பிரபாகரன் மாவீரனா?


நேற்று மாலை சமூக ஆய்வாளர் B. A Kathar மாஸ்டரின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளக்கிடைத்தது. எனக்குள் இருந்த சில கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களை கொண்டிருந்தார் அவர்.  புலிகளின் தியாங்கள் மறைக்கப்படுவதோ, மறக்கப்படவோ கூடாது என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. தவிர விடுதலைக்கு வித்திட்ட அனைவரினதும் சார்பில் சிறுபான்மை இனத்தவர்கள் இணைந்து  தற்கால, இடைக்கால, நீண்டகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது எமது கடமை என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. நுனிப்புல் மேயும் அரசியல்வாதிகள் சமூக ஆய்வாளர் B. A Kathar  போன்ற புத்திஜீவிகளிடம் இருந்து கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதே எனது கருத்து.

கார்த்திகை 26 ம் திகதி உள்ளடக்கிய வாரம் வருகிறது. அவ் வாரம் தமிழர்களிடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த திகதி என்பதை விட, மாவீரர்களின் வாரம் என்னும் அடையாளத்தையே கொண்டிருக்கிறது. ஏன் இந்த திகதியை தெரிவு செய்தார்கள் என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்தவர்களின் தியாகத்தை போற்றும் ஒரு நாளாகவே அதை நான் பார்க்கிறேன். எனினும் பல ஆண்டுகளாய் என் மனதை நெருடும் ஒரு விடயமும் அதில் அடங்கியுள்ளது.

மாவீரர்கள் என்பதனை வரையறை செய்பவர்கள் யார்? விடுதலைப் புலிகளா? அப்படியாயின் ஏன் இன்னும் தமிழனின் விடுதலைப்போராட்டத்தை உலகெங்கும் அடையாளப்படுத்திய பிரபாகரனுக்கும் அவரது தளபதிகளுக்கும் ஏன்  இன்னும் மாவீரர் பட்டம் சூட்டப்பவில்லை? என்னைப் பொறுத்தவை விடுதலைப்புலிகளின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் இணையானவர்கள் எங்கும் இல்லை என்பதே எனது கருத்து. அவர்களின் அரசியல், சமுதாய அணுகுமுறைகளில் எனக்கும் மற்றும் பலரைப் போலவே  விமர்சனங்கள் இருக்கின்றன. அது வேறு, அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் மதிப்பது வேறு.

மாவீரர்கள் என்னும் பதத்தினை தமிழ்பேசும் இலங்கையர்கள் நாம் நான் வரையறுக்கவேண்டும். எம் இனத்தின் விடுதலைக்கு வித்தான அனைவரும் எனது பார்வையில் மாவீரர்களே.  *சிவகுமாரனில் இருந்து இறுதியாய் முள்ளிவாய்காலில் சாய்ந்த கடைசித்தோழன் வரையில் அனைவரும் இதற்குள் அடங்குவர். விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பத்தில் விடுதலைக்கு தங்களை அர்பணித்தவர்கள் எவராய் இருந்தாலும், எந்த இயக்கத்தை சேர்ந்தவராய் இருந்தாலும், எந்த கொள்கைளை பின்பற்றியவராக இருந்தாலும் அவரின் இலட்சியம் தமிழ்பேசும் மக்களின் விடுதலையாய் இருந்தது. எனவே அவர்களும் மாவீரர்களே.

சகோதர யுத்தங்களினால் எம்மை நாமே அழித்துக்கொண்ட போது கொலையுண்டவர்களுக்கு துரோகி பட்டம் சூட்டுவது எந்த வகையில் நியாயமாகிறது? எமது விடுதலைப்போரின் இநத முடிவுக்கு முக்கிய கா‌ரணமாய் அரசியல் சாணக்கியத்தனமின்னை கூறப்படுகறது. விடுதலையின் மீது பற்றுடன் தூரப்பார்வையுடன் அரசியல் பேசிவர்கள் என்னவானார்கள் என்று எமக்குத் தெரியும். அவர்கள் துரோகிப்பட்டம் சுமத்தப்பட்டு இல்லாதொழிக்கப்பட்டார்கள்.  உண்மையில் அவர்கள் துரோகிகளா?  அவர்களின் குடும்பங்களின் வேதனைகளைப் பற்றி எப்போதாவது சிந்திருப்போமா? எட்டப்பன் என்றும், துரோகி என்றும் எள்ளி நகையாடி தூற்றித் தள்ளிய எமது இன்றைய நிலை என்ன? சக இயக்கங்கள் இல்லாதொழிக்கப்பட்ட போது  இல்லாது போன உயிர்கள் அனைத்தும் துரோகிகளா? சற்று நேரம் உங்கள் மனச்சாட்சியுடன் பேசிப்பாருங்கள் புரியும்.

ரணங்களை கிளருவது எனது நோக்கமல்ல. எனினும் தவறுகளை உணர்ந்து, திருத்தி, நிமிர்ந்து கைகோர்க்க வேண்டிய காலமிது. ஏனவே விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைவரும் மாவீரர்களே என அறிவிக்கவேண்டிய கடமை விடுதலைப் புலிகளின் அமைப்புக்களுக்கும். அவர்களின் போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு உண்டு. இவ்வாறான அறிவிப்பு பலரின் ரணங்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழர்களின் ஒற்றமைக்கு பலம் சேர்க்கும்.

கார்த்திகை 27ம் திகதியை தியாகிகளின் நாளாக ஒற்றுமையாய் கொண்டாடுவோம்.

பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட ஒரு கவிதையின் வரிகள் இது. நமக்கு எதையோ சொல்லிப்போகிறதாய் உணர்கிறேன்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிரினங்களும்
சூரியனைப் பார்த்து கையசைத்து மகிழும் போது
எமக்கு மட்டும் ஏனிந்த ஒளி வெறுப்பு
வாருங்கள் நாமும் கையசைத்து மகிழ்வோம்


 * சிவகுமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இவ் ஆக்கத்தை  வெளியிட்ட போது செல்வகுமாரன் என்று எழுதப்பட்டிருந்தது. பின்னூட்டம் ஒன்றில் இத் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பின்பு சிவகுமாரன் என்று மாற்றப்பட்டது.  (30.10.2011 - 06: 49 AM)

மரடோனாவின் கால்பந்தாட்ட இளவரசிகள்

Legg til bildetekst
இன்றைய நோர்வேஜிய பத்திரிகைகளில் ஒரு காலப்பந்தாட்ட அணியின் பயிட்சியாளர் அவ்வணியின் பெறு‌பேறுகள் சிறப்பாக இல்லாததனால் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார் என்று இருந்தது. இறுதியாட்டத்தில் அவரின் அணி 2-1 என்று ரீதியில் தோல்வியுற்றதால் அவர் மீது நம்பிக்கை இழந்திருந்தார்கள் அவரின் மேலதிகாரிகள். கால்ப்பந்தாட்ட உலகில் இது ஒன்றும் புதிதில்லை. தினமும் நடக்கும் விடயம் தான்.  இன்றைய பத்திரிகைச் செய்தியை வாசித்ததும் என் மனதில் நான் ஒரு காலத்தில் ஒரு அணிக்கு பயிட்சியாளனாக இருந்த காலம் நினைவிலாடியது. அது பற்றிய பதிவு தான் இது.

அப்போ 2003 - 20004 ம் ஆண்டுகளாக இருக்கலாம்.  ஒரு நாள் எனது மூத்த மகள் பாடசாலையில் இருந்து வந்து ”அப்பா உங்களுக்கு கடிதம்” என்று கடிதத்தையும் தந்து மடியிலும் குந்திக் கொண்டாள். கடிதத்தைப் படித்தேன். அதில் மகளின் வயதொத்தவர்களுக்காக ஒரு கால்ப்பந்தாட்ட அணி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அது பற்றி கலந்து பேச கால்ப்பந்து விளையாட விரும்பும் குழந்தைகளின் பெற்றோரை அழைத்திருந்தனர்.
நான் கடிதத்தை வாசித்து முடித்ததும் ”அப்பா நான் புட்போல் விளையாடப் போறேன்” என்றாள். எனக்கும் கால்ப்பந்துக்கும் மிகுந்த நெருக்கமிருந்தது. மரடோனாவைப் போல் விளையாட வேண்டும் என்று இப்போ‌தும் ஆசை இருக்கிறது. மகளின் வேண்டுகோள் மனதுக்குள் தேன் வார்த்தது. சரி விளையாடுங்க. நான் கூட்டத்துக்கு போய் என்ன சொல்கிறாகள் என்று பார்க்கிறேன் என்றேன்.  இப்படி சொன்னது தான் தாமதம் வீட்டுக்குள் இருந்த ஒரு பந்தை எடுத்து வந்து ”வா விளையாடுவோம்” என்றாள்.
எனக்கும் உசார் தொத்திக்கொள்ள விட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்தோம். பந்து பட்டு ஏதோ சரிந்து விழ, சர்வதிகாரி கத்த நின்று போனது எமது விளையாட்டு.

மறு நாள் குறிப்பிட்ட கூட்டத்திற்கு சென்றிருந்தேன். பலர் வந்திருந்தனர். உள்ளூர் விளையாட்டுக்கழகம் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. 7வயது பெண் குழந்தைகளுக்கு ஒரு கால்பந்து அணி உருவாக்குவது பற்றி பேசினார்கள். பலரும் அதை ஆமோதித்தனர். நானும் அமோதித்தேன். உள்ளூர் வினையாட்டுக்கழகம் சிரமதான முறையிலேயே இயங்கி வந்தது. பயிட்சியாளருக்கு வருட முடிவில் ஒரு பூச்செண்டு கொடுப்பார்கள் அதைத் தவிர எவ்வித கொடுப்பனவும் கிடையாது. எனவே பலரும் பயிட்சியாளர் வேலையை விரும்பி ஏற்பதில்லை.

பயிட்சியாளர் தெரிவு நடைபெற்றது. நான் அமைதியாய் இருந்தேன். எவரும் முன்வரவில்லை. உள்ளூர் விளையாட்க்கழகத்தின் தலைவர் எனது தொழிட்சாலையில் தொழில் புரிபவர். என்னைப் போலவே அவரும் கால்பந்தில் உலகத்தை மறக்கும் குணமுள்ளவர். எனது கால்பந்து ஆர்வத்தையும் அறிந்தவர். அத்துடன் என்னுடன் கால்பந்து விளையாடுபவர்.

சஞ்சயன் நீ பயிட்சியாளராக இருக்க தகுதியுள்ளவன். இப்போது நீயும் இந்து பதவியை ஏற்காவிட்டால் இந்த பெண்பிள்ளைகளுக்கான அணியை ஆரம்பிக்க முடியாது என்று கூறினார். அணி ஆரம்பிக்கப்படவில்லை என்று மகளுக்கு சொல்லி அவளின் மகிழ்ச்சியை கெடுப்பதா? பயிட்சியாளராக மாறி எனது ஓய்வு நேரங்களை இழப்பதா? என்று மனதைக் கேட்டேன். மனது மகளுக்கு சாதகமாய் பதில் சொல்லிற்று. சரி நான் பயிட்சியாளனாய் இருக்கிறேன் என்றேன்.

என்னிடம் 10 பந்துகளையும், 15 சிவப்பு நிற பயிட்சி அங்கிகளையும்,ஒரு விசிலையும் தந்து, கையைக்குலுக்கி வாழ்த்துச் தெரிவித்தபடி சென்றார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர்.

வீட்டுக்கதவை திறப்பதற்கு முதலே மகள் வாசலில் நின்றிருந்தாள். கையில் இருந்த பந்துகளைக் கண்டதும் துள்ளிக் குதித்தாள். நான் பயிட்சியாளனாதில் அவளுக்கு ஏகத்துக்கும் பெருமை. நாளை வகுப்பில் இதைச் சொல்வேன் என்றாள். அன்று தூங்க முன் நாளைக்கு  கால்பறந்து விளையாட சப்பாத்து, காலுறை, காலுக்கு பாதுகாப்பு கவசம், தண்ணீர்ப்போத்தல் போன்றவை வாங்கவேண்டும் என்று கட்டளையிட்டபடியே தூங்கிப்போனாள்.

எனது மனதுக்குள் மகள் கால்பந்தில் கில்லாடியாக வருவாள். உள்ளூர் கழகத்தில் விளையாடுவாள். பின்பு மாவட்ட, மாகாண அணிகளில் விளையாடுவாள்.  வளர்ந்ததும் நோர்வே அணிக்கு விளையாடுவாள் என்றெல்லாம் கனவு ஓடிக்கொண்டிருந்தது.

மறு நாள் சப்பாத்து வாங்க கடைக்குப் போன போது தொடங்கியது பிரச்சனை. தன்னுடைய அளவுக்கு எல்லா சப்பாத்தும் கறுப்பாய் இருக்கிறதே என்று அங்கலாய்த்தாள். நான் கால்ப்பந்து விளையாடும் சப்பாத்து கறுப்பு நிறம் என்றேன். ” என்ன நக்கலா” என்னும் தொனியில் என்னைப் பார்த்து ஒரு சிவப்பு நிற சப்பாத்தைக் காட்‌டி ” அப்ப இது என்ன?” என்றாள். அடங்கிக்கொண்டேன் நான்.  முன்றாவது கடைக்குப் போனோம் அங்கு அவளுக்கு பிடித்த விதத்தில் கறுப்பில் வெள்ளைக்கோடு போட்டு சப்பாத்து இருந்தது. விலையைப் பற்றி அவள் துளியேனும் கவலைப்படவில்லை. நீலமும் வெள்ளையும் கலந்த காலுறையும் வாங்கினாள். காலுக்கான பாதுகாப்பு கவசத்திலும் நிறம் தேடினாள். கிடைக்கவில்லை. முகத்தை தூக்கிவைத்தபடியே கடையில் இருந்ததை வாங்கிக் கொண்டாள்.

மறு நாள் 2ம் வகுப்பு பெண்பிள்ளைகள் எல்லோருக்கும் பயிட்சிகள் நாளை முதல் ஆரம்பம் என்று கடிதம் எழுதி மகளின் வகுப்பில் கொடுத்துவிட்டேன். புதிய காட்சட்டை, சப்பாத்து ஆகியவற்றை வீட்டிலேயே போட்டுப் பார்த்தாள். சர்வதிகாரிக்கு தெரியாமல் சிறிது நேரம் விளையாடினோம். சிறுது நேரத்தின் பின் இளைய மகளுக்கு மூத்தவள் பந்தடிக்கப் ப‌ழக்கிக் கொண்டிருந்தாள். என் மனம் பெருமையில் மிதந்து கொண்டிருந்தது.

மறு நாள் ஐந்து மணிக்கு பயிட்சிகள் ஆரம்பிக்கவிருந்தன. நானும் மகளும் 4:30 மணிக்கே மைதானத்தில் இருந்தோம். வாகனத்தால் இறங்கியவள் புல்லில் உட்காந்துகொண்டே ”அப்பா சப்பாத்தை போட்டு விடுங்கள்” என்றாள். அவளை தயார்படுத்தி முடியும் போது மேலும் இருவர் வந்தனர். அவர்களுடன் ஊஞ்சலுக்கு ஓடிப்போனாள் மகள். பந்தைப்பற்றி அவர்கள் கவனிக்கவே இல்லை.வந்திருந்த பெற்றோர்கள்  சிரித்தார்கள் நானும் அசடு வழிந்தபடியே சிரித்தேன்.

5 மணி போல் மேலும் சிலர் வர பயிட்சிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கை  6 ஆக இருந்தது. விசிலை பெரிதாய் ஊதி எல்லோரையும் அழைத்தேன். எலலோரும் வந்தார்கள் மகளைத் தவிர. அருகில் போய் அழைத்தேன். அப்புறமாய் வருகிறேன்என்றாள். உடனடியாக வருகிறாய் அல்லது உங்களை விளையாட்டில் சேர்க்க முடீயாது என்றேன். வந்தாள்.

பயிட்சியின் போதான விதிமுறைகளை விளக்கிய பின் பயிட்சினை தொடங்கினோம். எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில நாட்கள் வரப்போவதை உணராமல் பயிட்சி முடிந்ததுக் கொண்டோம். வீடு வந்ததும் ”சப்பாத்தைக் கழட்டி விடுங்கப்பா” என்றாள். எதிர்கால நோர்வே நாட்டு வீராங்கனைக்கு இல்லாத உதவியா என்று நினைத்தபடியே களட்டிவிட்டேன். அன்று மாலை முழுவதும் கால்பந்து பற்றியே பேசினாள். நானும் கனவுகளுடன் தூங்கிப்போனேன்.

அடுத்த பயிட்சிநாள்  இன்று மொத்தமாக 8 பெண்குழந்தைகள் வந்திருந்தார்கள். ஆனால் எனது விசில் சத்தத்தை அவர்கள் மதிப்பதாய் இல்லை. பல முறை ஊதியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலிருந்தது அவர்கள் செய்கை. இறுக்கமான குரலை வரவழைத்துக்கொண்டு எச்சரித்தேன். வந்தார்கள். பந்துகளை காலால் தட்டியபடியே ஓடுங்கள் என்றேன். முயற்சித்தார்கள். பந்து இவர்கள் தட்டியதும் தறி கெட்டு உருண்டோடியது. அவர்கள் பின்னால் ஓடினார்கள். ஆனால் ஒருத்தி மட்டும் மிகவும் திறமையாக பந்தினை கையாண்டாள். அவளிடம் கால்பந்து விளையாடுவதற்கான அசாத்திய திறமையிருந்ததை கண்டுகொண்டேன்.

சிறுது நேரத்தில் இரு அணிகளாக பிரித்து விளையாடவிட்டேன். முன்பு குறிப்பிட்ட பெண் குழந்தை ஏனையவர்களின் காலில் பந்தை படவிடாமல் தனியேயே விளையாடி கோல் அடித்தாள். அவள் மட்டும் 4 - 5 கோல் அடித்ததும் தோல்வியுற்ற அணிக்கு பந்துக்காப்பாளராக நான் நின்று கொண்டேன். அப்போதும் அவள் 2 கோல் அடித்தாள். அன்றில் இருந்து எல்லோரும் அவளின் அணிக்கே வெல்ல விரும்பினர். மகள் வீட்டிலேயே தன்னை அவளின் அணியில் விடும் படி கட்டளையிட்டாள். அவளின் விருப்பம் நிறைவேறாத நாட்களில் சண்டைபிடித்தோம். அவள் அழுதாள். நான் மனவருத்தப்பட்டேன்.

இதற்குப் பின்பான ஒரு நாள் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடைபெற்று கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்த கொள்ள விரும்பினார்கள் எனது அணியினர்.  அணிக்கு உடை தேவைப்பட்டது. விளையாட்டுக்கழகம் பழைய உடைகளை தந்தது. எனது அணியில் இருந்த அழகிகளுக்கு அவை அசிங்கமாக தெரிய, அதை உடுக்கமாட்டோம் என்று போராட்டம் ஆரம்பித்தார்கள். நண்பர் ஒருவர் ஒரு பெரிய கம்பனி வைத்திருந்தார். அவரிடம் எமது அணிக்கு உடைகள் ஸ்பான்சர் பண்ண முடியுமா என்றேன். அணியின் பெயர் கேட்டார். ”இளவரசிகள்” என்றேன். அவர்களுக்கில்லாத உதவியா என்று அன்று மாலையே 10 கால்சட்டைகளும், மேலுடைகளும் தந்துதவினார். (எனது வேலையில் இருந்து அவருக்கு சில கண்ட்ராக்ட்கள் என் மூலமாக போயிருக்கின்றன என்பது இளவரசிகளுக்கு தெரியாது).

அடுத்து வந்து சனிக்கி‌ழமை கால்பந்து சுற்றுப்போட்டி நடைபெறவிருந்தது. மகளின் உட்சாகத்திற்கு அளவில்லை. கனவில் கோல் அடித்துக் கொண்டிருந்தாள். சனி காலை மிகவும் நேரத்துடன் எழும்பினாள் மகள். என்னையும் விட்டுவைக்கவில்லை. குடும்பம் சகிதமாய் புறப்பட்டு மைதானம் சென்றடைந்தோம். எமது அணிக்கான சீருடையில் இளவரசிகள் நின்றிருந்தார்கள். ஒரு படம் எடுத்துக் கொண்டோம்.

முதலாவது போட்டியில் தோல்வி. இரண்டாவதும் தோல்வி. இளவரசிகளுக்கோ இதைப் பற்றிய கவலையில்லை. பெற்றோரிடம்  பணம் பெற்று நொறுக்குத் தீனியில் உலகத்தை மறந்திருந்தனர். நானும் பல வியூகங்களை அமைத்து விளையாட வைத்தேன். எனது வியூங்கள் எல்லாமே தோற்றுப் போயின.

அடுத்த வாரமும் ஒரு கால்ப்பந்து சுற்றுப்பொட்டியில் கலந்து கொண்டோம். அங்கும் படு தோல்வி. அதையிட்டு எவரும் கவலைப்படவில்லை. பெற்றோர்கள் நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள் என்று குழந்தைகளை பாராட்டியபடியே கலைந்து போனார்கள். இது வரை நாம் ஒரு கோல் ஆவது அடிக்காதிருந்தது எனக்கு அவமானமாய் இருந்தது. அடுத்து வந்து சுற்றுப் போட்டியில் 0 - 0 என்று முடிவு வந்தது. இது எமக்கான வெற்றி என்று இளவரிகளை தெம்பூட்டினேன். அடுத்து வந்த போட்டியில் 2-1 என்ற விகிதத்தில் தோற்றோம். ஆனால் ஒரு கோல் அடித்த மகிழ்ச்சியில் இளவரசிகள் தோல்வியை மறந்து போனார்கள். நானும் தான்

இன்றைய பத்திரிகைச் செய்தியில் 2-1 என்று தோல்வியுற்றுமையினால் பதவியை இழந்து பயிட்சியாளர் போன்று எனது பயிட்சியாளர் பதவியும் 2-1 என்று ரீதியில் தோல்வியை சந்தித்த பின் இல்லாது போயிற்று. நாஎனது பயிட்சிக் காலத்தில் ஒரு கோல் ஆவது அடித்தோமே என்று மனதை தேற்றிக் கொண்டேன்.  ‌அதன் பின் மகளுக்கும் கால்பந்து ஆர்வம் போய் கராட்டி ஆர்வம் வந்திருந்தது. இப்போதெல்லாம் மகளின் கால்பந்து அணியின் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் ஏதோ ஒரு ஏக்கம் சுழ்ந்து கொள்கிறது. இனிமேலும் அவள் கால்பந்து வீராங்கனையாக உருவாக சந்தர்ப்பம் இருக்கிறது என்று என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன். அதிலும் ஒரு சுய இரக்கம் கலந்த சுகமிருக்கிறது.

இன்றைய நாளும் நல்லதே!

இரண்டு முருகபக்தர்களும் ஒரு விசரனும்


அப்பாவின் நெருங்கிய நண்பர், பெயர் கந்தப்போடியார். மட்டக்களப்பில் உள்ள சித்தாண்டி என்னும்  கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தம்பியும் நானும் வைத்த பெயர் சித்தாண்டி-அப்பு (காரண இடுகுறிப்பெயர்). அம்மாவும், அப்பாவும் அவரை போடியார் என்றே அழைத்தனர்.

உருண்டு திரண்ட தேகம், மங்கிய வேள்ளைவேட்டி, சந்தனம் புசிய, வெறுமனேயான மேல் உடம்பு, காதிலே சிவப்புக் கடுக்கன், வெற்றிலைப் பெட்டி, அவ்வப்போது வாயில் சுருட்டு, வாயிலே முருகன் தேவாரம் இது தான் சித்தாண்டியப்பு. காசைக் கூட வேட்டியில் தான் முடிந்து வைத்திருப்பார். தமிழ் படங்களில் வரும் பண்ணையார்கள் மாதிரி இருப்பார் அவர்.

இவருடனான எனது நினைவுகள் எனது 10 - 1 1 வயதில் இருந்தே ஆரம்பிக்கின்றன. அவரிடம் வெற்றிலை கேட்டால் ”நீ சின்னப்பிள்ளை கூடாதுடா தம்பி” என சித்தாண்டித்தமிழில்* சொல்லி வெற்றிலைக்காம்பை மட்டுமே தருவார்.

எக்கச்சக்கமான பிள்ளைகள், வயல், காணி, வீடு, பண்ணை மாடுகள்… இப்படி எல்லாமே எக்கச்சக்கம், அவருக்கு. நாம் பிபிலையில், அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் திடீர் திடீர் என தோன்றுவார், சில நாட்கள் தங்கியிருப்பார் பின்பு திரும்பிவிடுவார். அவர் வீட்டிற்கு சென்றால் உபசரிப்பாலேயே தனது அதீத அன்பைக் காட்டுவார். அவ்வளவு அன்புத் தொல்லை.

எனது தந்தையார் ஒரு மிகவும் பயங்கரமான முருக பக்தர். சித்தாண்டியப்புவும் அப்பாவுக்கு சளைத்தவர்ரல்லர். ஒரு முறை பிபிலையில் இருந்து அப்பாவும், சித்தாண்டியப்புவும் கதிர்காமம் நடந்து போனதாக ஞாபகம் இருக்கிறது. காட்டில் யானையைக் கண்டதாகவும் நெருப்பெரித்து பந்தம் காட்டி யானையை துரத்தினார்களாம் என்று சொன்னார் சித்தாண்டியப்பு.


நான் 4 - 5 வயதாக இருந்த காலங்களில் ஏறாவூரில் வசித்திருந்தோம். அப்போ எங்கள் வீட்டில் ஒரு சோடி மயில்கள் இருந்தன. எனது அப்பாவிற்கு அவர் வழங்கிய பரிசு என்று பின்னாலில் அறியக் கிடைத்தது.

அவருக்கு எங்கள் வீட்டில் பெரு மரியாதை இருந்தது. அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பதால் அப்பாவின் உறவினர்களும் அவரை மதித்தார்கள். ஓரிரு முறை நாம் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் சென்ற போது அவரும் வந்திருந்தார். எப்போதும்  நெல் அல்லது அரிசி முட்டையுடனேயே வருவார். யாழ்பாணம் சென்ற போதும் அப்படியே ஒரு முட்டை நெல்லுடன் வந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள கோயில்களை முடியுமானவரை தரிசித்தார். அவரின் பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணத்தவர்களுக்கு புதினமானதொன்றாக இருந்தது. அவர் பெரும் சத்தமாய் உரையாடும்போது அவரின் மொழியினைக்கேட்டு அவருக்குத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிததார்கள்.


என் அம்மா வைத்தியராகக் கடமையாற்றிய காலம் வரை அவரிடம் மட்டுமே மருந்து எடுத்தார். நாம் பிபிலையில் வாழ்ந்திருந்த காலங்களில் சித்தாண்டியில் இருந்து பிபிலைக்கு வந்து எம்மு‌டன் சில நாட்கள் தங்கியிருந்து, அம்மமாவிடம் மருந்து வாங்கிப் போவார்.

அப்பாவின் இறந்த போது மரணவீட்டில் அமைதியாய் அப்பாவின் அருகில் நின்றிருந்தார். அடிக்கடி என்னை அணைத்து ஆறுதல்படுத்தினார். அப்பாவை எரித்த அன்று இரவு சாம்பல் அள்ளுவதற்காய் என்னுடன் வந்த பெரியவர்களில் இவரும் ஒருவர்.

இதற்குப் பின்னான காலத்தில் எமக்கு வயல் செய்வதற்கு காணியும், இயந்திர வசதிகளையும் செய்து தந்தவர். எமது வயலை தனது வயலைப் போல தனது மூத்தமகன் மூலமாக கவனித்துக் கொண்டார்.


1985ம் ஆண்டின் பின் நான் அவரை சந்தித்ததாக நினைவில் இல்லை. அடிக்கடி அம்மாவின் கடிதங்களில் பெரியதம்பியை கேட்டதாச் சொல்லியிருப்பார். 2005 இல் சித்தாண்டி போய் அவரைச் சந்தித்த போது முதுமை தன் அதிக்கத்தை அவரின் மேல் காட்டியிருந்தது. ஆயினும் சித்தாண்டியப்புவில் அத்தனை மாற்றம் தெரியவில்லை. அருகில் அழைத்து தம்பி உண்ட அப்பாவைப் போல இருக்கிறாய் என்று என் தலையை தடவிவிட்டு மெதுவாய் சிரித்தார். நானும் சேர்ந்து சிரித்தேன்.


”தம்பி வயது பெயித்துது, இதிலையே கிடக்கன், முருகன் கூப்பிரான் இல்லை” என்றார் சித்தாண்டி முருகன் கோயில் இருந்த திசையை பார்த்து கும்பிட்டபடி. என்னால் எதுவே பேச முடியவில்லை. அப்பாவைப் பற்றிப் பேசினார். எனது குடும்பத்தை விசாரித்தார்.  தனது ஒரு மகள் மணமுடிக்காமல் இருப்பது அவருக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது. ”அவளுக்கு உன்ர வயசிரிக்கிகும் இனி யாரு கட்டப்போறா” என்ற போது குரல் தளுதழுத்தது.


நான் அங்கிருந்த போது அவரின் பேரன் ஒருவர் விடுதலைப்போரில் விதையான செய்தி வந்தது. மகனின் மேலிருந்த கோவம் காரணமாக மரண  வீட்டுக்கு போகவில்லையாம் என்றார். ஆனால் இழப்பின் வேதனையை அவரால் மறைக்க முடியவில்லை. ஏதோ அவர் அங்கே போயிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.

நான் புறப்பட்ட போது வெற்றிலை மடித்துத் தந்தார் (வளர்ந்துவிட்டேன் என நினைத்தாரோ?), புகையிலை வேணுமா என்று கேட்ட போது வேண்டாம் என்றேன், பல்லில்லா தன் சிவந்த வாயினால் எச்சில் தெறிக்க வெடித்துச் சிரித்தார்.

என்னை அருகில் அழைத்து முகத்தை தடவி ”தம்பி காலம் கெட்டுகிடக்கு கவனமா பெயித்து வா” என்றார்.

அடுத்த முறையும் சித்தாண்டியப்புவை போய் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்ததாக அம்மா கூறிய போது அம்மாவின் குரலும், எனது மனமும் கனத்திருந்தது.


..............

* சித்தாண்டித் தமிழ் கேட்டிருக்கிறீர்களா? மட்டக்களப்புத் தமிழின் இனிமையான ஒலிப்பிரிவுகளில் ஒன்று அது.
என்னவென்று அதை எழுத்தில் எழுதலாம் என்று தெரியவில்லை.. என்றாலும் முயற்சிக்கிறேன்: உதாரணமாக ”என்னடா தம்பியை”  ”என்ன்னடாம்பி” என்பார்கள் (அதற்கொரு ராகமுண்டு)

சித்தாண்டித்தமிழில் ஒரு தூஷன வார்த்தை அடிக்கடி பாவிக்கப்படுவதாக பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சித்தாண்டிஅப்பு அப்படியான வார்த்தைகளை பாவித்ததில்லை.

சாலையில் ஒரு செம்மறி


ஓரு பயணம் தொடங்கினேன்
பல வருடங்களுக்கு முன்
பாதி தூரம் கடந்தாயிற்று
ஏன் முக்கால்வாசித் தூரமாயுமிருக்கலாம்
சிலவேளைகளில் முடியும் தருவாயிலுமிருக்கலாம்.

முன்பெல்லாம் திருவி‌ழாக்கூட்டமாய் பலர் உடன் வந்தார்கள்
பயணங்கள் இனிமையாய் அமைந்தன
பாதையின் விதிகள் கற்பிக்கப்பட்டன
அவற்றை மீறியபடியும் விதிகளை கற்றுக கொண்டேன்
பாதையின் கிடங்குகளைக் கடக்கையில் 
கைபிடித்து அழைத்தப்போயினர் சிலர்

பாதையின் தன்மைகள் மாறிக்கொண்டே இருந்தன
விழுந்தால் வலிக்காத மணற்பாதையில் தொடங்கி
பாதுகாப்பான ஒழுங்கை, சாலை என்றாகி
காலப்போக்கில்
பாதைகள் அகன்று
நெடுஞ் சாலையாயிற்று
அதிலும் நடக்கக் கற்றுக் கொண்ட போது
பயணத்தின் கால்வாசி கடந்திருந்தேன்

திடீர் என அழகான பாதையில் நடந்து கொண்டிருந்த போது
பயணத் துணையாய் சேர்ந்து கொண்டனர் சிலர்
பயணம் இலகுவானது போலிருந்தது
அதுவும் சிலகாலம் தான்
பாதை கரடுமுறடாகியது
நான் முணுமுணுத்தபடியே
ஒரு ஓரமாய் நடக்கத் தொடங்கினேன்
துஸ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல

எனது வேகத்திற்கேட்ப
கறடுமுறடான பாதையில் தனியே நடக்கிறேன்
தனிமையின் வெம்மை இங்கும் கொடியதாயிருக்கிறது
தூரத்தில் தெரிபவை கானல் நீராகவும் இருக்கலாம்


கரடுமுறடான பாதை நீண்டு போனாலும்
வழியெங்கும் பாதையின் அருகே
எனக்கு மேலே குருவிகள் சில
இசைத்தபடியே வருகின்றன

பயணத்தின் முடிவு வரும் வரை
நான் நடக்கத்தான் வேண்டும்
என்று விதிக்கப்பட்டிருக்கிறது
வாழ்க்கை என்னும் பாதையில்
நடந்துகொண்டேயிருக்கிறேன்
 .....


கேளாமல் பின்தொடரும் நிழல்

இன்று காலையில் இருந்து உடம்பு உசாராய் இல்லை. அடித்துப்போட்டது போல ஒரு உணர்வு. தலை கனத்துக்கிடந்தது. எதையும் செய்யும் மனநிலையிலும் நான் இல்லை. மனமும் உடம்பும் ஒத்துழைக்க மறுத்து சோர்வில் சுருண்டு கிடந்தன.  குறுஞ்செய்தி முலமாக சுகயீனத்தை மேலதிகாரிக்கு அறிவித்தேன்.

வாய்க்கு ஏதும் புளிப்பான உணவு தேவைப்பட்டது. எனது சமையற்கலை  அறிவில் நான் முட்டை பெரிக்குமளவுக்கும், தேனீர் போடுமளவுக்குமே முன்னேறியிருப்பதால் ”நண்பனுக்கு ரசம் செய்து வை” மதியம் சாப்பிட வருகிறேன் என்றேன். மதியம் ரசம், உறைப்பான கோழிக்கறியுடன் உண்டு முடித்த போது சகல அடைப்புக்களும் எடுபட்டிருந்தன. மனம் உடலும் சற்று இலகுவாகிப் போனது. மேலதிகமாய் ஒரு போத்தலில் ரசத்துடன் வீடு வந்தேன்.

மாலை இருட்டிய பின் ஒரு சிறு நடை நடப்போம் என்று புறப்பட்டேன். உள்ளாடைக்கு மேல் ஒரு ஆடை, அதற்கு மேல் ஒரு ஆடை, அதற்கு மேலால் மொத்தமான கம்பளி ஆடை, இறுதியாக ஜக்கட் என்று படை படையாக உடைகளை உடுத்துக்கொண்டு, தொப்பி, கையுறை சகிதமாகப் புறப்பட்டேன். நேரம் 19. 22 என்றிருந்தது.

இலையுதிர்கால பின் மாலை இருட்டு ஊருக்குள் ஊடுருவியிருக்க, குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. பாதையெங்கும் உதிர்ந்த இலைகள் காலடியில் சரசரத்தன. மரங்கள் இலைகளை இழந்து தனிமையில் இருப்பது போல உணர்ந்தேன். வீதியில் மனித நடமாட்டமே இல்லை. கடந்த போகும் வானங்களைத் தவிர. 

அமைதியான ஒரு பாதையில் மெதுவாய் நடக்கத் தொடங்கினேன் நினைவுகள் எங்கெங்கோ அலைந்த கொண்டிருந்தன. இப்டியான தனிமையான நடைப் பயணங்களை நான் மிகவும் விரும்புவதுண்டு. சுயத்துடன் மனம் விட்டு பேசிக்கொள்ள முடியுமான நேரங்கள் இவை.

முன்பைப் போல இப்ப‌டியான நடைப்பயணங்கள் இப்போது அமைவதில்லை. மனம் இருந்தாலும் உடல் ஏனோ மனதுக்கு கட்டுப்பட மறுக்கிறது. ஏறத்தாள   5 - 6 வருடங்களுக்கு முன், மிகுந்த மன அழுத்தத்தில் வாழ்திருந்த காலங்களில் என்னை நான் மீட்டுக் கொண்டது தனிமையான நடைப்பயணங்களினால் தான். அந் நாட்களில் ஒரு கிழமைக்கு 5 - 6 நடைப்பயணங்கள் அதுவும் அவை  ஆகக் குறைந்தது 5 மணிநேரப் பயணங்கள் என நடந்து நடந்து மனதுடன் பேசி பேசி எனது மன அழுத்தத்தை குறைத்தக் கொண்டேன்.

அதன் பின்னான காலங்களில் Gym க்கு சென்று சைக்கில் ஓடுவது வழமையாகியது. அத்துடன் உடற் பயிட்சியும் செய்து கொண்டேன். பயிட்சி முடிந்து வெளியேறும் போது மனதுக்குள் ஊறும் ஒரு வித மகிழ்ச்சியையும் உடம்பில் இருக்கும் துள்ளளையும் அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர்ந்த கொள்ள முடியும்.

இன்றைய நடைப் பயணத்தின் போது கடந்த காலத்தை நினைத்துக் கொண்டேன். திடீர் என்று நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேனா என்ற  கேள்வி எழுந்தது எனக்கு.

எதில் மகிழ்ச்சியிருக்கிறது? என்பதை அறிந்தால் அல்லவா அக்கேள்விக்கு பதில் கிடைக்கும். இப்படியே எனக்கு நானே கேள்விகளைக் கேட்டு நானே பதிலளித்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.

மகிழ்ச்சி என்பது பணத்தில் அல்ல என்பது புரிந்திருக்கிறது. ஆனால் அளவான பணம் அவசியமே. பெரும் பூசல்கள் இல்லாத வாழ்வும் மகிழ்ச்சியானது. சுயம், குழந்தைகள்,புரிந்துணர்வுள்ள நட்பு, நோயற்ற வாழ்வு, இவற்றுடன் அன்பாய் தோள் சாய்ந்து ஆறுதல‌டைய புரிந்துணர்வுடைய ஒரு துணை, விரும்பிய பொழுதுபோக்கு, புத்தகங்கள், எழுத்து, பொது வேலைகள், நிம்மதியான உறக்கம் என்பனவே எனது மகழ்ச்சியின் அளவுகோல்கள் என்று எனக்குள் நானே பட்டியலிட்டுக்கொண்டேன்

அவற்றின் அடிப்படையில் எனது வாழ்வு மகிழ்ச்சியாய் இல்லை என்று சொல்வதற்கில்லை என்றும் புரிந்தது. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடையும் மனநிலையும் அமைந்திருக்கிறது. முக்கியமாய் நிம்மதியான தூக்கம் அமைந்திருக்கிறது. அதன் பெறுமதியை நான் உணர்ந்துகொண்ட நாட்களில் எனது பல முட்டாள்த்தனங்களை நான் தவிர்த்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு சிலரை வெறுப்பதிலும் ஒரு வித குரூரமான மகிழ்ச்சியை உணர்கிறேன். அதை மிகவும் அனுபவித்துச் செய்கிறேன். இதுவும் ஒரு வித மகிழ்ச்சியே. நன்றும் தீதும் கொண்டவன் நான் என்பதும் புரிந்திருக்கிறது. ”உண்னையே நீ அறிவாய்”.

தெருவிளக்கின் வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தேன். என் நிழல் எனக்குப் பின்னாலும், எனக்குக் நேர் கீழேயும், எனக்கு எதிரேயும் என் விருப்பத்தை கேளாமால் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது... என் வாழ்க்கையைப் போலவே.

நடைப்பயணம் முடியுமிடத்தில் பெண் குழந்தைகள் கால்பந்து பயிட்சியில் ஈடுபட்டிருந்தனர். எனது நினைவுகள் 7 - 8 வருடங்கள் பின்னோக்கிப் போய் எனது மகளின் கால்பந்து அணிக்கு நான் பயிட்சியாளனாய் இருந்த நாட்களில் அலைந்து திரிந்தது. அந் நாட்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஒரு மணிநேர நடை மனதினை சற்று இலகுவாக்கியிருந்தது. தவிர எழுதுவதற்கும் இரு தலைப்புக்களை தந்திருந்தது. மெதுவாய் வீடு வந்து குளித்து நண்பரின் ரசத்தினை சூடாக்கி கணணியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டேன். ரசம் வாயையும், நடைப் பயணம் மனதையும் நனைத்துக்கொண்டிருந்தது.

இன்றைய நாளும் நல்லதே!லண்டனில் கேர்ணல் கடாபி

நேற்றுக் காலை புத்தகக் கண்காட்சி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அதுவும் லண்டன் மாநகரத்தில். அது பற்றியதோர் சிறு பதிவு தான் இது.

ஒருவரின் வீட்டில் காலை விடிந்தது.  அவருக்கு சக்கரைவியாதி. ”எனக்கும் தான்” என்று அவருக்கு ஆறுதலாக இரு வார்த்தைகள் கூறியது தப்பாகிவிட்டது. அவரின் சர்வதிகாரி அவருக்கு காலையில்  பாவைக்காய் தேனீர் தான் கொடுப்பார். எனக்கும் அதுவே கிடைத்தது. ஆளையாள் பார்த்தபடியே குடித்து முடித்தோம். ”நோர்வேக்கும் கொண்டு போங்கோ” என்று 4 தேயிலைப்பெட்டி தந்தார். நண்பர் கடைக்கண்ணால் பார்த்துச் சிரித்தார். நண்பேன்டா.

லண்டனுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன் நண்பர் இளவாலை விஜயேந்திரன் ஒரு மின்னஞ்சல் அனுப்பயிருந்தார். ‌அதில் லண்டனில் ஒரு புத்தகக் கண்காட்சியும் புத்தக விற்பனையும் நடைபெறுகிறது என்றிருந்தது. பின்னந்தலையில் குறித்துக்கொண்டேன். இன்று காலை மின்னஞ்சலை எடுத்து விலாசத்தைக் குறித்துக் கொண்டேன். ஏதோ ”வால் தம் ஸ்தொ” என்று  வாயில் புகாத ஊரில் நடைபெறுகிறது என்றிருந்தது.

நண்பரிடம் விலாசத்தைக் காட்டி அழைத்துப் போக முடியுமா என்று கேட்டேன். விலாசத்தை பார்த்த பின் அவரது பார்வை வெளிறிப்போயிற்று.  ”இதால போய், அங்கால திரும்பி, அதுல பஸ் எடுத்து, பிறகு நிலக்கீழ் தொடரூந்தில் நான்கு இடங்களில் மாறி, பின்பு பஸ் எடுத்தால் மண்டபம் வரும்” என்ற போது அவர் பார்வை வெளிறியதன் காரணம் புரிந்தது.

ஏறத்தாள இரண்டு மணிநேர பயணத்தின் பின் ”வால் தம் ஸ்தொ” என்னும் இடத்தில் நின்றிருந்தேன். விலாசத்தைக் காட்டி வழி கேட்டேன் வாயைப் பிதுக்கினார்கள்.  அருகிலே ஒரு  குட்டை டாக்ஸி நிறுவனம் இருந்ததால் தப்பித்தேன். (குட்டை டாக்ஸி என்றால் Mini Cab  ஹய்யோ ஹய்யோ)

குட்டை டாக்ஸியின் உள்ளே ஏறி இரண்டு தரம் ஆறுதலாக மூச்சு விட முன்பே உனது இடம் வந்து விட்டது என்றான். வெளியில் பார்த்தேன் ஒரு தவறனையின் (Pub) முன் நின்றிருந்தது குட்டை டாக்ஸி. சாரதியைப் பார்த்தேன் எதையுமே கவனிக்காமல் பல்லுக்குள் மாட்டிக் கொண்டிருந்த நேற்று இரவு உண்ட இறைச்சியை ஒரு குச்சியால் தோண்டிக் கொண்டிருந்தான் கண்ணாடியில் பார்த்தபடியே.

நிட்சயமாக இது தானா என்று கேட்டேன். குச்சியை எடுக்காமலே தலையை மேலும் கீழும் ஆட்டினான். சாரதிக்கு 5 பவுண்கள் அழுதுவிட்டு இறங்கிக் கொண்டேன். சுற்றாட‌லை ஒரு தடவை நோட்டம் விட்டேன். புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை. மதியமாகிவிட்டதால் தவறணைக்குள்  புகுந்து கொள்வோமா என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது பெரிதாய் திருநீறு பூசி கோட் போட்ட ஒரு பெரியவர் தவறணையின் பின்புறமாய் போவது தெரிந்தது. அவரைப் பின்தொடர்ந்தேன். புத்தக கண்காட்சி பற்றிய விளம்பரம் தெரிந்தது.

மாடியேறிப் போனேன். வாசலுக்கருகிலேயே உணவும், மெது குடிவகைகளும் ( அதான்பா soft drinks) இருந்தன. மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு  புத்தகங்களைப் பார்க்கலானேன். அங்கிருந்தவர்கள் எவரையும் எனக்குப் பழக்கமில்லை. அவர்களுக்கும் என்னைப் பழக்கமில்லை.

நகரத்தில் அலைந்த கிராமவாசியை எப்படி மோப்பம் பிடித்தாரோ தெரியாது ... நீங்கள் ஊருக்கு புதிதோ என்னும் தோரணையில் பேச்சைத் தொடக்கினார் ஒருவர். ஆமா, ஆமா என்றேன். அத்துடன் நோர்வே என்றது தான் தாமதம் மனிதர் அங்கிருந்த பலருக்கும் ”இவர் நோர்வேயில இருந்து புத்தக கண்காட்சிக்கு வந்திருக்கிறார்” என்று சொன்னார். பலர் வந்து கையை குலுக்கி ஒரு விதமாய் பார்த்தார்கள்.. எனக்கேதோ அந்தப் பார்வை ”புத்தகக் கண்காட்ச்சிக்கு நோர்வேயில இருந்து வருவதானால் உனக்கு விசராக இருக்க வேண்டுமே” என்பது போலிருந்தது. ஆனால் அப்படி ஒரு பில்ட்அப் கொடுக்கவும் ஆசையாக இருந்தது. மகள் இங்கு வாழ்வதால் அவளின் பிறந்த நாளுக்கு வந்தேன் என்னும் சிறு குறிப்பை தவிர்த்துக் கொண்டேன்.

திடீர் என்று ஒருவர் அருகில் வந்து ”அண்ணை .. நோர்வேயில தேசியப் பிரச்சனை பற்றி என்ன மக்கள் சொல்லீனம் என்றார்”

”அடப் பாவி ... இங்கயுமா?” என்று மனது கத்தியது.. ஆனால்  அவர்  என்னை அண்ணண் என்றழைத்தததால் நான் தம்பீ என்று தொடங்கி ..”  தேசியத்துக்குள்ளேயே அங்க பிரச்சனையப்பா என்றேன்” தம்பியை அதன் பின் காணவே கிடைக்கவில்லை. ஏன் உண்மை பேசினால் கல்லைக் கண்ட நாய் போல தலை தெறிக்க ஓடுகிறார்கள் நம்மவர்கள்?

ஒரு மூலையில் ”வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்” என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் இருந்தது. அதனருகில் அனாசின் சில புத்தகங்கள் இருந்தன. அப்போது ஒருவர் ”அனாசின் புத்தகங்கள இங்க வைத்தது யார் என்றார்?” பின்பு என்னைப் பார்த்தார்.. நான் பற்கள் தெரியாமல் கன்னங்களை அகட்டிச் சிரித்தேன். பின்பு ஏறக்குறைய இப்படி ஒரு உரையாடல் நடந்தது..

குறிப்பிட்ட நபர் ”வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்” புத்தகதை கையிலே எடுத்து அதை பிரசங்கம் செய்பவர் போல் உயர்த்திப்பிடித்தபடியே பேசுகிறார்.

தம்பி.. (என்னையல்ல) இந்த புத்தகத்தின் தலைப்பை பாத்தியளே? இது சுதுமலையில அப்ப தலைவர் சொன்னது என்றார். பின்பு ஒரு ஏகாதிபத்திய நாட்டில் தலைவர் பயிட்சியில் இருப்பதாகவும். இன்னும் சில பிரசங்கங்களை அவர் கூறி முடித்த போது எனக்கு ஒரு முன்றாம் தர Seience fiction படம்  பார்த்தது போன்றிருந்தது. கதை கூறும் போதாவது சற்று நம்பகத் தன்மை கலக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதன் பின் சில பதின்மவயதினர் அங்கு வந்திருந்தனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களில் ஒரு பெண்ணின் தமிழ் ஆர்வம் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. சாதிக்கொடுமைகளும்  தீமூண்ட நாட்களும் வாசியுங்கள் என்றேன் அவரிடம். அது பற்றி கேட்டார். விளக்கிக் கூறியதும் இப்படியும் நடந்ததா என்று ஆச்சர்யப்பட்டனர். அருகில் நின்றவர் ஒருவர் இதுகளை இவங்களுக்கு சொல்லி என்ன பிரயோசனம் என்றார். பல்லைக் கடித்து என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.


மீண்டும் புத்தகங்களை மேயத் தொடங்கினேன்.
சித்தார்த்த யசோதரா (சிங்கள மொழிபெயர்ப்புப் நாவல் - புத்தரின் டீன் ஏஜ் லவ் என்றும் கொள்ளலாம்)
பெயரிடாத நட்சத்திரங்கள் (பெண் போராளிகளின் கவிதைத் தொகுதி)
நூல் தேட்டம் (ஈழத்து நூல்களின் தொகுப்பு)
இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை
ஆகிய  புத்தகங்களை தெரிவு செய்து கையில் எடுத்தக்கொண்டேன். அப்போது ஒருவர்  என்னை பார்ப்பதும் ஏதொ யோசிப்பதுமாய் இருந்தார். சிரித்தார். சிரித்தேன்.
”நீங்க நோர்வேயா” என்றார்.
”ஆம்” என்றேன்.
”சரவணணா?” என்றார்.
”இல்லை”, ஆனால் அவரைத் தெரியும் என்றேன்

எனக்கும் சரவணணுக்கும் நிறத்தில் மட்டும் தான் சற்று ஒற்றுமையுண்டே தவிர வேறு எதிலும் இல்லை. முக்கியமாய் தலைமுடியில் இல்லவே இல்லை. அப்படியிருக்க இவர் ஏன் என்னை சரவணணா? என்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எமது பேச்சு முகப்ப்புத்தகம், பதிவுலகம் என்று போன போது அவருக்கு ”விசரனை” தெரிந்திருந்தது.
எகத்துக்கும் கையை குலுக்கு குலுக்கு என்று குலுக்கினார். உங்கள் ரசிகன் என்ற போது எனக்கு மயக்கமே வந்து விட்டது.

எகத்துக்கும் கையை குலுக்கு குலுக்கு என்று குலுக்கினார். உங்கள் ரசிகன் என்ற போது எனக்கு மயக்கமே வந்து விட்டது.


சரி நீங்கள் யார்? என்றேன். பெயரைச் சொன்னார். அவரைத் தெரிந்திருக்கவில்லை எனக்கு. சின்னக்குட்டி பதிவுலகத்தின் அதிபதி என்றார். ஆஹா... என்று பொறி தட்டியது எனக்கு.  நட்பாய் பேசிக்கொண்டிருந்‌தோம்.

நண்பர் பௌசர் வந்தார். நலம் விசாரித்துக்கொண்டோம். கீரன் வருவதாய் அறியக் கிடைத்தது. நான் நிற்கும் வரை கீரன் வரவில்லை. அன்பர் ஒருவர் விமல் குழந்தைவேலின் ”கசகறணம்” நாவல் வெளிவருவது பற்றி கிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார். இந் நாவல் போராட்டத்தில் வாழ்வைத் துலைத்த ஏழை அக்கரைப்பற்று  மக்களின் துயரத்தை அவர்கள் மொழியில் பேசுவதாகக் கூறினார்.

நண்பர் சின்னக்குட்டியுடன் நின்றிருந்த போது ஒரு மூலையில் பதின்மவயதினருடன் சிலர் தமிழ், கலாச்சாரம், புதியன புகுதல் என்று  விவாதித்துக்கொண்டிருந்தனர். அதில் கலந்து கொண்ட போது அன்பர் ஒருவர் சற்றே உணர்ச்சிவசப்பட்டார். எனது கருத்துக்கள் இளைஞர்களை கெடுப்பது போலிருப்பதாக வாதித்தார். தனது கருத்தே சரி என்றார். யாதார்த்தத்தையும் வெல்லவேண்டும் என்றார்.  சாதாம் உசேன், கடாபி என்று அந்த பதின்மவயதினருக்கு முன்னுதாரணங்கள் காட்டினார். அவர்கள் யாதார்த்தத்தை வென்றவர்கள் என்றார். எனது சூட்டைத் தணிக்க இரு தடவைகள் குளிர் தண்ணி அருந்தினேன். சின்னக்குட்டியார்  தண்ணீர் அருந்தாததால் சற்று சுடாகினார்.   இதெல்லாம் சகஜமய்யா என்பது போல நாம் ஒதுங்கிக் கொண்டோம்.

மீண்டும் நிலக்கீழ் தொடரூந்து நிலயம் செல்வதற்கான வழி கேட்ட போது நண்பர் சின்னக்குட்டி  கூடவே வந்து வழிகாட்டினார். நன்றி கூறிப் புறப்பட்டேன். வீடு வரும் வழியில் திருத்த வேலைகளால் ஏறத்தாள 3 மணிநேரம் எடுத்தது வீடு வர.

வீடு வந்து கோப்பியுடன் சித்தார்த்த யசோதராவை கையில் எடுத்தேன். அதில் புத்தர் (சித்தார்த்தர்) யசோதராவுடன் ஏறத்தாள டுயட் பாடிக்கொண்டிருந்தார். நானும் ஒருத்தியை நினைத்துக்கொண்டேன்.

இன்றைய நாளும் நல்லதே!


.

முன்னாள் போராளியின் இந் நாள் போராட்டம்


அண்மையில் ஒரு நண்பனைக் காணக் கிடைத்தது. பால்ய சினேகம். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவன். அருகில் உள்ள நாட்டில் இருந்தாலும் சந்திப்பது மிகக் குறைவு. எனவே இம் முறை சற்றே அதிகமாய் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அறியக் கிடைத்த கதை தான் இது.

கதை என்பதை விட உயிரைச் சுடும் உண்மை என்றே சொல்ல வேண்டும். எனக்கும் அரசியலுக்கும் என்றும் பொருத்தமிருந்ததில்லை. ஆனால் அராஜகமாயோ, அநியாயமாயோ தோன்றுமிடத்து  எனது ஒரு சில பதிவுகளில் சற்று அரசியல் கலந்திருந்திருக்கிறது. இன்றும் அப்படித்தான் சற்று அரசியல் ஆதங்கத்தை  கலந்திருக்கிறேன்.
Read More
வாருங்கள் கதைக்குள் போவோம்.

நண்பனின் உறவினர் ஒருவர் கனடாவில் இருப்பவர். வசதியானவர். அவருக்கு சில ஆண்டுகளாக இரு சிறுநீரகங்களும் பாதிப்படைந்திருந்திருக்கின்றன. அங்கு அறுவைச் சிகிச்சைக்காக காத்திருந்திருக்கிறார். காலம் கடந்ததே அன்றி சிறுநீரகம் கிடைக்கவில்லை.

திடீர் என இலங்கையில் சிறுநீரகம் ஒன்று விற்பனைக்கு இருப்பதாக அறிந்து, அதன் பின்னான பரிசோதனைகளின் பின் அந்த சிறுநீரகம் பொறுந்தக் கூடியது என்று அறிவித்திருந்திருக்கிறார்கள்.

அடுத்த ஒரு சில மாதங்களுக்கிடையில் சிறுநீரகம் மாற்றப்பட்டு தற்போது முன்பை விட மிகுந்த நலத்துடன் வாழ‌்கிறாராம்.

அதுவரை கதை மகிழ்ச்சியாகவே இருந்தது.

சிறு நீரகத்தை அவருக்கு வழங்கியது தென் கிழக்கிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு முன்னாள் போராளி.  கிழக்கின் பிளவின் போதும் வன்னித் தலமைக்கு விசுவாசமாயிருந்த ஒருவர். அதற்காக பிரிந்து போன தளபதியின் சகாக்களினால் பலத்த சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு பின்பு தெய்வாதீனமாக உயிர் தப்பியவர். இறுதி யுத்தத்தில் தப்பிய பின் சொந்த ஊரில் வாழ முடியாததால் தற்போது கொழும்பில் ஒளிந்திருப்பவர். ஒரு லாட்ஜ்  இல் இரகசியமாக தொ‌ழில் புரிகிறார்.

அவருக்கு ஒரு தங்கை. தாயாரை கவனிக்கவேண்டிய கடமையும் உண்டு. தந்தையார் யுத்தத்தில் இறந்திருக்கிறார். தங்கையின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கொழும்பில் பிரபல்யமாகிக் கொண்டிருக்கும் உறுப்பு விற்பனை தொழில் முகவர் ஒருவர் மூலமாக தனது ஒரு சிறுநீரகத்தை இலங்கைப் பணம் ஆறு இலட்சம் ரூபாய்களுக்கு விற்றிருக்கிறார்.

ஒப்பந்தத்தின்படி பணம் கைமாறியதும் சிறு வீடு கட்டி தங்கையின் திருமணத்தையும் முடித்திருக்கிறார்.

ஆறு லட்சம் ருபாயில் ஒரு வீடும், ஒரு திருமணமும் சாத்தியமாகுமா? என்று நண்பனைக் கேட்டேன்.  சிரித்தபடியே  கேட்டான் ”ஆறு லட்சம் அந்த முன்னாள் போராளிக்கு கிடைத்திருக்குமா” என்று?
”புரியவில்லை” என்றேன்.
முகவர் பல ஆயிரங்களை எடுத்திருப்பார். எனவே இவரிடம் அந்தளவு பணம் இருந்திருக்காது. இருப்பினும் மிகுந்த பின்னடைவான பிரதேசத்தில் வாழ்வதால் ஒரு சிறு வீடு கட்டிக் கொண்டிருக்க சந்தர்ப்பம் இருந்திருக்கும். திருமணத்தையும் மிகுந்த சிக்கனமாய் முடித்திருப்பார்கள் என்றான்.

தவிர அவரின் உடல் நிலை மோசமானால் வைத்தியத்திற்கு என்ன செய்வார்? பாதுகாப்பான தொழில் கிடைக்குமா? தாயாரை எப்ப‌டிக் கவனிப்பார்? எதிர்கால வாழ்வு எப்படி இருக்கும் என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் நண்பன்.  எதுவும் பேச முடியாதிருந்தேன்.

வாழ்க்கையையே எங்கள் போராட்டத்திற்கு அர்ப்ணித்த ஒருவரின் கதை இது. இவரின் கதையை விட அண்மையில் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்த மின்னஞ்சலிலும்  இரு சீரகங்களும் பழுதடைந்த நிலையில் இன்னொரு முன்னாள் போராளி உதவி கேட்டிருந்தார். அவருக்கு உதவ சில நண்பர்கள் முன் வந்திப்பது மகிழ்ச்சியைத் தந்தது. இவற்றை தவிர்த்து முன்னாள் போராளிகளின் உதவிக்கரம் நீட்டுங்கள் என்னும்  குரல்கள் தினமும் பலரின் காதுகளிலும் விழுந்தபடியே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இவையெல்லாம் முன்னாள் போராளிகளிகளின் இன்றைய வாழ்க்கைப் போராட்டத்தைக் காட்டுகிறது. இவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு பண பலம்  பொருந்திய விடுதலைப்‌ புலிகளின் அமைப்புக்களிடமும் அவர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்களிடமும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் தானைத் தலைவனின் தவப்புதல்வர்கள் என்றவர்கள் எல்லாம் எங்கே? ஊருக்குள் பணம் வசூலித்து கொமிசனை சுருட்டிக்கொண்டவர்கள் எங்கே? வாக்கெடுப்பு நடாத்தி பதிவி பெற்றவர்கள் எங்கே? இன்றும் முடிந்ததை சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது சுருட்டியதை பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

இவை பற்றி பேசினால் ”உளவாளி” என்கிறார்கள்.
அல்லது நாம் பல திட்டங்களை செய்கிறோம் அவை இரகசியமானவை என்கிறார்கள். ஏதும் காத்திரமாய் நடந்தால் மகிழ்ச்சி.  அத்துடன் வாழ வழியில்லாத முன்னாள் போராளிகளையும் கவனித்தக் கொண்டால் கொள்ளை மகிழ்ச்சி.

இறுதியாய் எனது கருத்தையும் இணைத்துவிடுகிறேன். எவரையும் இனி நம்பிப் பயனில்லை.  நாம் அனைவரும் நம்மாலான உதவியினை நேரடியாகவே முன்னாள் போரளிகளுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இரண்டு தொடக்கம் நான்கு  நண்பர்கள் சேர்ந்து அவ‌ரவர் ஊர்களில் அவர்களால் முடிந்த உதவிகளை அங்கிருக்கும் மக்களுக்கு செய்யுமிடத்து சிறு துளி பெரு வெள்ளமாய் மாறும்.

இப்படியான திட்டங்களை திறம்பட நாடாத்தி ‌பலன்களை பலரும் பெறும் வகையில் இயங்கிவரும் இரு நிறுவனங்கள் ஒஸ்லோவில் இருக்கின்றன.  இந் நிறுவனங்களில் வருமானங்கள், செலவுகள் என்பன எல்லோரினதும் பார்வைக்கும் வைக்கப்படுவதால் அங்கு நம்பிக்கையும் பேணப்படுகிறது.

எம்மவர்க்காய் கைகோர்ப்போம் வாருங்கள். நீங்களும் உங்கள் உதவியினை நேரடியாகவே உங்கள் நம்பிக்கைக்குரியவர்கள் முலமாகச்  செய்யுங்கள்.   சிறு துளி பெரு வெள்ளமாகட்டும்.

பி.கு:
சிறுநீரகத்தை விற்ற போராளிக்கு சிறு நீரகத்‌தை பெற்றுக் கொண்டவரும், இது பற்றி பேசிய நண்பனும் தொடர்ந்தும் உதவுகிறார்கள்.

லட்சத்தில் ஒருவர் ஓரளவு உதவி பெற்றிருக்கிறார். லட்சங்களை பெற்றுக்கொண்டவர்கள் மௌனித்திருக்கிறார்கள்....

”பொதுச்சொத்து குல நாசம்” என்றும் நாம் பழமொழியினை மாற்றிக்கொள்ளலாம்.

புரிந்ததா நட்பே?

மறுக்கப்படும் மறைக்கப்படும் யதார்த்தங்கள்

சில நாட்களுக்கு முன் Bridges Of Madison County என்னும் திரைப்படத்தை நண்பர் ஒருவர் பரிந்துரை செய்தார்.  கட்டாயம் பார் என்றும் படத்தை கையிலும் திணித்தனுப்பினார்.

வீடு வந்து Mac னுள் இறுவெட்டை திணித்துவிட்டு தேனிருடன் அமர்ந்தது தான் ஞாபகம் இருக்கிறது. படம் முடியும்வரை வெறொரு உலகில் சஞ்சரித்திருந்தேன். கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு என்று படம் மனதை கொள்ளை கொண்டு போனது.

படத்தின் கருவானது Robert James Waller என்னும் எழுத்தாளரின்  Bridges Of Madison County என்னும் புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்டு திருமணமான வயதான ஒரு குடும்பத்தாய்க்கும், விவாகரத்தான ஒரு வயதானவருக்கும் இடையில் ஏற்படும் காதல் பற்றிக் கூறுகிறது. மிகவும் உணர்வு பூர்வமான முறையில் சிறிது கூட விரசமற்ற முறையில் படத்தினை பதிவாக்கியிருக்கிறார்கள்.

Bridges Of Madison County படத்தின் கதை 4 - 5 நாட்களே நடைபெறுகிறது. இருப்பினும் அவர்களின் காதல் 3 நாட்களுக்குள் எல்லைகள் கடந்து இருவரையும் பின்னிப்பிணைத்துவிடுகிறது.

படத்தினை பார்த்த பின்னான மாலைப் பொழுது கனத்துப் போயிருந்தது எனக்கு. அண்மையில் மம்முட்டியின் ”ஒரே கடல்” மலையாளப் படம் ஒன்றும் திருமணத்திற்கப்பான ஒரு உறவு பற்றிப் பேசியிருந்தது. அப் படத்தினை மலையாளத்தில் பார்த்த போது மனதைக் கவர்ந்து கனக்க வைத்தது.

தமிழில் இப்படியான சிக்கலான உறவு முறைகள் பற்றிய திரைப்படங்களை இயக்குவதற்கு இயக்குனர்கள் தயங்குவதன் காரணம் என்ன? எமது கலாச்சாரத்திற்கு அப்பாட்பட்டது என்று நாம் சில உண்மைகளை மறைக்கிறோம் மறுக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது எனக்கு. அல்லது எமக்குள் இருக்கும் முதிர்ச்சியிற்ற குணாதிசயங்களில் ஒன்றா?

அண்மையில் வாசித்த ஈழத்து எழுத்தாளர் உமா வரதராஜனின் ”மூன்றாம் சிலுவை” நாவல் கூட திருமணமான ஒருவருக்கும் திருமணமாகாத ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறவினை கருவாகக் கொண்டது. ஆனால் அந் நாவலில் ஆண் பெண் பாலுறவு நிலைகள் வர்ணிக்கப்படும் முறை எமது இலக்கிய உலகுக்கு புதியது போலவே நான் உணர்ந்தேன். இங்கும் சிக்கலான விவாதக் கருப்பொருட்கள் பலத்த சர்ச்சையை உருவாக்கியிருந்தன. மொழிகளின் ஆழுமையுடன் கொச்சைத்தன்மை இன்றி வாதிக்க முடியாத கருப்பொருட்டகள் எதும் உண்டா? சற்று சங்கோஜம், தயக்கம் இருப்பதில் தவறில்லை.  அவை நாம் வளர்க்கப்பட்ட முறையை அடிப்படையாகக் கொண்டவை.

அண்மையில் கவிஞர் அறிவுமதியின் ”மழைப்பேச்சு”  அந்தரங்க  நேரத்து கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. அதில் ஒரிடத்தில் ”அந்த நேரத்திற்கு மட்டும் அவசியமாய்த் தேவைப்படுகின்றன சில கெட்ட வார்த்தைகள்” என்று வருகிறது.  அவை எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பதை ‌நாம் அனைவரும் அறிவோம். உண்மையை, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கமிருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. அதே வேளை சொல்ல வேண்டிய கருப்பொருளினை
விவாதிக்க வளமான சொற்களுக்கா தமிழில் பஞ்சம்? மழைப்பேச்சு இதற்கு ஒரு உதாரணம்.

வாழ்வின் யதார்த்தங்களை மறைக்காமல் அவற்றின் அம்மணமான குணாதியங்களை ஒரு வளமான மொழிநடையுடன் வர்ணிப்பதோ, காட்சிப்படுத்துவதோ தவறாகாது, அதுவே கலையாகிறது கலைஞனின் திறமையாகிறது அதை கொச்சைப்படுத்தாமல் இருப்பதும் அவனது கடமையாகிறது.

நவீன உலகக்கல்வி, சமூக கலாச்சார உறவு முறைகளுடன் பல ஆண்டுகளாக மேற்கத்திய சமூகத்தில் வாழும் எமது புலம் பெயர்  சமூகத்திலும் இப்படியான உறவுமுறைச் சிக்கல்கள் பல உருவாகிக்கொண்டிருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவற்றில் பல காணாமல் போய்விட்ட அன்பின் தேடுதலாய் இருப்பதாயே உணர வேண்டியிருக்கிறது. ஏன் இலங்கையில் கூட விவாகரத்துக்களின் புள்ளிவிபரங்கள் எம்மில் பலர் விரும்பாத ஒரு வளர்ச்சியையே காட்டுகிறது. அதற்காக நாம் உண்மையை இல்லையென்றுரைக்க முடியுமா? இந்தியா டுடே இல் சில வருடங்களுக்கு முன் வந்த பாலியல் வழக்கங்கள் என்னும் தொனியில் செய்யப்பட்ட கருத்துக்கணிப்பும் பலரும் எதிர்பார்க்காத முடிவுகளையே தெரிவித்திருந்தது.

மணவாழ்வு ‌வாழ்வின் இறுதிவரை மகிழ்ச்சியாய் தொடருமெனின் அவர்கள் அதிஸ்டசாலிகள். ஆயினும் அப்படியான வாழ்வு வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?  பலர் இடைக்காலங்களிலேயே வாழ்வினை மாற்றியமைக்க முனைகின்றனர். அதற்கான  காரணங்களை ஆராய்வது இவ்விடத்தில் அவசியமற்றது. ஆனால் பரஸ்பர ஒற்றுமையும், அன்பும், சமத்துவமும் இல்லாது போவதே முக்கிய காரணிகளாய் இருக்கின்றன.

சில இடங்களில் திருமண உறவு முறிய முன்பே சில மனங்கள் ஒன்று பட்டுவிடுகின்றன. அப்படியான உறவு முறைகளுக்கிடையில் ஏற்படும் பிணைப்புக்களை நாம் ”கள்ளக்காதல்” என்று உதாசீனப்படுத்துவதில் எனக்கு ஏற்பில்லை. அது அவர்களின் வாழ்வு, அவர்களின் தேர்வு. அவற்றை மதிப்பதிலேயே மனிதம் இருக்கிற‌தே அன்றி காலாச்சார காவலர்களின் கண்ணாடியை நாம் அணிந்து கொண்டு அவர்களை மென்றுதின்பதில் அல்ல.

ஆனால் இப்படியான உறவுகளில் சிக்கித் தவிப்பவர்கள் மனத் துணிவுடன் முக்கிய முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது. அது இன்னொரு திருமணமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் அவசியமில்லை. ஆனால் நேர்மையின் அடிப்படையில் சில பிரிவுகள் அவசியமாகின்றன என்றே எனக்குத் ‌தோன்றுகிறது.
இருவர் தமக்கு விருப்பமான வாழ்வு அமையாதவிடத்து குடும்பம், நட்பு, சுற்றம், சமுதாயம் என்னும் காரணங்களுக்காக மெளனித்திருக்கிறார்கள். இப்படியான வாழ்வில் ஏதும் அமைதி அல்லது திருப்தி ஏதும்  இருக்கிறதா?

இதைப் புரியாத நாமோ ”சமாளித்துப் போ, சமாளித்துப் போ ” என்றதையே கிளிப்பிள்ளை போல் ஆண்டாண்டுகளாய் கூறிக்கொண்டிருக்கிறோம். பிராணவாயு கேட்பவனுக்கு கரிவாயுவை திணிப்பது போலிருக்கிறது இது? இதுவே அவர்களை மரணித்துப்போகவும் செய்கிறது, செய்திருக்கிறது.

வெறுப்பும், கோபங்களும் குரோதங்களாக வடிவெடுத்து வார்த்தைகளாலும், செய்கைகளாலும் தினம் தினம் ஒருவர் மற்றவரின் காயங்களை சீண்டியும்  சீழ்பிடிக்க வைத்தும் சுகம் கண்டு ஒரே கூரையின் கீழ் வாழும் வாழ்க்கை எந்த வகையில் பிரிந்து வாழும் வாழ்க்கையை விட உயர்ந்ததாகிறது?  இப்படியான வாழ்வின் போது  நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பது மட்டுமல்ல எம் குழந்தைகளையும் பாதிக்கிறோம் என்பதே உண்மை என்ப‌தை மறுக்க முடிகிறதா எம்மால்? போலியாய் சுற்றத்துக்காகவும், சமுதாயத்துக்காகவும் வாழ்வதிலும் ஏற்பில்லை எனக்கு. எனது வாழ்வினை நானல்லவா அனுபவித்து வாழவேண்டும். வாழ்கிறேன் என்றபடியே இறந்துகொண்டிருப்பது போலானது போலியாய்  வாழ்வது.

குடுபம்பங்களின் பிரிவுகளின் போது இந் நிலமை பெண்களையையே பெரிதும் பாதிக்கிறது என்பதில் ஐயமில்லை. கணவரை பிரிந்து வாழ்ந்தால் அல்லது விவாகரத்துப்பெற்றால் அவள் ஆட்டக்காரி என்பதில் இருந்து படுக்கயறைவரை பல கதைகளை மென்று தின்றுகொண்டிருக்கிறோமே அன்றி யாராவது அவர்களின் மனதினை புரிந்து கொள்ள முனைந்திருக்கிறோமா? அதே போல் மனம் புரியப்படாமல் வாழ்ந்து துலைக்கும் பல ஆண்களையும் கண்டிருக்கிறேன். துயர் பகிர ஒருவரும் இல்லாத நிலையினை அதை அனுபவித்தவர்களாலேயே புரிந்த கொள்ள முடியும்.

ஆணுக்கிருக்கும் அதே நியாயமான காரணங்கள் பெண்களுக்கும் இருக்கலாமல்லவா?

இப்படியான பிரிவுகளை எவரும் விரும்பி வரவேற்பதில்லை.  பிரிவுகளுக்கு முன்பும், பிரிவின் பின்பும் அவர்கள் கடந்து போகும் வேதனைகள், மன அழுத்தங்கள், அவமானங்கள் என்பதை நாம் ஏனோ மறந்து விடுகிறோம். சமுதாயத்தினரின் ஏளனமான வார்த்தைகளும், பார்வைகளும் இவர்களின் சுய நம்பிக்கையை அழித்து விடுவது பற்றி எவரும் கவலைப்படுவதாய் தெரியவில்லை. பலர் பிரிவின் பின்னான ஆரம்ப காலங்களை தனிமைச்சிறையுனுள் வாழ்ந்து முடிக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்துக்கும் இட்டுச் செல்கிறது.  ஆண்களாயின் மதுவையும் நட்பாகிக்கொள்கின்றனர். மதுவுடனும், மருந்துடனும் வாழ்வினைத் தேடுபவர்களையும் சந்தித்திருக்கிறேன். சிலர் கண்முன்னே தினமும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். சிலர் தோளில் சாய்ந்தழுதும் இருக்கிறார்கள்.

பல நேரங்களில் இப் பிரிவுகள் பெரும் வெறுப்பக்களை இரு பகுதியனருக்கிடையிலும் ஏற்படுத்திப் போகிறது. பிரிவை ஒரு சுமூகமான நிலையில் ஏற்படுத்திக் கொள்பவர்கள் பல சிக்கல்களை இலகுவாகவே கடந்து போகிறார்கள். அதுவே நட்பாகவும் மாறிவிடும் எனின் அங்கு எவரும் தோல்வியுறுவதாயில்லை. குழந்தைகளும் துயரத்திலும் ஒரு மகிழ்ச்சியையே காண்கிறார்கள், புதியதொரு பாடத்தையும் கற்கிறார்கள்.

இன்னும் சிலர் யதார்த்தம் மறந்து, பிரிவின் பின்னும் மற்றவருக்கு தொல்லைகளைத் தந்து இருவரின் நிம்மதியையும் குலைத்துக் கொள்கிறார்கள்.

எஸ்.ரா வின் யாமம் என்னும் புத்தகத்தின் கதை சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெறுகிறது. அதிலும் திருமணமான இருவருக்கிடையில் மனநெருக்கமும் அனூடாக ஏற்படும் உடல் நெருக்கமும் ஏற்படுவதனால் ஏற்படும் சிக்கலை மிக அழகாக விபரித்திருப்பார். காதல் என்பதற்கு காலம் என்பது ஒரு தடையில்லை என்பதைக் குறிக்கவே இதைக் கூறுகிறேன்.

Bridges Of Madison County என்னும் படத்தின் கதையாகட்டும், உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவையின் கதையாகட்டும், எஸ். ரா வின் யாமத்திலாகட்டும் அல்லது எம் கண்முன்னேயே வாழ முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிடமாகட்டும் அவர்கள் எல்லோரையும் காதல் என்னும் ஒரு உணர்வு இணைத்தபடியே இருக்கிறது.

காதல் என்பது பதின்மக்காலத்தில் தான் வரவேண்டும், அல்லது திருமணத்திற்கு முன் தான் வரவேண்டும் என்று விதியா இருக்கிறது? அல்லது காதல் என்பது ஒரு முறைதான் வரலாம் என்றும் விதியிருக்கிறதா என்ன?


எனது ஆதங்கமும் இன்றைய கலைஞர்களுக்கான சவாலும்:

புலம்பெயர் கலைஞர்கள் இன்றைய யதார்த்த உலகின் அம்சங்களை வளமான கருத்துக்களுடன் தங்கள் படைப்புக்களினூடாக வெளிக்கொணர்வது அவசியமாகிறது. அது அவர்களின் கடமையும் கூட

மறுக்கப்படும் மறைக்கப்படும் யதார்த்தங்கள்

 சில நாட்களுக்கு முன் Bridges Of Madison County என்னும் திரைப்படத்தை நண்பர் ஒருவர் பரிந்துரை செய்தார்.  கட்டாயம் பார் என்றும் படத்தை கையிலும் திணித்தனுப்பினார்.

வீடு வந்து Mac னுள் இறுவெட்டை திணித்துவிட்டு தேனிருடன் அமர்ந்தது தான் ஞாபகம் இருக்கிறது. படம் முடியும்வரை வெறொரு உலகில் சஞ்சரித்திருந்தேன். கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு என்று படம் மனதை கொள்ளை கொண்டு போனது.

படத்தின் கருவானது Robert James Waller என்னும் எழுத்தாளரின்  Bridges Of Madison County என்னும் புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்டு திருமணமான வயதான ஒரு குடும்பத்தாய்க்கும், விவாகரத்தான ஒரு வயதானவருக்கும் இடையில் ஏற்படும் காதல் பற்றிக் கூறுகிறது. மிகவும் உணர்வு பூர்வமான முறையில் சிறிது கூட விரசமற்ற முறையில் படத்தினை பதிவாக்கியிருக்கிறார்கள்.

Bridges Of Madison County படத்தின் கதை 4 - 5 நாட்களே நடைபெறுகிறது. இருப்பினும் அவர்களின் காதல் 3 நாட்களுக்குள் எல்லைகள் கடந்து இருவரையும் பின்னிப்பிணைத்துவிடுகிறது.

படத்தினை பார்த்த பின்னான மாலைப் பொழுது கனத்துப் போயிருந்தது எனக்கு. அண்மையில் மம்முட்டியின் ”ஒரே கடல்” மலையாளப் படம் ஒன்றும் திருமணத்திற்கப்பான ஒரு உறவு பற்றிப் பேசியிருந்தது. அப் படத்தினை மலையாளத்தில் பார்த்த போது மனதைக் கவர்ந்து கனக்க வைத்தது.

தமிழில் இப்படியான சிக்கலான உறவு முறைகள் பற்றிய திரைப்படங்களை இயக்குவதற்கு இயக்குனர்கள் தயங்குவதன் காரணம் என்ன? எமது கலாச்சாரத்திற்கு அப்பாட்பட்டது என்று நாம் சில உண்மைகளை மறைக்கிறோம் மறுக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது எனக்கு. அல்லது எமக்குள் இருக்கும் முதிர்ச்சியிற்ற குணாதிசயங்களில் ஒன்றா?

அண்மையில் வாசித்த ஈழத்து எழுத்தாளர் உமா வரதராஜனின் ”மூன்றாம் சிலுவை” நாவல் கூட திருமணமான ஒருவருக்கும் திருமணமாகாத ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறவினை கருவாகக் கொண்டது. ஆனால் அந் நாவலில் ஆண் பெண் பாலுறவு நிலைகள் வர்ணிக்கப்படும் முறை எமது இலக்கிய உலகுக்கு புதியது போலவே நான் உணர்ந்தேன். இங்கும் சிக்கலான விவாதக் கருப்பொருட்கள் பலத்த சர்ச்சையை உருவாக்கியிருந்தன. மொழிகளின் ஆழுமையுடன் கொச்சைத்தன்மை இன்றி வாதிக்க முடியாத கருப்பொருட்டகள் எதும் உண்டா? சற்று சங்கோஜம், தயக்கம் இருப்பதில் தவறில்லை.  அவை நாம் வளர்க்கப்பட்ட முறையை அடிப்படையாகக் கொண்டவை.

அண்மையில் கவிஞர் அறிவுமதியின் ”மழைப்பேச்சு”  அந்தரங்க  நேரத்து கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. அதில் ஒரிடத்தில் ”அந்த நேரத்திற்கு மட்டும் அவசியமாய்த் தேவைப்படுகின்றன சில கெட்ட வார்த்தைகள்” என்று வருகிறது.  அவை எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பதை ‌நாம் அனைவரும் அறிவோம். உண்மையை, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கமிருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. அதே வேளை சொல்ல வேண்டிய கருப்பொருளினை டிவிவாதிக்க வளமான சொற்களுக்கா தமிழில் பஞ்சம்? மழைப்பேச்சு இதற்கு ஒரு உதாரணம்.

வாழ்வின் யதார்த்தங்களை மறைக்காமல் அவற்றின் அம்மணமான குணாதியங்களை ஒரு வளமான மொழிநடையுடன் வர்ணிப்பதோ, காட்சிப்படுத்துவதோ தவறாகாது, அதுவே கலையாகிறது கலைஞனின் திறமையாகிறது அதை கொச்சைப்படுத்தாமல் இருப்பதும் அவனது கடமையாகிறது.

நவீன உலகக்கல்வி, சமூக கலாச்சார உறவு முறைகளுடன் பல ஆண்டுகளாக மேற்கத்திய சமூகத்தில் வாழும் எமது புலம் பெயர்  சமூகத்திலும் இப்படியான உறவுமுறைச் சிக்கல்கள் பல உருவாகிக்கொண்டிருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவற்றில் பல காணாமல் போய்விட்ட அன்பின் தேடுதலாய் இருப்பதாயே உணர வேண்டியிருக்கிறது. ஏன் இலங்கையில் கூட விவாகரத்துக்களின் புள்ளிவிபரங்கள் எம்மில் பலர் விரும்பாத ஒரு வளர்ச்சியையே காட்டுகிறது. அதற்காக நாம் உண்மையை இல்லையென்றுரைக்க முடியுமா?

மணவாழ்வு ‌வாழ்வின் இறுதிவரை மகிழ்ச்சியாய் தொடருமெனின் அவர்கள் அதிஸ்டசாலிகள். ஆயினும் அப்படியான வாழ்வு வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?  பலர் இடைக்காலங்களிலேயே வாழ்வினை மாற்றியமைக்க முனைகின்றனர்.  அதற்கான  காரணங்களை ஆராய்வது இவ்விடத்தில் அவசியமற்றது. ஆனால் பரஸ்பர ஒற்றுமையும், அன்பும், சமத்துவமும் இல்லாது போவதே முக்கிய காரணிகளாய் இருக்கின்றன.

சில இடங்களில் திருமண உறவு முறிய முன்பே சில மனங்கள் ஒன்று பட்டுவிடுகின்றன. அப்படியான உறவு முறைகளுக்கிடையில் ஏற்படும் பிணைப்புக்களை நாம் ”கள்ளக்காதல்” என்று உதாசீனப்படுத்துவதில் எனக்கு ஏற்பில்லை. அது அவர்களின் வாழ்வு, அவர்களின் தேர்வு. அவற்றை மதிப்பதிலேயே மனிதம் இருக்கிற‌தே அன்றி காலாச்சார காவலர்களின் கண்ணாடியை நாம் அணிந்து கொண்டு அவர்களை மென்று தின்பதில் அல்ல.

ஆனால் இப்படியான உறவுகளில் சிக்கித் தவிப்பவர்கள் மனத் துணிவுடன் முக்கிய முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது. அது இன்னொரு திருமணமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் அவசியமில்லை. ஆனால் நேர்மையின் அடிப்படையில் சில பிரிவுகள் அவசியமாகின்றன என்றே எனக்குத் ‌தோன்றுகிறது.
இருவர் தமக்கு விருப்பமான வாழ்வு அமையாதவிடத்து குடும்பம், நட்பு, சுற்றம், சமுதாயம் என்னும் காரணங்களுக்காக மெளனித்திருக்கிறார்கள். இப்படியான வாழ்வில் ஏதும் அமைதி அல்லது திருப்தி ஏதும்  இருக்கிறதா? இதைப் புரியாத நாமோ ”சமாளித்துப் போ, சமாளித்துப் போ ” என்றதையே கிளிப்பிள்ளை போல் ஆண்டாண்டுகளாய் கூறிக்கொண்டிருக்கிறோம். பிராணவாயு கேட்பவனுக்கு கரிவாயுவை திணிப்பது போலிருக்கிறது இது? இதுவே அவர்களை மரணித்துப்போகவும் செய்கிறது, செய்திருக்கிறது.

வெறுப்பும், கோபங்களும் குரோதங்களாக வடிவெடுத்து வார்த்தைகளாலும், செய்கைகளாலும் தினம் தினம் ஒருவர் மற்றவரின் காயங்களை சீண்டியும்  சீழ்பிடிக்க வைத்தும் சுகம் கண்டு ஒரே கூரையின் கீழ் வாழும் வாழ்க்கை எந்த வகையில் பிரிந்து வாழும் வாழ்க்கையை விட உயர்ந்ததாகிறது?  இப்படியான வாழ்வின் போது  நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பது மட்டுமல்ல எம் குழந்தைகளையும் பாதிக்கிறோம் என்பதே உண்மை என்ப‌தை மறுக்க முடிகிறதா எம்மால்? போலியாய் சுற்றத்துக்காகவும், சமுதாயத்துக்காகவும் வாழ்வதிலும் ஏற்பில்லை எனக்கு. எனது வாழ்வினை நானல்லவா அனுபவித்து வாழவேண்டும். வாழ்கிறேன் என்றபடியே இறந்துகொண்டிருப்பது போலானது போலியாய்  வாழ்வது.

குடுபம்பங்களின் பிரிவுகளின் போது இந் நிலமை பெண்களையையே பெரிதும் பாதிக்கிறது என்பதில் ஐயமில்லை. கணவரை பிரிந்து வாழ்ந்தால் அல்லது விவாகரத்துப்பெற்றால் அவள் ஆட்டக்காரி என்பதில் இருந்து படுக்கயறைவரை பல கதைகளை மென்று தின்றுகொண்டிருக்கிறோமே அன்றி யாராவது அவர்களின் மனதினை புரிந்து கொள்ள முனைந்திருக்கிறோமா? அதே போல் மனம் புரியப்படாமல் வாழ்ந்து துலைக்கும் பல ஆண்களையும் கண்டிருக்கிறேன். துயர் பகிர ஒருவரும் இல்லாத நிலையினை அதை அனுபவித்தவர்களாலேயே புரிந்த கொள்ள முடியும்.

ஆணுக்கிருக்கும் அதே நியாயமான காரணங்கள் பெண்களுக்கும் இருக்கலாமல்லவா?

இப்படியான பிரிவுகளை எவரும் விரும்பி வரவேற்பதில்லை.  பிரிவுகளுக்கு முன்பும், பிரிவின் பின்பும் அவர்கள் கடந்து போகும் வேதனைகள், மன அழுத்தங்கள், அவமானங்கள் என்பதை நாம் ஏனோ மறந்து விடுகிறோம். சமுதாயத்தினரின் ஏளனமான வார்த்தைகளும், பார்வைகளும் இவர்களின் சுய நம்பிக்கையை அழித்து விடுவது பற்றி எவரும் கவலைப்படுவதாய் தெரியவில்லை. பலர் பிரிவின் பின்னான ஆரம்ப காலங்களை தனிமைச்சிறையுனுள் வாழ்ந்து முடிக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்துக்கும் இட்டுச் செல்கிறது.  ஆண்களாயின் மதுவையும் நட்பாகிக்கொள்கின்றனர். மதுவுடனும், மருந்துடனும் வாழ்வினைத் தேடுபவர்களையும் சந்தித்திருக்கிறேன். சிலர் கண்முன்னே தினமும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். சிலர் தோளில் சாய்ந்தழுதும் இருக்கிறார்கள்.

பல நேரங்களில் இப் பிரிவுகள் பெரும் வெறுப்பக்களை இரு பகுதியனருக்கிடையிலும் ஏற்படுத்திப் போகிறது. பிரிவை ஒரு சுமூகமான நிலையில் ஏற்படுத்திக் கொள்பவர்கள் பல சிக்கல்களை இலகுவாகவே கடந்து போகிறார்கள். அதுவே நட்பாகவும் மாறிவிடும் எனின் அங்கு எவரும் தோல்வியுறுவதாயில்லை. குழந்தைகளும் துயரத்திலும் ஒரு மகிழ்ச்சியையே காண்கிறார்கள், புதியதொரு பாடத்தையும் கற்கிறார்கள்.

இன்னும் சிலர் யதார்த்தம் மறந்து, பிரிவின் பின்னும் மற்றவருக்கு தொல்லைகளைத் தந்து இருவரின் நிம்மதியையும் குலைத்துக் கொள்கிறார்கள்.

எஸ்.ரா வின் யாமம் என்னும் புத்தகத்தின் கதை சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெறுகிறது. அதிலும் திருமணமான இருவருக்கிடையில் மனநெருக்கமும், உடல் நெருக்கமும் ஏற்படுவதனால் ஏற்படும் சிக்கலை மிக அழகாக விபரித்திருப்பார்.  காதல் என்பதற்கு காலம் என்பது ஒரு தடையில்லை என்பதைக் குறிக்கவே இதைக் கூறுகிறேன்.

Bridges Of Madison County என்னும் படத்தின் கதையாகட்டும், உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவையின் கதையாகட்டும், எஸ். ரா வின் யாமத்திலாகட்டும் அல்லது எம் கண்முன்னேயே வாழ முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிடமாகட்டும் அவர்கள் எல்லோரையும் காதல் என்னும் ஒரு உணர்வு இணைத்தபடியே இருக்கிறது.

காதல் என்பது பதின்மக்காலத்தில் தான் வரவேண்டும், அல்லது திருமணத்திற்கு முன் தான் வரவேண்டும் என்று விதியா இருக்கிறது? அல்லது காதல் என்பது ஒரு முறைதான் வரலாம் என்றும் விதியிருக்கிறதா என்ன?


எனது ஆதங்கமும் இன்றைய கலைஞர்களுக்கான சவாலும்:

புலம்பெயர் கலைஞர்கள் இன்றைய யதார்த்த உலகின் அம்சங்களை வளமான கருத்துக்களுடன் தங்கள் படைப்புக்களினூடாக வெளிக்கொணர்வது அவசியமாகிறது. அது அவர்களின் கடமையும் கூட.


வயோதிபத்தின் வரலாறு

சில நாட்களுக்கு முன் ஒரு மாலை நேரம் ஒருவர் கணணி உதவி வேண்டும் என்று அழைத்திருந்தார்.  அவரின் பேச்சிலிருந்தே அவர் வயதானவர் எனப் புரிந்தது. முதல் உரையாடலிலேயே தனது கணணிப் பிரச்சனை ஒரு குடும்பபிரச்சனையில் இருந்து ஆரம்பிக்கிறது என்று அந்தக் குடும்பப் பிரச்சனையை விளக்க ஆரம்பித்தார். வயதானவர் என்பதால் நானும் மிக ஆறுதலாக “அம்மா நீங்கள் உங்கள் கணணிப் பிரச்சனையை மட்டும் கூறுங்கள்“ என்று சொன்னதையெல்லாம் அவர் இந்தக் காதால் கேட்ட அந்தக் காதால் விட்டபடியே குடும்பப் பிரச்சனையை கூறிக்கொண்டிருந்தார். ஏறத்தாள 5 நிமிடங்களின் பின் கணணிக்கு வந்தார்.  எனது கணணியை திருத்த முடியுமா என்றார். கணணியின் பிரச்சனை என்ன என்று மீண்டும் கேட்டால் குடும்பக்கதையின் பாகம் இரண்டு ஆரம்பித்துவிடும் என்ற பயத்தில் விலாசத்தினை வாங்கிக்கொண்டு நாளை வருவதாகக் கூறினேன்.

அமைதியான ஒரு பிரதேசத்தில் அமைந்திருந்தது அவரது வீடு . அவரின் வீட்‌டுக்குச் சென்று கதவைத் தட்டினேன்.  மெதுவாய் வந்து கதவைத் திறந்து கையைக் குலுக்கியபடியே எனது கணணியின் பிரச்சனை என்னவென்றால் என்று தனது குடும்ப பிரச்சனையில் ஆரம்பித்தார். எனக்கு வாகனத்தை நிறுத்திவைப்பதற்கான அனுமதிப்பத்திரம் தேவையாயிருக்கிறது அல்லது எனக்கு தண்டம் விதிப்பார்கள் என்றேன்.  அதை அவர் கவனிப்பதாயில்லை. வாசலில் நிறுத்திவைத்துக் கொண்டே கதை சொல்லிக்கொண்டிருந்தார். வயதானவர் என்பதால் குரலை உயர்த்தி கதைக்கவும் முடியவில்லை. மீண்டும், எனககு வானக அனுமதிப்பத்திரம் வேண்டும் என்ற போது அதை எடுத்துத் தந்தார். வாகனத்தில் வைத்துவிட்டு வந்தேன்.

அவரது குடும்பக்கதை இப்படி இருந்து. அவருக்கு வயது 70. கணவர் 10 வருடங்களாக அல்ஸ்ஹைமர் என்னும் ஞாபகமறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாக கணவரை வயோதிபர்களை கவனிக்கும் ஒரு இல்லத்தில் வைத்து கவனித்துவருகிறார். இவர்களுக்கு இரு புத்திரிகள். முதலாமவரின் கணவர் நல்லவர். இப்போது அவர்களுக்கிடையில் விவாகரத்தாகிவிட்டது. அவர் தான் இவருக்கு கணணியை உபயோகிக்க கற்பித்தாராம். இளைய மகளுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பணக்கஸ்டம் வந்த போது இவர் பெருந்தொகை கொடுத்த உதவியிருக்கிறார். கணவருக்கு சுகயீனமாகிய பின் பணம் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. இவரும் கேட்டிருக்கிறார்.  மகளும் மருமகனும் மறுத்திருக்கிறார்கள். பேரக்குழந்தைகளையும் தொடர்புகொள்ள விடுவதில்லையாம். மீண்டும் மீண்டும் பணத்தை இவர் கேட்டதால் மருமகன் இவரை வெருட்டியிருக்கிறார். இவரது மூத்த மகளையும் அவர்கள் தம் பக்கம் இழுத்ததனால் இவருக்கு ஆதரவாய் எவரும் இல்லை. இவரது வீட்டுத் திறப்பு அவர்களிடம் இருந்திருக்கிறது. இந் நிலையில் இவரது வீட்டுக்குள் அவர்கள் நுளைந்து ஏதோ செய்திருக்கிறார்கள் என இவர் அறிந்து கொண்டாராம். அதன் பின் கணணியினுள்ளும் அவர்கள் அத்துமீறி நுளைவதாக இவர் நினைக்கிறார். தனது செயற்பாடுகளை  அவர்கள் கணணியின் முலமாக துப்பறிவதாக இவர் சந்தேப்ப்படுகிறார்.

நான் அவர் கூறிய கதையின் சாரத்தை மட்டுமே கூறியிருக்கிறேன். அவர் தனது கதையினைக் கூறிமுடிக்க ஏறத்தாள 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். சிறு குழந்தை ஒன்றை அநாதரவாக விட்டது போல் இருந்தது அவரின் பேச்சும் நடவடிக்கைகளும். எதையும் சந்தேகத்துடன் பார்த்தார். வீடு எங்கும் பொருட்கள் நிறைந்திருந்தன. அவரால் அந்தளவு பெரிய வீட்டை பராமரிக்க முடியாதிருந்தது. இரண்டு மாடிகளுக்கும் ஏறி இறங்க அதிகமாக நேரத்தினை எடுத்துக் கொண்டார். தனது முழங்கால்களின் செயற்பாடுகள் குறைந்திருப்பதாயும், மிகுந்த வலியை தருவதாயும்  கூறினார். கண்களில் அச்சம் இருந்தது. குரல் அடிக்கடி தழுதழுத்தது.

அவரின் கணணிக்கு தேவையான பாதுகாப்புக்களையும் அவர் இணையத்தில் பாவிக்கும் ஒரு சமூகவலைத்தளத்துக்கு ரகசியச்சொல்லையும் மாற்றிக் கொடுத்தேன். தற்போது உங்கள் கணணிக்குள் யாரும் வரமுடியாது என்று கூறிய போது. அப்பாடா என்று கைகளை கூப்பி பெருமூச்சு விட்டார். இருப்பினும் இன்னும் பல தடவைகள் அவரது சந்தேகங்களை கேட்டுத் தீர்த்தக் கொண்டார். அவரின் நிர்க்கதியான நிலையும், வயோதிபத்தின் வலியும் மிகவும் பரிதாபமாக இருந்தது.

அவரிடமிருந்து புறப்பட்ட போது பல தடவைகள் நன்றி சொன்னார். சற்று நேரம் கையைகுலுக்கியபடியே பேசிக்கொண்டிருந்து விடைதந்தார். நானும் வாகனத்தை நிறுத்தி வைப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை திரும்பவும் அவரிடம் கொடுத்துவிட்டு புறப்பட்‌டேன்.

மனதுக்குள் பல நாட்களாக தொடர்பு இல்லாமல் இருக்கும், மேற் கூறிய பெண்ணை விட பல வயதுகள் அதிகமான, தனியே வாழும் எனது அம்மாவின் ஞாபகம் முகத்திலடிக்க இன்றை இந்த பெரியவரும் எனக்கு எதையோ போதிக்கிறார் என்பதும் புரிந்தது.


இன்றைய நாளும் நல்லதே.