கொழும்பில் வெள்ளவத்ததைக்கு பின்புறமாக உள்ள கடற்கரை வீதியில்
ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தேன். ஒரு சந்தியில் இருந்த வீட்டு வளவுக்குள் காவலில் வைக்கப்பட்டிருந்தார் நம்மட பிள்ளையார்.
சிறிய கோயில் மாதிரி பில்ட்அப்பும் கொடுத்திருந்தார்கள். பிள்ளையாருக்கும் டெர்ரரிஸ்ட் அட்டாக் நடக்கும் என்ற பயத்தில் மதில் எல்லாம் கட்டி மிகவும் பாதுகாப்பாய்த் தான் வைத்திருந்தார்கள் ஆனால் துணைக்குத்தான் எவருமிருக்கவில்லை. ஒரு சொறி நாய் மட்டும் நித்திரையில் பிள்ளையாருக்கு பாதுகாப்பு தந்துகொண்டிருந்தது.
திருநீறு, சந்தனம் இத்தியாதி எல்லாம் முன்னுக்கு இருந்தது. பெரிதாய் ஒரு உண்டியலும் அதில் ஒரு மஞ்சல் துணி கட்டி அதன் முக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தியிருந்தார்கள்.
ஏதோ .. ஒரு உணர்ச்சிவசப்பட்ட பக்தனின் வீடாக்கும் என்று நினைத்தபடியே கடந்து போனேன். (இது நடந்த போது ஒரு மதியம் 2-3 மணியிருக்கும்).
மாலை மீ்ண்டும் அதே வழியால் போன போது அந்த இடம் பரபரப்பாய் இருந்தது. அழகாகக் கூட்டப்பட்டு, தண்ணீர் தெளித்து, காவலுக்கிருந்த நாய் கலைக்கப்பட்டு பக்தி, முத்திக்கொண்டிருந்தது.
சிலர் வந்து கும்பிட்டு போனார்கள், வந்தவர் சிலர் மதிலோரமாக நின்றுகொண்டார்கள், கூட்டம் கூடத்துவங்கியது. மணியடித்தார்கள், தீபம் காட்டினார்கள்
எனக்கு இது புதினமாயிருந்தது. கூத்தைப்பார்ப்போம் என்றால் நேரம் போதாதிருந்தது.
மாலை, மெதுவாய் விடயத்தை எடுத்துவிட்டேன் சற்று சாமிப்போக்காய் இருக்கும் எனது அக்கா ஒருவரிடம்.
டேய் அது விசா பிள்ளையார்டா... எனக்கு முதலில் விசர்ப் பிள்ளையார் என்று தான் கேட்டது.. பிறகு தான் விசயம் விளங்கியது
இப்ப அவர்ட கோயில் தான் இந்த ஏரியாவிலயே விஷேசமான கோயில் என்றும்.
தினமும் காலையும், மாலையும் பயங்கரமாய் கூட்டம் அலைமோதும்
மாதத்தில் ஒரு நாள் விசேட பூஜை நடக்கும்
ரெண்டாயிரம் ரூபா தாளில் மாலை போடுவார்கள்
சிங்களவர்களும் வந்து கும்பிடுவார்கள்
என்றும் கோயிலின் வீக்கீபீடியா தகவல்களைச் சொன்னார்.
உந்த பிள்ளையார் சும்மா தான் இருந்தவர்.. ஆனா திடீர் என்று ஆக்களுக்கு விசா விடயத்தில அருள் குடுத்ததால இப்ப அவருக்கு விசா பிள்ளையார் என்று பேர் வைச்சிருக்கிறாங்கள் என்றும் சொன்னார். பிள்ளையாரப்பா! நமக்கும் அந்த விசா எடுக்குற டெக்னிக்க சொல்லக்கூடாதா? நானும் ஏதோ நாலு காசு பார்க்கலாம்.
பிள்ளையார் இருக்கும் வீட்டக்காரர்தான் பூசாரியாம். டக் டக் என்று விசா கிடைக்குதாம்.. (சப்பா.. தாங்க முடியலியே) என்றவர்
இதே மாதிரி யாழ்ப்பாணத்திலயும் ஒரு பிள்ளையார் இருக்கிறார் என்றும் அவருக்கு வெளிநாட்டு பிள்ளையார் என்று பெயராம்.. அவரும் பயங்கர பேமஸ்சாம் என்று நம்ம பிள்ளையாரின் பிராஞ்ச் ஒபிஸ் பற்றியும் விளக்கம் தந்தார்.
மீண்டும் மாலை 9 மணிபோல் விசா பிள்ளையாரை கடந்து போகும் போது ஒரு வயதானவர் கண்மூடி.. பயங்கரமாய் கும்பிட்டுக் கொண்டிருந்தார்
என்னடா இது வில்லங்கமா போச்சு.. இந்த வயசிலயும் வெளி நாடு போக விரும்புகிறாறோ அப்பு..(ஏர்போட் வரை கூட தாங்கமாட்டார் போலிருந்தார் அவர்)
என நினைத்தது மனம்
பிறகு மீண்டும் பிள்ளையாரின் பெயர் ஞாபகம் வர... எனது சந்தேகம் தீர்ந்தது..
பெரிசு விசா தான் கேட்குது ஆனால் வெளிநாட்டுக்கு அல்ல....வேற இடத்துக்கு என்று.
விசா பிள்ளையாரே! நான் உன்னை நக்கல் பண்ணியதாக நினைத்து எனது விசாவை ரத்துப்பண்ணிவிடாதே
நீ அப்படி செய்தாலும் ..... இருக்கவே இருக்கிறது யாழ்ப்பபாணத்தில் வெளிநாட்டுப் பிள்ளையார் கோயில்.
புரிந்ததா மை லோட்?
பிள்ளையாரை நக்கல் பண்ணுகிறேன் என்று சொல்லி கீபோர்ட்ஐ தூக்காதீர்கள்.. திட்டுவதற்கு. எனது பிள்ளையார் இப்படியானவர் அல்லர். சந்திலே சிந்து பாடி காசு பார்க்கும் மனிதரல்ல அவர். நான் கண்ட யதார்த்தத்தை சற்று நகைச்சுவை கலந்து பதிந்தேன் அவ்வளவு தான்.
வாழ்க லோட் கணபதி
.
naan 1st?
ReplyDelete//என்றும் கோயிலின் வீக்கீபீடியா தகவல்களைச் சொன்னார்.//
ReplyDeleteநல்லா சொன்னீங்க...