான் மேலும், கீழும் நடந்து தரிந்ததை சிலர் அவதானித்துள்ளனர்”

ஆம். நான் அன்று உங்கள் பாடசாலையின் நத்தார் விழாவுக்கு வந்திருந்தேன்.
விழா நடைபெற்ற இடத்தில் பலத்த சத்தமாகையால்  3 - 4 தடவை தொலைபேசி பேசுவதற்காக மேலேறிப்போனேன்.

இதில் எனக்குப் புரியாத விடயங்களாவன:

பாடசாலையில் திரு. குமாருக்கு துண்டுப்பிரசுரம் வைப்பதற்கு ஒரு பெற்றோருக்கும் அவசியம் இல்லை என்று நீங்கள் கூறுவதால் நீங்கள் அத்துண்டுப்பிரசுரத்தை  வைக்கும் அவசியம் எனக்கு இருந்திருக்கிறது என்கிறீர்கள்.

அப்படியாயின் அந்த ”அவசியம்” என்ன என்று கூறமுடியுமா?
நீங்கள் குறிப்பிடும் அந்த குமார் என் நண்பரா, விரோதியா, பங்காளியா?
உங்களின் குமாரையே கேளுங்கள்.  நாம் முன்பின் அறியாதவர்கள் என்பார் அவர்.
முன்பின் அறிந்திராத ஒரு மனிதருக்கு எதிராக துண்டுப்பிரசுரம் வைப்பதற்கான அவசியம் எனக்கு என்ன இருக்கிறது?

தயவு செய்து இந்தக் கேள்விக்கான பதிலை தந்துதவ முடியுமா? எனக்குத் தர முடியாவிட்டாலும் பறவாயில்லை, உங்கள்  பாடசாலை அங்கத்தவர்கள் கேட்பார்கள், அவர்களுக்கு உங்கள் பதிலைக் கூறுங்கள், உங்களால் முடிந்தால். (மூன்று வாரங்களாக நானும் இதையே கேட்டுக்கொண்டிருக்கிறேன்)

இரண்டாவது:

ஒரு மனிதன் கையில் தொலைபேசியுடன் 3 - 4 தடவைகள் வெளியே சென்று வந்தால் அவன் துண்டுப்பிரசுரம் ‌ஒட்டுகிறான் என்று கூறுவது எவ்வகையில் நியாயமாகிறது?  இதற்கும் முடிந்தால் பதில் தந்தால் மகிழ்வேன்.

மேற்படி நடைபெற்ற கூட்டத்தில் நான் உங்களிடம் நான் இந்தக் கிழமை பாடசாலைக்கு வருவேன் என்ற போது திரு கிருபாமூர்த்தி ” ஏலும் என்றால் வந்து பார்” வெருட்டியதை நாம் நால்வரும் நன்கு அறிவோம்.

இதன் பின் அக் கூட்டத்தில் இருந்து மேற் கொண்டு எதுவும் பேசாது வெளியேறியது யார்? நானா? நீங்களா?
ஏன்  உங்களால் அந்தக் கூட்டத்தில் கூட என் மீது நீங்கள் சுமத்தும் குற்றத்திற்கு உங்களிடம் இருப்பதாகக் கூறும் சாட்சியங்களை, ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை?

அக் கூட்டத்தில் நடைபெற்றவை பற்றி நான் எழுதியவை எல்லாமே உண்மை என்பதை அக் கூட்டத்தை ஒழுங்கு செய்த அந்த முத்தமிழ் அறிவாலய அங்கத்தவர் அறிவார்.

இதன் பின் 07.01.2012 நான் உங்கள் பாடசாலைக்கு வந்த போது திரு. அமிர்தலிங்கம் அவர்கள் என்னை பலர் முன்லையில் பல தரம் எனது மேலாடையில் பிடித்து தள்ளி, தாக்க முனைந்ததையும், அநாகரீகமா பேசியதையும் நிர்வாகஉறுப்பினர்களாகிய நீங்கள் அறிவீர்கள். அதன் பின் நான் எனது குற்றத்தை நிரூபிக்கக் கேட்ட போது அதிபர் திரு. சிவானந்தம் ”அதற்கு இப்போ அவசியம் இல்லை. நீர் வெளியே போம்” என்று கூறியதையும் நீங்கள் அறிவீர்கள். அதன் பின் நான் உங்கள் பாடசாலையை விட்டு வெளியேறியிருந்தேன்.

இன்றுவரை என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு உங்களினால் ஒரு சிறு ஆதாரத்தையும் முன்வைக்க முடியாததற்கு என்ன காரணம் என்பதற்கு பதில்  ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதையும் தெரிவியுங்கள்.

என்னிடம் உங்கள் நிர்வாக உறுப்பினரைப் போல்  வன்முறை பாவிக்கும், வெருட்டும் பழக்கங்கள் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம்  என் மீதான குற்றச்சாட்டுக்களை  பலர் முன்னிலையில் நிரூபியுங்கள் என வாயால் கேட்கக்கூடிய சக்தி மட்டுமே. அதைச் செய்ய உங்களால் முடியுமா?

உங்களிடம் சாட்சியங்கள் இருந்திருந்தால்
  • அன்று ( நத்தார் விழாவின் போது) நான் பாடசாலையில் அதிக நேரம் நின்றிருந்த போதே என்னிடம் கேட்டிருக்கலாமே? அல்லது அன்று மாலையே கேட்டிருக்கலாமே?
  • அல்லது என் மீமு குற்றம் சுமத்தியவர்களை அழைத்து ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்து அங்கு உங்களின் சாட்சியங்களை முன்வைத்திருக்கலாமே.
  • அல்லது முத்தமிழ் அறிவாலய நண்பர் ஒழுங்கு செய்த கூட்டத்திலாவது முன்வைத்திருக்கலாம்.
இப்படி நேர்மையாக நடந்து கொள்ளாமால் நீங்கள் இவ்வாறு மர்மமாக நடந்து கொள்வதை எவரும் சந்தேகமாகவே பார்ப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியாததல்ல.  என்னைப்பொறுத்தவரையில் நீங்கள் எதையோ உலகத்துக்கு மறைக்கி‌றீர்கள் என்பதே என்பதே உண்மை.

நான் துண்டுப்பிரசுரம் ஒட்டியதை ஒருவர் கண்டுள்ளார் என்றும் பேசுகிறீர்கள். அப்படி எனின் ஏன் நீங்கள் என்னுடன் ஒரு misunderstanding பற்றி பேசவேண்டும் என்றீர்கள்?  உம்மீது ஆதாரத்துடன் ஒரு குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்றல்லவா கூறியிருக்கவேண்டும்? இன்று வரை உங்களினால் ஒரு வித ஆதாரமும் முன்வைக்கப்படவில்லையே? ஏன்?

ஒரு நான் misunderstanding என்கிறீர்கள்.  சில தினங்களின் பின் ஆதாரபூர்வமான குற்றம் என்பது போல பேசுகிறீர்கள்.

இதன் மூலம் நான் அறிந்து கொள்வது என்னவென்றால் என்னைக் கண்ட சாட்சியை நீங்கள் இன்னும்  முயன்றுகொண்டிருக்கிறீர்களேயன்றி வேறொன்றுமில்லை என்பதாகும். இனியாவது சாட்சியங்களை உருவாக்க முன் சற்று சிந்தியுங்கள்.

உங்களின் தடுமாற்றங்களால் நீங்களும் குழம்பி, உங்கள் அங்கத்தவர்களையும்ம் குழப்புகிறீர்கள்.

நீங்கள் எனக்கு பதில் தரமாட்டீர்கள் என்பதை நான் அறிவேன்.  முடியுமானால் உங்களிடம் கேள்வி கேட்பவர்களிடம் ”குழம்பியடிக்காமல், லாஜிக் பிழைக்காமல்,பொய் சொல்லாமல்” சிந்தித்து பதிலளியுங்கள்.

நன்றி


இவ்வண்ணம்
சஞ்சயன்.

----------------------------------
என்னால் முத்தமிழ் அறிவாலய நிர்வாகஉறுப்பினர் திரு விஜயேந்திரனுக்கு எழுதப்பட்ட மின்னஞ்லின் பிரதி.
---------------------------------
-Date: Wed, 21 Dec 2011 20:51:11 +0100 Delivered-To: adsayaa@gmail.com Message-ID: Subject: =?UTF-8?B?TWlzdW5kZXJzdGFuZGluZyDgrongrrDgr4jgrq/grr7grp/grrLgr406IOCujuCuqeCupA==?= =?UTF-8?B?4K+BIOCuleCusOCvgeCupOCvjeCupOCvgQ==?= From: Sanjayan To: =?UTF-8?B?VmlqYXllbmRyYW4g4K6H4K6z4K614K6+4K6y4K+I?= Cc: Chandru Content-Type: multipart/alternative; boundary=90e6ba3fcc6f7a641104b49f8133ூ


வணக்கம் விஜயேந்திரன்!

நேற்று (20.12.2011) மாலை 6:30 மணியளவில் நீங்கள் என்னுடன் தொலைபேசியில் பேசிய போது, என்னுடன் ஒரு உரையாடலை நடாத்த விரும்புவதாகவும், எப்போ நேரமிருக்கும் என்று கேட்டீர்கள். நான் அவ்வுரையாடல் எது பற்றியது என்று கேட்டபோது அது பற்றி தொலைபேசியில் உரையாட விரும்பவில்லை என்றீர்கள். மேலும் மேலும் வற்புறுத்திக் கேட்ட போது ஒரு misunderstanding பற்றி பேசவேண்டும் என்றீர்கள்.

சில வேளைகளில் நான் நாளை பயணம் செய்விருப்பதால் இன்று மாலையே 9 மணியளவில் பேசுவோம் என்ற போது ”நேரம் போய்விட்டது” இன்று பேச முடியாது என்றும். உங்களுக்கு எப்போ நேரம் இருக்கும் என்று நீங்கள் கேட்டபோது, நாளை நான் பயணிக்காவிட்டால் நாளை மாலை பேசுவோம் என்றேன். நாளை காலை 11 மணிபோல் தொடர்பு கொள்ளுங்கள் அப்போ ‌எனது நாளைய பயணம் பற்றி தெரிந்திருக்கும் என்றும் கூறினேன்.

இன்று காலை உங்களிடம் இருந்து கிடைத்த குறுஞ்செய்தியை அடுத்து உங்களுடன் தொலைபேசியில் உரையாடிய போது,
இன்று மாலை 7 மணிபோல் பேசலாம் என்று கூறி, உரையாடவிருக்கும misunderstanding என்ன என்று அறிந்தாலே நான் அது பற்றி உரையாடத் தயாராக வரமுடியும் எனக்  கூறிய போது, அதற்கு நீங்கள் அது பற்றி  கூற முடியாது என்றீர்கள்.

அதற்கு நான், என்னை ஒரு உரையாடலுக்கு அழைக்கிறீர்கள், அது பற்றி எதுவும் கூறமுடியாதென்கிறீர்களே இது நியாயமற்ற கருத்தல்லவா என்றேன். அதற்கு நீங்கள் இது பற்றி மேலதிகமாக விவாதிக்க விரும்பவில்லை என்று கூறியபோது, நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்திய பின் ”பாடசாலை (முத்தமிழ் அறிவாலயம்)” சம்பந்தமானது என்றும், சிலர், ”உங்களில் சிலரை” (நிர்வாகத்தினர் என்றே கருதுகிறேன்) என்னுடன் ஒரு விடயத்தைப்பற்றி பேசக் கேட்டுக்கொண்டதாகவும் கூறினீர்கள்.

அப்போது நான், எது பற்றிப் பேசுவதானாலும் அது குறித்து பேசவேண்டிய அனைத்து நபர்களும் அங்கிருப்பது அவசியம். அதுவும் நாம் பேசப்பேவது ஒரு misunderstanding பற்றி என்றும். இது சம்பந்தமான அனைவரும் குறிப்பிட்ட உரையாடலில் கலந்துகொள்வார்கள் எனின் எனக்கு அவ்வுரையாடலில் கலந்து கொள்வதில் ஆட்சேபனை இல்லை என்றேன். அதற்கு நீங்கள் உங்களில் நம்பிக்கையிருப்பின் எம்முடன் பேசுங்கள் என்றீர்கள்.  இது தவிர, நான் யார் யார் உரையாடலில் கலந்துகொள்கிறார்கள் என்று கேட்டபோதும் நீங்கள் அது பற்றியும் கூறமுடியாது என்று மறுத்தீர்கள்.

நான் மீண்டும் எனது கருத்தை வலியுறுத்தி, இது பற்றி நீங்கள், மற்றவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பதிலை எனக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அத்துடன் எமது சம்பாசனை முடிந்தது.

இன்று மாலை 18:25 வரை எதுவித பதிலும் கிடைக்காது போனதால் உங்களின் 92620542 என்னும் கைத்தெலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தியும், 18: 45 போல் ஒரு மின்னஞ்சலும் உங்களுக்கு அனுப்பி, நீங்கள் குறிப்பிட்ட கூட்டம் நடைபெறுமா, அவ்வாறு நடைபெற்றால் எங்கு நடைபெறும் என்று கேட்டிருந்தேன்.

தற்போது வரை உங்கள் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த மின்னஞ்சலை நான் எழுதுவதன் காரணம், எம்மிடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள், குறுஞ்செய்தி பரிமாற்றங்களை வேறு எவரும் அறியமாட்டார்கள். தவிர, எனக்கு உங்களின் கருத்துக்கள் நீங்கள் எதையோ மறைப்பது போல் நான் உணருவதால் இவ்விடயம் பற்றி மற்றவர்களும் அறிந்திருப்பது அவசியம் என்று கருதுகிறேன்.

நீங்களோ ஒரு misunderstanding பற்றி பேச வேண்டும் என்றீர்கள். அது என்ன misunderstanding என்று கேட்டும் நீங்கள் பதிலளிக்க மறுத்தீர்கள். அத்துடன் misunderstanding சம்பந்தப்பட்ட அனைவரையும் உரையாடலுக்கு அழைத்தபோது அதையும் மறுத்தீர்கள். யார் யார் கலந்துரையாடலில் பங்குபெறுகிறார்கள் என்று கேட்டதற்கும் பதிலளிக்க மறுத்தீர்கள். தவிர, எனது கோரிக்கையை மற்றைவர்களுடன் கலந்துரையாடிய பின்பு அறிவியுங்கள் என்றும் கேட்டிருந்தேன். நேரம் மாலை 20:30 மணியாகிய பின்பும் உங்களிடம் இருந்து எது வித பதிலும் கிடைக்கவில்லை.

இவ்வாறு நீங்கள் நடந்து கொண்டதனாலும், எனது கருத்துக்களை மற்றவர்களும் அறிந்திருக்கவேண்டும் என்பதனாலும், இம் மின்னஞ்சல் உங்களுக்கு, கிருபா அண்ணண், சந்துரு மற்றும் நான் நேர்மையான நண்பர்கள் என்று கருதும் சிலருக்கும் அனுப்பிவைக்கிறேன் என்பதனை அறியத் தருகிறேன்.

இம் மின்னஞ்சலின் உள்ளடக்கத்தில் ஏதே‌னும் தவறுகள், திருத்தங்கள்  இருப்பின் அறியத்தரவும். இம்மின்னஞ்சலை பெறும் அனைவருக்கும் உங்கள் கருத்துக்கள் அனுப்பிவைக்கப்படும்.

அதே வேளை உங்களை என்னுடன் பேச கேட்டுக்கொண்டவர்களிடம், ”அவர்களும் உரையாடலில் கலந்து கொள்ளவேண்டும்” என்ற எனது கோரிக்கையை அறிவிக்கவேண்டிய ஒரு தார்மீக பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது. அதை நீங்கள் செய்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.
உங்களில் நம்பிக்கை இன்மையால் இவ்வுரையாடலில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதல்ல எனது பதிலின் அர்த்தம். என்னைப்பொறுத்தவரை Misunderstanding என்னும் போது அது சம்பந்தமான அனைவரும் உரையாடலில் கலந்து கொள்வது அவசியம் என்று நான் நினைப்பதாலேயே நான் அவ்வாறு கூறினேன்.

Misunderstanding இல் சம்பந்தப்பட்ட அனைவரும், நீங்களும், மற்றவர்களும் உரையாடவருமிடத்து நானும் உரையாடத்தயாராகவுள்ளேன்.

அத்துடன் சில வேளைகளில் எனது நண்பர் (முத்தமிழ் அறிவாலய அங்கத்தவர்) ஒருவரை நான் அழைத்து வர ஆலோசிக்கிறேன்.  காரணம் உங்களது நடவடிக்கைகள் எதையோ மூடிமறைப்பது போல இருக்கிறது என்று நான் உணர்வதனால் அங்கு என்ன பேசப்படுகிறது என்று ”முன்றாவது நபரொருவர்” அறிந்திருப்பது எனக்கு அவசியமாகப்படுகிறது.

இம் மின்னஞ்சலை ” Misunderstanding” பற்றி உங்களை, என்னுடன் பேச அனுப்பியவர்களுக்கும் அனுப்புமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கிருபா அண்ணணின் மின்னஞ்சல் என்னிடம் இல்லை. தயவு செய்து அவருக்கும் அனுப்பிவிடவும்.

நன்றி


இவ்வண்ணம்
சஞ்சயன்

2 comments:

  1. :( பிறர் மீது இலகுவில் முத்திரை குத்துவது எம் சமூகத்தில் அதிகரித்து வருகின்றது.

    ReplyDelete

பின்னூட்டங்கள்