வாங்கய்யா வாங்க ..
வந்தீட்டீங்களா?
இனி வாசிப்பீங்க, அப்புறமா பின்னூட்டம் இடாமல் ஓடுவீங்க என்று நமக்கு நல்லாவே தெரியும்.
எனவே, இன்று பின்னூட்டம் இடாமல் நீங்கள் சென்றால் உங்கள் கணணிக்கு வைரஸ் அனுப்புவதற்கு ப்ரோகிறாம் பண்ணியிருக்கிறேன்.
எனவே கவனம்.. என்று இப்பொழுதே எச்சரி்கிறேன்.
சரி விடயத்துக்கு வருவோம்.
எனக்கும் கணிதப் பாடத்திற்கும் என்றும் வளமான உறவு இருந்ததில்லை அந்தக் காலத்தில். ஏன் இந்தக்காலத்திலும் தான்.
1977ம் ஆண்டு என்று நினைக்கிறேன். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலம்.
அப்போது நான் 7ம் வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். ஒரு முறை தவணைப் பரீட்சையில் கணிதப்பாடத்திற்கு செல்வகனேசன் ஆசிரியர் எனது தகுதிக்கு மேலதிகமாக, கணிதப் பாடத்திற்கு 17 புள்ளிகள் இட்டார்.
எனக்கு பாடசாலையில் மட்டுமல்ல வீட்டிலும் கண்டிப்பு அதிகமாய் இருந்த காலம் அது. எனது அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. தனது மூத்தவாரிசு பற்றி அவரிடம் எப்போதும் ஒரு நல்லபிப்பிராயம் இருந்ததில்லை. என்னை திருடனாக நினைத்தாரோ என்னவோ. அடி தாறு மாறாயும், அளவற்றும் விழும். நானும் பெரியமனதுடன் எதையும் தாங்கும் மனிதனாக மாறியிருந்தேன்.
பாடசாலையின் மதிப்பேட்டினை வீட்டில் கொடுத்து அப்பாவின் கையெழுத்து வாங்கிவரவேண்டும் என்பது பாடசாலை அதிபரின் கட்டளை.
கணக்குப் பாடத்தில் 70க்கு மேல் எடுக்கவேண்டும். அல்லது உடம்பு புண்ணாகிவிடும் என்பது எனது அன்புத் தந்தை இட்டிருந்த பேரன்புக் கட்டளை.
17 புள்ளிகளுடன் உடன் வீட்டில மதிப்பேட்டினை கொடுப்பது தற்கொலைக்குச் சமம் என்பதை எனபதை எனது தகப்பனாரின் முன்னைய அன்பான கவனிப்புக்களில் இருந்து நான் உணர்ந்திருந்தேன்.
மத்தளத்துக்கு இருபுறமும் அடிவிழுவது போன்று ஒரு புறத்தில் மகா கண்டிப்பான பாடசாலை அதிபர், மறுபக்கத்தில் எனது தந்தை செல்வமாணிக்கத்தார்.
இந்த இரண்டு பயங்கர மனிதர்களிடத்தில் இருந்தும் எப்படித் தப்பலாம் என்று பலமாய் சிந்தனையோடியது. இவர்களிடம் அகப்பட்டால் அடுத்த தவணைப்பரீட்சைக்கு நான் உயிரோடு இருக்கமாட்டேன், எனவே அவர்களிடம் அகப்படுவதைவிட வீட்டைவிட்டு ஓடிவிடலாம் போலிருந்தது. ஆனால் அப்படிச் செய்யவும் துணிவற்றிருந்தேன்.
பலமாய் யோசித்த போது ஒரு புதிய யோசனை உதித்தது.
மெதுவாய் ஒரு பேனையை எடுத்து 17 என்றிருந்ததை 77 என மாற்றினேன். சிறுவயதில் திருட்டினை ஒழுங்காக செய்யமுடியவில்லை. தேவைக்கு அதிகமாகவே 7 என்பதை சற்று அழுத்தி எழுதியிருந்ததை அப்பா கண்டார்.
டேய்! என்னடா மாத்தியிருக்கிற மாதிரியிருக்கு என்றார்.
நான் இல்யே என்றேன் அப்பாவியாய்.
எனது தகப்பனார் தனது போலீஸ் மூளையைப் பாவித்து அனைத்துப் பாடங்களினதும் கூட்டுத் தொகையைப் பார்த்தார். அது 60 ஆல் பிழைத்தது.
அதன் பின் என்ன நடந்தது என்பது, ஒரு சோகமான கதை. அது வாழ்க்கை கற்பித்த மிகச் சிறந்த பாடங்களில் ஒன்று.
இன்று இணையத்தில் வலம் வந்த போது என்னைப் போல் கணிதத்தில் விற்பன்னராக இருந்த சிலரின் கணக்குகள் கண்ணில் பட்டது...
அதை உங்களுடன் பகிர்வோம் என்று நினைத்தேன்.. thats all.
இந்த பதிலை எழுதியவனுக்கு ”எக்ஸ்”சலன்ட் என்று எழுதிப் பாராட்டியிருக்கலாமோ?
.............................................................................
அடுத்தது
..............................
அடுத்தது...
................................
கடைசிக் கணக்கு
ஏதும் புரிந்ததா? புரியவில்லை என்றால் நீங்கள் என் கட்சி..
வாழ்க கணிதம்.
பின்னூட்டம் இடாது செல்வீர்களானால் வைரஸ் வரும்... கவனம்!
விசரன்னா என்ன அர்த்தம்னு எனக்குத்தெரியுமே! கமலஹாசன் "தெனாலி" படத்தில சொல்லிக் குடுத்திருக்கிறாருல்ல :)-
ReplyDeleteஆமா உங்க பயோடேட்டாவைக் காணோம்? அதக்காணாம நாங்க தவியாத் தவிக்குறோமுங்க.
என்ன புள்ள போங்க நீங்க, புரொக்றஸ் ரிப்போர்ட்ல அப்பா கையெழுத்து மாதிரி போடப் பழகலையா? பள்ளிக்கூடத்துல என்னத்தைப் படிச்சீங்க.
ReplyDeleteநானெல்லாம் இப்பவும் எங்கப்பா கையெழுத்தைப் போடுவேனில்ல.
டாக்டர்.. தெய்வம் அய்யா நீங்கள்.
ReplyDeleteஅப்பாவின் கையெழுத்தும் போடுவீங்களா?
அட அட அட...
அப்ப சீ. எம் கையெழுத்தும் வருமா? ராஜபக்சேக்கு ஒரு கடிதம் போடுவமா?
பி.கு: பயோ டேட்டாஅப்டேட் பண்ணியிருக்கிறேன்.