
எப்போதும் மற்றவர்களுடன் மனக்கசப்புகளை தந்து போகும் தொழில் அது.
நேற்று முக்கியமான, ஜன மற்றும் வாகன நெருக்கம் உள்ள ஒரு இடத்தில் நின்றிருந்தேன். அந்த இடத்தில் சில நாட்களுக்கு முன்புவரை ஒரு பிரபல்யமான எரிபொருள் விற்பனைநிலையம் இருந்தது. இன்று அது முடப்பட்டுள்ளதாக அறிவிப்புப்பலகை மாட்டப்பட்டிருந்தது அதன் வாசலில்.
நான் எனது நண்பர் என்னை இந்த எரிபொருள் விற்பனை நிலைகயத்தில் காத்திருக்கும்படி கூறியிருந்தார். ஒருவருக்காக அங்கு காத்திருந்தேன்.
அப்போது ஒரு இளைஞன் தனது அழகிய கறுப்பபு நிறமான காரில், காரரைவிட அழகான இளம் பெண்ணுடன் வந்தான். அவளின் நிறம் என்னுடையதைவிடவும், காரினுடையதைவிடவும், அந்த இளைஞனைவிடவும் கறுப்பாக இருந்தது. அவர்களது வாகனத்தை என்னருகில் நிறுத்தி இறங்கிப் போயினர். பெண்ணின் பிட்டம் ஆபிரிக்கர்களுக்குரியது போன்று இருந்தது. என்னருகில் நின்றிருந்த பல கண்கள் அப் பெண்ணின் பின்னழகை ரசித்ததை அவதானிக்க முடிந்தது என்னால்.
அவர்கள் சென்று 5 நிமிடங்களின் பின் அவர்களின் வாகனத்துக்கு முன்னாலிருந்த ஒரு மிகச் சிறிய வாகனத்தில் இருந்தது ஒருவர் வெளியே இறங்க முயற்சிப்பது தெரிந்தது. அவர் காரினுள் இருந்து இந்த உலகத்திற்கு பிரசவித்துக்கொள்ள முயற்சிப்பது போன்று இருந்தது அந்தக்காட்சி. சற்று நனைச்சுவையான காட்சியாகவே இது இருந்தது.
சற்று அதிகமாகவே பெருத்த உடலைக்கொண்ட அவர் ஒரு போலீஸ் அதிகாரி போலிருந்தார். அவரது மேலுடலையும் கீழுடலையும் ஒரு கறுப்புநிறபட்டி பிரித்துக் காட்டியபடி இருந்தது. அவரின் அந்த பட்டியில் பல உபகரணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இவையெல்லாம் இலத்திரணியல் உபகரணங்கள். தொலைபேசி, ஒரு அன்டனா கொண்ட சிறு கணிணி, இன்னொரு உபகரணம், கமரா, பாட்டுக்கேட்கும் கருவி போன்றவை அவரிடத்தில் இருந்தன. காதில் பாட்டு கேட்கும் உபகரணம் இருந்தது. அவரது நடையில் அவர் கேட்டுக்கொண்டிருந்த பாட்டிற்கா னதாளலய நடனம் தெரிந்தது.
மனிதர் வித்தியாசமானவராக இருக்கிறாரே என்று நான் நினைத்தபடியே அவரை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த கறுப்பு இளைஞனின் காரை நன்கு உற்றுப்பார்த்தார். நான்கு முறை சுற்றிப்பார்த்தார். பின்பு மணியைப்பார்த்தார். தலையை மெதுவாய் ஆட்டிக்கொண்டார். மெதுவாய் தொலைபேசியை எடுத்து அதைவிட மெதுவாய் ஒரு இலக்கத்தை தட்டி அதனிலும் மெதுவாய் தொலைபேசியை காதிற்கருகில் கொண்டுசென்றார். ஏதோ பேசினார். மிகவும் மெதுவாய் தொலைபேசியை இடுப்புப்பட்டியில் பொருத்திக்கொண்டார்.
இடுப்புப்பட்டியில் இருந்து சிறு கணணியை எடுத்து குச்சி போன்னதோர் பொருளினால் ஏதோ எழுதினார். இடுப்புப்பட்டியில் இருந்த இருந்த ஒரு உபகரணத்தை அமத்த அது பச்சை நிற ஒளிவீசி தனது இருப்பை அறிவித்தது.
இப்போது மனிதர் சிறு கணணியை இடுப்பில் பொருத்திக் கொண்டு, கமராவை எடுத்துக் கொண்டார். அழகிய அந்த கறுப்புக் காரை படம் எடுத்தார்.
இவர் சிவில் போலீஸ் ஆக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என் மனதில் அந்த கறுப்பு இளைஞன் காரைத் திருடுவது போலவும், இவர் போலீசுடன் தொடர்புகொண்டு திருட்டுக்காரை என்பதை உறுதி செய்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது தான் அந்த அதிசயம் நடந்தது.
பச்சை நிற ஒளிவீசி தனது இருப்பைக் காட்டிய அந்த உபகரணம் கிர்ர்ர் என்று இயங்கத் தொடங்கியது அதனுள் இருந்து ஒரு மஞ்சல் காகிதம் வெளியே வரவும் அவர் அதை லாவகமாகக் கிழித்து அந்த இளைஞனின் காரின் கண்ணாடியில் ஒட்டிவிட்டார்.
அப்போது தான் புரிந்தது சகலரும் வெறுக்கும், இன்பத்தையே தராத தொழிலான வாகனத்தரிப்பிட கண்காணிப்பாளர் அவர் என்று.
அதன் பின்னான 10 நிமிடங்களில் மேலும் 4 – 5 வாகனங்களுக்கு தண்டப்பணம் விதித்து மஞ்சல் நிற கடதாசியை ஒட்டிவிட்டார்.
பலருக்கும் அந்த தரிப்பிடம் முன்பு போல இலவச தரிப்பிடம் அல்ல என்பது தெரியாதிருந்தது. பாவமாய் இருந்தது அவர்களை நினைத்த போது.
அந்நேரம் பார்த்து தனது அழகியின் பிட்டத்தில் வைத்த கையை எடுக்காது மறு கையில் தொலைபேசியுமாக நடந்து வந்து கொண்டிருந்தான் அந்த இளைஞன்.
ஆஹா … கிளைமாக்ஸ் ஆரம்பிக்கப்போகிறது என்று என் உள் மனது ஆனந்தக்கூத்தாடியது.
எனது எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை அந்த இளைஞன். தனது காரில் மஞ்சல் துண்டினைக் கண்டதும் அவனது இரத்தம் கொதிநிலைக்கு ஏறியது. வாயில் இனிமையான வார்த்தைகளுடன் வாகனத்தை சுற்றிச் சுற்றி வந்தான்.
என்னைப் பார்த்தான். நான் அந்த மனிதர்தான் இதை எழுதிவைத்தார் என்று பத்தவைத்துவிட்டு புதினம் பார்க்கலானேன்.
மெலிந்த இளைஞனும், மிகவும் பருத்த மனிதரும் நேரெதிரில் நின்று கொண்டிருந்தனர். அந்த மனிதர் மிதித்தால் இவன் சப்பளிந்துவிடுவான்.
வாகனதரிப்பிட கண்காணிப்பாளரோ அவனின் பேச்சை கேட்டமாதிரி தெரியவில்லை. ஒரு சிறு குச்சியினால் பல்லைக் குடைத்து, நாக்கினால் எதையோ தட்டியெடுத்து துப்பியபடியே வேறொரு வாகனத்துக்கு தண்டப்பணம் விதித்துக்கொண்டிருந்தார்.
இளைஞனின் முகம் அவனது கரிய நிறத்தையும் கடந்து சிவந்தது போல இருந்தது எனக்கு.
மீண்டும், ஆனால் ஏன் எனக்கு தண்டப்பணம் விதித்தாய் என்றான் இளைஞன்
நிமிர்ந்து இளைஞனைப் பார்த்து முதலில் அதிகாரிகளுடன் பேசக் கற்றுக்கொள் என்றார்.
இளைஞன் நிதானத்தை இழந்திருந்தாலும் மிக அறுதலாக தனது கேள்வியை மீண்டும் கேட்டான். பின்பு அவரே அவனை அழைத்துவந்து எனது வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் முறை பிழையானது. அடுத்தவருடைய இடத்தையும் சேர்த்து உனது வாகனம் நிற்கிறது என்றார். தவிர இது கட்டணம் செலுத்தி வாகனம் நிறுத்துமிடம், நீங்கள் கட்டணமும் செலுத்தவில்லை, அது தான் தண்டம் விதித்தேன் என்றார்.
அவன் எவ்வளவோ வாதாடியும் அவர் இரங்கவில்லை.
நானும் இப்படி சில சமயங்களி;ல் மாட்டிக் கொண்டதுண்டு. ஒரு முறை எல்லாவிதமான விதிகளையும் வாசித்த பின் எனது வாகனத்தை தரிப்பிடக்கட்டணம் செலுத்தியபின் நிறுத்திவிட்டுச் சென்றேன். நான் திரும்பி வந்த போது தண்டப்பணம் வைக்கப்பட்டிருந்தது.
மறுநாள் தண்டப்பணம் விதித்த கம்பனியுடன் தொடர்பு கொண்ட போது நீ நிறுத்தியிருந்தது போலீசார் மட்டும் நிறுத்த அனுமதியுள்ள இடத்தில் என்றார்கள். அவ்விடத்திற்குச் சென்று அது பற்றி ஏதும் எழுதியிருக்கிறதா என்ற தேடினேன். எதுவும் கண்ணில்.படவில்லை. மீண்டும் தேடியபோது ஒரு மரத்தின் அடர்ந்த கிளையொன்று அந்த போலீசாருக்கு மட்டும் என்னும் பெயர்ப்பலகையை மறைத்திருந்தது தெரிந்தது. (எனது அப்பா போலீஸ் ஆக இருந்தவர் என்று சொன்னால் கேட்கவா போகிறார்கள்)
நோர்வேயில் வாகனங்களை சந்திகளுக்கருகில் நிறுத்தும் போது சந்தியில் இருந்து 5 மீற்றர் தூரத்திற்கப்பால் நிறுத்தவேண்டும் என்ற விதியிருக்கிறது. ஒரு முறை நானும் ஏறத்தாள 6 – 7 மீற்றர் அளந்து எனது வாகனத்தை நிறுத்திவிடுட்டுச் சென்றிருந்தேன். அன்றும் தண்டப்பணம் விதித்திருந்தார்கள். அருகில் இருந்த நண்பர் வீட்டிற்குச் சென்று மீற்றர் அளவுகோல், கமரா ஆகியவற்றை கொணர்ந்து படம் எடுத்துக்கொண்டேன். மறு நாள் விளக்கம் கேட்டபோது 5 மீற்றர் விதியை மீறினேன் என்றார்கள். இல்லையே என்னிடம் படங்கள் இருக்கின்றன என்று கூறிபடங்களை மின்னஞ்சலில் அனுப்பினேன். உடனே பதில் வந்தது. படங்களைப் பார்த்தோம். நீங்கள் விதிகளை மீறியுள்ளீர்கள். 5 மீற்றர் விதி வீதியின் உட்பக்க கரையில் இருந்தே அளக்கப்படுகிறது. நீங்கள் வெளிப்பக்க கரையில் இருந்து அளந்திருக்கிறீர்கள் என்றார்கள். மீறப்பட்டிருந்த தூரம் 150 செ. மீ.
ஒரு முறை ஏறத்தாள 8 நிமிடம் பிந்திவிட்டது. அதற்கும் 150 டாலர் தண்டம் விதித்திருந்தார்கள். இப்படி நானும் இந்த வாகனத்தரிப்பிட கண்காணிப்பாளர்களிடம் மாட்டிக்கொண்டதுண்டு. எப்போ பணத்தட்டுப்பாடு இருக்கிறதோ அந்த நேரத்தினை எப்படியோ அறிந்துகொண்டு இந்த தண்டப்பணத்தை விதிக்கிறார்கள்.
அந்நேரங்களில் இரத்தம் கொதிநிலைக்குச் செல்லும், இதயம் வேகமாக அடித்துக்கொள்ளும், வாயில் படு தூஷண வார்த்தைகள் வரும், சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு வித கொலைவெறி.
அந்த ஆபிரிக்க இளைஞனும் அப்போது அப்படித்தான் இருந்தான். காரின் உள் இருந்த அந்த அற்புத அழகி அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. கோபத்தில் வெடித்துக்கொண்டிருந்தான். அற்புத அழகி முத்தம்கோடுத்து அவனை அடக்கப்பார்த்தாள். முத்தத்தையும் கடந்து அவனது கோபம் எல்லை மீறியதாய் இருந்தது.
அனுபவி ராஜா ஆனுபவி .. நானும் இப்படி எத்தனை தரம் மாட்டியிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்த போது நண்பர் வந்தார். வாகனத்தில் ஏறிக்கொண்டேன். மறக்காமல் அற்பத அழகியையும் திரும்பிப் பார்த்துக்கொண்டேன்.
பாவிப்பயல் மீண்டும் அவளின் உதட்டு முத்தத்தையும் உதாசீனப்படுத்தியபடி கொதித்துக்கொண்டிருந்தான்.
இன்றைய நாள் அவனுக்கு நல்லதல்ல..
அனுபவம்........!சிறப்பு தொடருங்கள்
ReplyDeleteஎனக்கு தண்டம் போட்டு ரெண்டு நாள் கூட ஆகல அதுக்குள்ள உங்களுக்கு எப்படி தெரிஞ்சிது... சகுனி படம் பாக்க போனேன் மூணு மணிநேரத்துக்கு தரிப்பிட சீட்டு எடுத்து சகுனி பாக்குற குஷீலா சீட்டை தலைகீழ வச்சிட்டு போய்டேன்....தெரிம்பி வந்த கார் கண்ணாடியில மஞ்ச சீட்டு...
ReplyDeleteபாவிப்பயல் மீண்டும் அவளின் உதட்டு முத்தத்தையும் உதாசீனப்படுத்தியபடி கொதித்துக்கொண்டிருந்தான்.
ReplyDelete