கொலைஞர்கள் பலவிதம்
தூரமான தேசத்தில்
என் நாட்டில்
நகரத்தில்
ஊரில்
வீட்டிலும் இருக்கலாம்
காற்றைப் போல் 
எங்கும் அலைகிறார்கள்
தொடர்ந்து வருகிறார்கள்
அன்பே
தோழா 
டேய் மச்சி 
என்ட ஊரான்
என்கிறார்கள் 
அப்பப்பா
கொலைக்களங்கள் பார்த்து
அலுத்துவிட்டது
நான்
காயப்பட்டிருக்கலாம்
ஆனால் 
கொலையாகவில்லை
இது புரியாமல்
என்னைக் கொலை செய்த
மகிழ்ச்சியில்
அவர்கள்....
பாவம்.
அவர்களால்
முடியாது
முடியவேமுடியாது
. 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
கவிதை அருமை.......வாழ்த்துகள்
ReplyDelete