எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம்

நான் பெரிய வாசகனோ, விமர்சகனோ இல்லை ஆனால் சராசரி வாசன் என்றால் தவறில்லை. ஓஸ்லோவில் ஒரு தமிழ்க் கடையில் ஒரு ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்த பழைய புத்தகங்களுக்கடையில் இருந்து (பல தடவைகள் விலை குறைக்கப்பட்டும் விற்பனையாகாத) எடுக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் எழுத்தாளரைப்பற்றிய அறிமுகம் இது. இவரைப் பற்றி அறியாமல் இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறேன் என்பதை நினைத்தால் வெட்கமாய் உள்ளது. கூர்மையான பார்வையுடன், இலகு தமிழில், நகைச்சுவை உள்ளடக்கி, யதார்த்தம் உணர்த்தி, சமுதாயச் சீர்கேடுகளை சாடும் ஈழத்து எழுத்தாழனை இப் புத்தகம் படிக்கும் வரை அறிந்திராதது நான் வெட்கப்படவேண்டியதொன்று தான் அவரைப்பற்றி விமர்சிக்க முன் வாசிப்பு....... இந் நாட்டிற்கு வந்தபின் எமது வாசிப்பின் அளவும், அதன் தரமும் மிக, மிக குறைந்து விட்டது என்பது எனது கருத்து. அதுவும் எமக்கு கிடைக்கும் புத்தகங்களின் தரங்களைப் பற்றி கூறத்தேவையில்லை. உதாரணமாக இந்நாட்டில் என்ன புத்தகம்-இதழ்கள் இலகுவாகக் கிடைக்கும்? இரண்டாம,; மூன்றாம் தர நாவல்கள், ஆனந்தவிகடன், குமுதம், சினிமா, இது தவிர ”மஞ்சல் புத்தகம்” முத்திரை குத்தக் கூடிய தரமற்ற பல தென் இந்திய புத்தகங்கள்-இதழ்களைத்தான் தமிழ்க் கடைகளில் தொங்கவிட்டிருப்பார்கள். ஆதைத்தான் நாமும் வாங்குகிறோம். ஏமக்கு எது கிடைக்கிறதோ அதை வாங்கவேண்டிய நிர்பந்தமான நிலை எமக்கு. இதன் காரணமாக எமது வாசிப்பின் தரமும் அப்புத்தகங்களைப் போலவே இருக்கவேண்டிய நிலையிளுள்ளது. ஜோதிகாவுக்கு வண்டி வைத்திருக்கா? அவ எத்தனை கிலோ கூடியிருக்கிறா?, விஐய்க்கு யாருடன் காதல்? ரஐனியின் அடுத்த படம் என்ன? இவைபற்றித்தான் நாம் அறியமுடியுமே தவிர வேறு பல விடயங்களை அறியும், ஆராயும் சந்தர்ப்பம் மிகக்குறைவு. நான் குமுதம், ஆனந்தவிகடன் போன்றவற்றின் தரத்தை குறைகூறவரவில்லை. இவ்விதழ்களில் வெளிவந்த ”வந்தார்கள் வென்றார்கள்” ”மனசெ ரிலாக்ஸ்;” போன்ற பகுததிகள் இவ்விதழ்களுக்கு ஓரளவு தரத்தைத்தருகின்றன. ஆனால் அந்தோனி ஐpவா, செங்கை ஆழியான், வரனியூரான் போன்ற பெயர்களை இந்நாட்டிற்கு வந்தபின் கேட்கவோ பார்க்கவோ முடிந்ததில்லை தவிர தென்னிந்நதிய எழுத்தாளர்களை, கவிஞர்களை துக்கிப்பிடித்தும், ஈழத்து எழுத்தாளர்களை ஏளனமாகப் பார்க்கும் தன்மையும் எம்மிடையே உள்ளதை வேதனையுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சில வரவேற்கத்தக்க மாற்றங்கை எமது புலம் பெயர் இலக்கிய வட்டத்தில் அவதானிக்கக் கூடயதாகவுள்ளது. அதாவது புலத்தில் எம்மவரால் ஆரோக்கியமான ஈழத்து-இலக்கிய, சமூகசிந்தனை, பொழுதுபோக்கு படைப்புக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எம்மவரின் பொருளாதார வளர்ச்சியும் இதற்கு ஒரு முக்கிய காரணி என்றே கூறலாம். ஆனால் எண்பதுகளின(1980); இறுதியில், தொண்ணூகளின்(1990) ஆரம்பத்திலும் இப்படியானதோர் வளர்ச்சிக்கான அடையாளம் தோன்றி மறைந்ததையும் நாமறிவோம். அதற்கான முக்கிய காரணியாக எமது பொருளாதார நிலையும் இருந்தது என்பதில் ஐயமில்லை தவிர இலக்கிய வட்டத்தினிடையே சகிப்புத்தன்மையின்மையும், அதிகாரப் போட்டியும், அரசியல் பேதங்களும் எமது இலக்கிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தன. ஆனால் இன்றோ இந் நிலை ஓரளவு மாறி புலம் பெயர் இலக்கியம் ஓரளவு புத்துணர்ச்சியுடன், இளசுகளையும் உள்ளடக்கி வளரும் நிலையில் உள்ளது. இதற்கு உதவும். எமது பாரம்பரீயத்தை, மொழியை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அதை மேலும் வளர்ப்பதும் தமிழர்களாகிய எமது கடமையாகும். எழுத்தாளர் திரு. ஆ. முத்துலிங்கத்தின் ”அங்கே இப்ப என்ன நேரம்” புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்: கதை: கனடாவில் வீடு: குளிர் காலத்தில் ஒரு நாள், வெளியில் மைனஸ் 20.... திரு முத்துலிங்கத்தின் வீட்டில் எரிவாயு, மின்சாரம் இல்லாமல் போகிறது. அதற்குப்பின் என்ன நடந்தது என அவர் எழுதுகிறார். வெளியே -20 டிகிரி என்றால் உள்ளேயும் குளிர் உதறியது. உள்ளாடை, மேலாடை, வெளியாடை என்று மடிப்பு மடிப்பாக அணிந்திருந்த போதும் குளிர் தாங்கமுடியவில்லை. தட்ப வெப்ப நிலை முள் சரசரவென்று பங்குச்சந்தை போல கீழே சரிந்தது. பார்த்தால் ஹீட்டர் வேலை செய்யவில்லை. எரிவாயுவை வெட்டி விட்டார்களோ, அல்லது மெசினில் ஏதும் குறைபாடோ குளிர் ஏறிக்கொண்டே போனது. உடனே அவசர நம்பரை தொடர்பு கொண்டேன். மறுமுனையில் நீங்கள் பேசுவது புரியவில்லை எனக் கத்தினார்கள். அதற்குக் காரணம் இருந்தது. என் சொண்டுகள் விறைத்துவிட்டன. ஆவை ஒத்துழைக்காததால் நான் பேச உத்தேசித்திருந்த வசனங்கள் வேறு வசனங்களாக வெளியே வந்தன. நாங்கள் நடுங்கிக்கொண்டிருக்கிறோம் என சத்தம் வைத்தேன். பலமணி நேரம் கழித்து எரிவாயு கம்பனியில் இருந்து பூமி அதிர மிதித்து நடந்தபடி ஒருத்தர் வந்தார். பெருத்த வயிற்றின் நடுவில் பூமியின் மத்திய ரேகை மாதிரி சுற்றியிருந்த பெல்ட்டில் பலவிதமான ஆயதங்களை அவர் தரித்திருந்தார். அவர் நடக்கும் போது அவை மணிகள் போல அசைந்து சப்தித்தன. வந்தவர் மூச்சு வீச ஆராய்ந்தார். பிறகு அப்படியே மல்லாக்கக் சரிந்து விட்டார். நாலு மணிநேரம் படுத்து வேலையை முடித்து உருண்டு பிரண்டு எழும்பினார். அதற்குப் பிறகு தான் எங்கள் ரத்தம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அவர் தந்த பில்லை பார்த்த மறு கணமே நான் மலைத்துவிட்டேன். இரத்தம் கொதித்தது. அதை முதலே செய்திருக்கலாம். திருத்த வேலைகளை செய்யாமலே ரத்தம் சூடாகியிருக்கும். ..................................................................................................................... கதை: கனடாவில் சுப்பர் மார்க்கட்: எமது படைப்பாளி கனடாவில் ஒரு கடையில் காசு கொடுக்கும் வரிசையில் நிற்கிறார் அப்போது. அவரின் முறை வருகிறது.. அவர் எழுதுவதைப் பாருங்கள் நான் பொருட்களைத் தூக்கி ஓடும் பெல்ட்டில் வைத்தேன். பக்கட்டுக்கள் பட்டாள (ராணுவ) வீரர்களைப் போல நின்ற நிலையிலே போயின, போத்தல்கள் உருண்டன, டின் உணவு வகைகள் துள்ளிக் கொண்டு நகர்ந்தன, அவளுடைய திறமையான விரல்கள் மெசினில் வேகமாக விளையாடத் தொடங்கின. லாவகமாக சாமான்களைத் தூக்கி மந்திரக் கோடுகளைக் காட்டியதும், மின் கண்கள் அவற்றை நொடியிலே கிரகித்து விலைகளைப் பதிவு செய்தன. ஒவ்வொரு பொருளும் டிங் என்ற தாள கதியுடன் ஒலி எழுப்பி மறுபக்கம் போய்ச்சேர்ந்தது. அந்த அசைவுகள் பெயர் போன ரஸ்ய நடனம் போல ஓர் ஒயிலுடன் நடந்தேறின..................................................................................................................... அவரது கதைகளில் அவர் பல சமுதாயச் சீர்கேடுகளை சாடுகிறார். உதாரணமாக: ஒரு பக்கத்தில் சிறந்த கலாச்சார பதிவுகள் நடைபெறுகின்றன. மறு பக்கத்தில் அர்த்தமற்ற சம்பிரதாயங்களும், மூடநம்பிக்கைகளும் சிலர் வாழ்வி;ல் பரவிக்கிடக்கின்றன. கிணற்றுத் தவளைகள் எங்கேயும் உண்டு. ஆனால் கனடாவுக்கு வந்த தவளைகள் இங்கே கிணறறையே வெட்டிவிட்டது தான் ஆச்சரியம். .......................நேத்தியடி என்றால் இது தானோ இன்னொரு இடத்தில்.............. இங்கே எத்தனை விதமான மக்கள் வாழ்கிறார்கள்; எத்தனை வகையான கலாச்சாரங்கள் வரவேற்கத்தக்க அம்சங்களுடன் பரவிக்கிடக்கின்றன. அவற்றிலே காணப்படும் மேன்மையான தன்மையும், எங்கள் கலாச்சாரத்தில் உள்ள உயர்ந்த அங்கத்தையும் கலந்து ஒரு உன்னத புது கலாச்சாரத்தை உண்டு பண்ணலாமே. எப்படிப்பட்ட மகத்தான சந்தர்ப்பம்! அவற்றை எல்லாம் விட்டுவிட்டு பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து மூடத்தனமான பழைய சம்பிரதாயங்களை இங்கேயும் இறக்குமதி செய்ய வேண்டுமா? இன்னொரு இடத்தில்.............. மூன்று ரேடியோக்கள் தமிழ் ஒலிபரப்புக்களை வழங்குகின்றன. தொலைக்காட்சியும் இருக்கிறது. சினிமா, வீடியோ, சீடி படங்களுக்கும் குறைவில்லை. புத்தகங்களைப் பற்றி செல்லவே வேண்டாம். சென்னையில் காணப்படும் அவ்வளவு மலிவுகுப்பைப் புத்தகங்கள் இங்கேயும் ஒரு டொலர் காசுக்கு கிடைக்கும். வாஸ்து சாஸ்திரம், சோதிடம், கல்யாண தரகுவேலை, கம்புயூட்டரில் சோடி சேர்த்தல், எண் சோதிடம் எல்லாம் செழித்து வளர்ந்திருக்கின்றன................ இவரின் எழுத்துக்கள் சிந்திக்கத் தூண்டுபவை...... அங்க இப்ப என்ன நேரம் புத்தகத்தை நெட்டில் படிப்பதை விட, வாங்கி வீட்டில் வைத்திருந்து படியுங்கள்….இது புத்தகமல்ல பொக்கிஷம்.. சஞ்சயன் 31.03.06