மனித உறவுகளின் விசித்திரங்கள் ஆச்சர்யமானவை. இவற்றில் பல இயற்கையாக அமைபவை. தாய், தந்தை, மகன், மகள், சதோரங்கள், ஏனைய குடும்பசார் உறவுகள் எல்லாமே இயற்கையானவை எனலாம். காதல், நட்பு என்பதையும் இயற்கையான உறவு என்றாலும் அவை சற்று வித்தியாசமானைவை.
நேற்று முன்தினம் ஒரு படத்தினை பார்க்கக் கிடைத்தது. மலையாளத்தில் ”ஒரே கடல்” என்றும் தமிழில் ”வண்ண வண்ண கடல்” என்றும் பெரிடப்பட்ட படம். தமிழ் மொழிபெயர்ப்பில் படம் பலதையும் இழந்த போயிருந்தது போலிருக்கிறது எனக்கு. எனக்கு மலையாளம் புரியாதாகையால் தமிழிலேயே பார்த்து முடித்தேன்.
மீரா ஜஸ்மினின் எளிமையான நடிப்பின் முன் மம்முட்டியின் சற்று மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு அடிபட்டுப் போகிறது. கல்வித்திமிரும், பணத்திமிரும் கொண்ட கதாநாயகனாக நடிக்கிறார் மம்முட்டி. சாதாரண குடும்பப் பெண்ணாக வருகிறார் மீரா ஜஸ்மீன். மீரா ஜஸ்மீன் திருமணமானவர். மம்முட்டி வயதான பிரம்மச்சாரி. இவர்களுக்கிடையிலான உறவினை விபரிக்கிறது படம். பெண்களின் அன்பைப் புரியாத கதாநாயகன், அன்பையே தேடும் கதாநாயகி, இவர்களுக்கிடையில் மீரா ஜஸ்மினின் கணவன் என நகர்கிறது கதை. சற்றுக் கூட விரசமின்றி படமாக்கியிருப்பதால் படத்தின் கதா பாத்திரங்களுடன் நாமும் இணைத்து போகிறோம்.
காதலும், காமமும், சூழ்நிலைகளும் இருவரையும் இணைத்துவிடுகிறது. மம்முட்டிக்கு காமமே பெரிதாயும், மீரா ஜஸ்மினுக்கு காதலும், காமமும் கலந்ததொரு உணர்விலும் இருவரும் பழகினாலும் மீரா ஜஸ்மின் தனது பிழையை உணர்ந்து மம்முட்டியுடனான உறவை தவிர்க்க விரும்பினாலும் அவரின் காதல் அவரை மம்முட்டியை நோக்கியே நகர்த்துகிறது.
இதனால் கர்ப்பமடையும் மீரா ஜஸ்மின், அதை பெரிது படுத்தாத மம்முட்டி, பின்பு வெளிநாடு செல்லும் மம்முட்டி என செல்லும் கதை மீரா ஜஸ்மினின் பிரசவத்தின் பின் அவர் மனநோயாளியாளிக மாறிம் போது கனக்க ஆரம்பிக்கிறது. மீரா ஜஸ்மின்னின் கணவருடன் மம்முட்டி மீரா ஜஸ்மினை மனநோயாளிகளின் இல்லத்தக்கு அழைத்துப் போவதும் அதன் பின்பு அவர் மீரா ஜஸ்மினை தன்னையறியாமலே விரும்புவதும் மிகவும் அழகான முறையில் காட்டப்பட்டுள்ளது.
மன நல மருத்தவமனையில் இருந்த திரும்பும் மீரா ஜஸ்மினின் தடுமாற்றங்கள், குழப்பங்கள் எல்லாமே மிகவும் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. மீண்டும் அவர் கணவருடன் வாழத் தொடங்கும் போது மீண்டும் மம்முட்டியை காணும் போது அவர் தடுமாறுவதும், மனதை கட்டுப்படுத்தப்படும்பாட்டையும் அழகாகவே செய்திருக்கிறார் மீரா ஜஸ்மின்.
இறுதியில் மம்முட்டியை கொலை செய்யும் நோக்குடிடன் செல்லும் மீரா ஜஸமின் மம்முட்டியினை கொலை செய்ய முடியாது மம்முட்டியின் கைகளுக்குள் சிறைப்படுவதுடன் படம் முடிகிறது.
பல கேள்விகளுக்கான விடைகளை ரசிகர்களிடமே விட்டிருக்கிறார் இயக்குனர். எனக்கு ஏதோ அது புத்திசாலித்தனமாகவே படுகிறது.
சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத உறவுகளுக்குள்ளும் உயிரோட்டமான உணர்வுகளும், காதலும் உண்டு அவையும் அங்கீகரிக்கப்பட்ட உணர்வுகளைப் போன்றவை அல்லது அதை விட ஆழமானவை என்று சொல்லிப் போகிறது இந்தப் படம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
.
அருமையான விமர்சனம். பலரும் பேசத் தயங்கும் விடயத்தை படமாக்கிய இயக்குனருக்கு பாராட்டு.
ReplyDeleteமிகவும் சிக்கலான உணர்வு காதல்.
காதல் யார் மீது வரும் எதற்காக வரும் எப்போது வரும் எல்லாமே கேள்விகள்?
ஒரு சாதாரண பெண்ணுக்கும் அசாதாரண ஆணுக்கும் இடையே உருவான உறவை பல கோணங்களிலும் பிச்சு பிச்சு ஆராயலாம்.
நிஜத்தில் நேரில் காணமுடியாத ஒரு நாயகனை திரையில் பார்க்கும் போது மிகவும் ஏக்கமாக இருந்தது என்னவோ உண்மை.
sownthary
நல்ல பதிவு.
ReplyDeleteவிமர்சனம் நன்றாயிருக்கிறது! கண்டிப்பாய் படத்தைப் பார்க்கிறேன்..
ReplyDelete