எனது யாத்திரைப் பயணத்தில் இன்று ஓய்வு நாள். கால்விரல்கள் இரண்டு நீர் கட்டி உபாதைதருவதால் நாளை மறுநாள் காலை வரை ஓய்வு அவசியமாகிறது. எனவே Burgos என்னும் நகரத்தில்என் வாழ்க்கை ஓடுகிறது.
Sports சாமான்கள் விற்கும் ஒரு கடையைத் தேடியலைந்தேன். கண்ணில்படவில்லை ஒரு கடையும்.
அந்த நேரத்தில் என் நிறம் கொண்ட, என்னைப்போன்ற தலை உடைய, என்னைப்போன்ற அழகான ஒரு ஆபிரிக்க நாட்டவர் சைக்கிலில் வந்தார். அவரைப் பார்த்துச் சிரித்தேன்.
அவரும் சிரித்தபடியே என்னருகில் வந்து ஒரு காலை ஊன்றி மறுகாலை சைக்கிலில் வைத்தபடியே ஸ்பானிய மொழில் பேசினார்.
நான் பேய் முழி முழிப்பதை பார்த்த அவருக்கு புரிந்திருக்கவேண்டும். Fransi என்று கேட்டார். இல்லை என்று தலையை அங்கும் இங்கும் ஆட்டினேன். Arabi என்றார் இதற்கு முன்னிலும் மிக வேகமாய் இல்லை என்று தலையாட்டினேன்.
அவரை விட்டால் எனக்கு தெரியாத மொழியை எல்லாம் கேட்பார் என்பதால் English என்றேன். அவர் என்னை விட அதிகமாக இல்லை என்று தலை அங்கும் இங்கும் ஆட்டினார்.
அவரிடம் Sports கடை எங்கேஇருக்கிறது என்று கேட்க வேண்டும். Sports shop என்றேன். அவருக்குப் புரியவில்லை. பந்து போன்று கையால் சைகை செய்து காட்டினேன். நோ நோ English என்றார். டேய்! இது கைப்பாசை என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். மீண்டும் பெரிய பந்து ஒன்றை சைகையால் காட்டி காலால் அடித்தும் காட்டினேன். அத்துடன்:
எனக்கு தெரிந்த 4 - 5 Franchசொற்களில் boutique என்றால் கடை என்பதும் ஒன்று.
Spanish மொழியில்பல சொற்களை ” ஓ ” போட்டு பேசுகிறார்கள் என்பதை அவதானித்திருக்கிறேன். எனவே நானும் Sport"O" boutique"O"என்று English, Franch, Spanish கலந்து ஒரு புதிய மொழியில் சொன்னேன். சீ சீ சீ என்று தலையை ஆட்டினார்.
மனிதர் சைக்கலில் இருந்த இறங்கி நடக்கத் தொடங்கினார். என்னை வா என்று அழைத்தார்.
ஆஹா.எனது மொழி அவருக்கு புரிந்துவிட்டது என்ற பெருமிதத்துடன் எனது English, Franch, Spanish கலந்த மொழியில் நானும், Franch, Spanish, Arabi மொழியில் அவரும் பேசிக் கொண்டே சென்றோம்.
இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை என்று கூறமுடியாது.அதே வேளை எல்லாம் விளங்கியது என்றும் கூற முடியாது.
மனிதர் நடக்கிறார் நடக்கிறார். Burgos நகரத்தின் எல்லைக்கே என்னை அழைத்துப் போனது போல இருந்தது அவருடனான பயணம்.
ஏறத்தாள 20 நிமிடங்களின் பின் திடீர் என்று ஒரு நாற்சந்தியில் நின்றபடியே hay hay என்றார். யாரையோ அழைக்கிறார் என்று நினைத்தேன், நான்.
அவர் எனது தோளில் பிடித்தபடியே hay hay என்று கையைக் காட்டினார். (பின்பு தான் google traslater மூலம் hay என்றால் ”அங்கே” என்று அறிந்து கொண்டேன்)
அவர் காட்டிய திசையில் கட்டங்களும், மனிதர்களும், வாகனநெருக்கடியுமே தெரிந்தது. எனவே புருவத்தை சுருக்கினேன்.
இரண்டு தடவைகள் முயற்சித்தார். எங்கள் மொழியில் அவர் நினைத்த வார்த்தை இருக்கவில்லை.
எனவே ”வா” என்று அழைத்துப் போய் ஒரு கட்டடத்தின் முன்னே நிறுத்தி, உள்ளே செல் என்றார். நானும் Thank you, Merci, gracias, ரொம்ப நன்றிங்கண்ணா என்று கூறினேன். கையை குலுக்கோ குலுக்கு என்று குலுக்கி,இழுத்தணைத்து அணைத்து முதுகில் அறைந்து ஆபிரிக்க முறைப்படிவிடைபெற்றார் நண்பர்.
என்ன அன்பு, என்ன பண்பு முகமறியா எனக்கு இவ்வளவு உதவி செய்த மனிதரைப் பற்றி மனது பெருமிதம் கொண்டது. நான் எப்பொழும் சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு ஏதோ ஒரு நல்ல சக்தி என்னை எப்போதும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
அப்போது தான் நான் அந்தக் கட்டடத்தைப் நிமிர்ந்து பார்த்து Sports கடை எங்கே இருக்கிறது என்று தேடினேன்.
இப்போது தான் புரிந்தது நண்பர் என்னை அழைத்து வந்திருந்தது உள்ளரங்கத்தில் காற்பந்து விளையாடும் இடம் (indoor sports stadium) என்று.
நான் உம்மை ஒவ்வொரு வெள்ளியும் பந்தடிக்க வரச்சொல்லி தெரிந்த மொழியில் கூப்பிட்டால் வர மாட்டீர் எனிமேலும் எப்படிக் கூப்பிடுவது என்று தெரியும்...காலைக் கவனிக்கவும் பயணம் இரண்டு நாள் பிந்தினாலும் பிரச்சணை இல்லை ..தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎன்னைப்போன்ற அழகான
ReplyDeletethis is toooo much.........
Mano
இந்த வயதில் இது (நடைப்பயணம்) தேவையா என்று ஊட்டுக்காரம்மா புறுபுறுக்கவில்லையா?
ReplyDelete