19.04.14 அன்று மாலை பலநூறு மனிதர்களின் மத்தியிலும், இதமான இசையின் மத்தியிலும், பல நண்பர்களின் அருகாமையிலும் மனம் தனிமையுணர்வினை தொட்டுணர்ந்துகொண்டிருந்தது.
தனிமையின் கனம் மனதை அழுத்த, அழுத்த என்னால் அங்கு உட்கார்ந்திருக்குமுடியவில்லை. இசை நிகழ்வில் மனம் ஒன்றவில்லை. என்னைக் கட்டாயப்படுத்தி உட்கார்த்திவைத்திருந்தேன். அப்படியும் அதிக நேரம் உட்கார்ந்திருக்கமுடியவில்லை. தனிமையின் பாரம் தாங்கமுடியாததால் வீடுசெல்லப் புறப்பட்டேன்.
மண்டபத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் ஒரு குழந்தையைத்தூக்கிவைத்திருந்தார். அந்தக் குழந்தை என்னப்பார்த்து கண்களால் புன்னகைத்தது. குழந்தையைப் பார்த்து புன்னகைத்து, கண்ணைச் சிமிட்டியபடியே அவர்களைக் கடந்துகொண்டேன். அவர்களைக் கடந்து சில அடிகள் நடந்திருப்பேன் ”ஹாய்” என்று மழலை மொழி என்னை நோக்கி வீசப்பட்டதை உணர்ந்து திருப்பிப்பார்த்தேன். அந்தக்குழந்தை தனது வலதுகையில் ஆட்காட்டிவிரலை என்னை நோக்கி நீட்டியபடியே தெய்வீகமாய் புன்னகைத்தது.
என்னை மறந்து அந்தக்குழந்தையை நோக்கி மந்திரித்துவிட்டவன்போன்று நடந்தேன். அப்போதும் அக்குழந்தை என்னைநோக்கி கைவிரலை நீட்டிக்கொண்டே இருந்தது. பஞ்சுபோன்ற அக் குழந்தையின் கைவிரலைப் பற்றிக்கொண்டேன். விரலின் குளிர்ச்சியை உணர்ந்தேன்.

காலம் Tom Hanksஐயும் அம் மனிதனையும் (Michael Clarke Duncan) நெருங்கிய நண்பர்ளாக்கிவிடும். அம்மனிதன் Tom Hanksக்கு நோய்கண்டிருப்பதை தனது சக்தியினால் உணர்ந்துகொண்டு, Tom Hanks இன் கையைப்பற்றியிருக்கும் ஒரு சமயத்தில் அந்நோயை குணப்படுத்திவிடுகிறான். இதை தனது மேலதிகாரியிடம் கூறும் Tom Hanks, அவரது மனைவியையும் அவனால் குணப்படுத்தமுடியும் என்று கூறி, அவனை சிறைச்சாலையைவிட்டு அவர்களின் வீட்டுக்கு அழைத்துச்சென்று மனைவியை அவனுக்கு அறிமுகம்செய்யுமாறு கூற, பலத்த பாதுகாப்புடன் அவனை அழைத்துச்செல்லும் Tom Hank ம், மேலதிகாரியும் அவனுக்கு அப்பெண்ணை அறிமுகப்படுத்த அவனும் அப்பெண்ணிண் நோயினை குணப்படுத்துகிறான்.
எத்தனையோ படங்கள் பார்த்திருந்தாலும் இந்தப்படத்தில் கறுப்பனாக நடத்த John Coffey பாத்திரத்தில் நடித்த Michael Clarke Duncan இன் நடப்பும் அவரது காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தவிதமும் இன்றும் மனதில் படிந்திருக்கின்றன. என் மனதை, உணர்வுகளை அதிகமாக பாதித்தபடம் இது. படம் முடிந்ததும் பலர் கைதட்டினார்கள். என்னால் உடனடியாக திரையரங்கைவிட்டு எழும்பி வரமுடியவில்லை, சற்றுநேரம் ஆனது என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள. படத்தின் முடிவு மனதை அந்தளவுக்கு ஆட்டிப்போட்டிருந்து. அத்தனை அற்புதமான படம் அது.
மீண்டும் இப்போது அந்தக் குழந்தையின் கதைக்கு வருவோம்.

சில மனிதர்களிடத்தில் அற்புதமானதொரு அதீத சக்தி இருக்கிறது. The Green Mile திரைப்படத்தில் John Coffey பாத்திரத திரமும், இந்தக் குழந்தையும் அப்படியானவர்களே.
அக்குழந்தையை தூக்கிவைத்திருந்தவர் ”இவன் இப்படித்தான், எல்லோருடனும் மிக இலகுவாகப் பழகுவான்” என்றார்.
நான் புன்னகைத்ததேன்.