சில மாதங்களுக்கு முன்பு ரோட்டறிக் கழகத்தின் கூட்டமொன்றில் வயதான, சமூக
சேவையில் அனுபமிக்க, ஒரு நோர்வேஜியரின் உரை ஒன்றைக் கேட்கக் கிடைத்தது.
அவர் மிகவும் வயதானவர். நடுங்கிய குரல், மெலிந்த உடம்பு, தெளிந்த தேஜஸ்
நிறைந்த முகத்தடன் இருந்தார்.
அவர் தனது உரையை ஒரு சமூக அக்கறையுள்ள மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்று தொடங்கினார்.
பலரும் பல பதில்களைக் கூறினார்கள். நேர்மை, இரக்கத்தன்மை, அரசுக்கு வரி
செலுத்துதல், சிரமதானம், குற்றம்செய்யமாதிருத்தல் என்று பல விதமான
கருத்துக்கள் கூறப்பட்டன. தலையை ஆட்டியபடியே நின்றிருந்தார் பெரிவர்.
இடையிடையே புன்னகைத்தார்.
பின்பு கேட்டார் ஒரு சிறந்த சப்பாத்து தைக்கும் கடைக்காரரின்
நற்பண்புகள் எவை என்று? அதற்கும் பல பதில்கள் கிடைத்தன. நியாயவிலை, நேர்மை,
தரமான தொழிட் திறமை, குறிப்பிட்ட நேரத்துக்கு சப்பாத்தை திருப்பிக்
கொடுத்தல் (நேரம், வாக்கு தவறாமை), தன்னிடம் வரும் பயனர்களை (கஸ்டமர்)
சிறப்பாக கவனித்தல் என்று பலரும் பலவிதமான கருத்தக்களை அடுக்கினர்.
அடுத்து ஒரு வைத்தியர், அதன் பின் ஒரு வழக்கறிஞர், சுத்திகரிப்பத்
தொழிலாளி ஆகியோரின் நற்பண்புகளைக் கேட்டார். சப்பாத்துக்கடைக்காரருக்கு
கூறிய பதில் போன்ற தொனியிலேயே இவர்களுக்கும் பதில் கிடைத்தது.
சில கணங்கள் அமைதியாய் நின்றிருந்தார். நிமிர்ந்து எல்லோரையும் பார்த்தார். மெதுவாய் செரிமிக்கொண்டு நீங்கள் எல்லோரும் ஒரு சமூகத்தின் அங்கத்தவர்கள். எனவே, இப்போது புரிந்திருக்குமே ஒரு சமூகம் எதை விரும்புகிறது என்று கூறினார்.
பலரும் பலமாய் சிந்தித்தனர். சிலருக்கு உடனேயே புரிந்தது. சிலருக்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது.
சற்று நேரத்தின் பின் தொடர்ந்தார் பெரியவர்.
சமூகத்தின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்களே சமூக அக்கறையுள்ள மனிதர்களாகிறார்கள் என்றார் பெரியவர்.
எனக்கு அவரின் கருத்து புரிய சற்று நேரமெடுத்தது. புரிந்த போது, அவ் வார்த்தைகளின் ஆழம் என்னை பலமாய் சிந்திக்கத் தூண்டியது.
இன்றைய நாளும் நல்லதே!
அழகான படைப்பு
ReplyDeleteசரியான பதில் தான் பெரியவர் பாணியில்!ம்ம்ம்
ReplyDelete