விடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா

இன்று (18.06) மாலை இயக்குனர் பாலாவின் ”அவன் - இவன்” திரைப்படம் பார்க்கச்சென்றிருந்தேன். படம் முடிந்து வெளியேறிய பின் இயக்குனர் பாலாவிடம் எனக்கு இருந்த மரியாதை தொலைந்திருக்கிறது.

படத்தில் ”ஹைனஸ்”  (பெருமரியாதைக்குரியவர் - மேதகு) என்னும் பெயரில் ஒரு கதாபாத்திரம் உள்ளது. இவர் காட்டில் வேட்டையாடுவது போலவும், அவர் புலிப்பொம்மையை தன் காலடியில் வைத்திருப்பது போலவும் ஒரு காட்சி வருகிறது. இதை விட படத்தில் ராஜபக்சே என்று ஒரு சொல்லும் வந்து போகிறது.

திரு ”ஹைனஸ்”  கொலை செய்யப்படுகிறர். இவர் கொலை செய்யப்பட முன் நிர்வாணமாக்கப்பட்டு வில்லனினால்  சேற்றினுள்  ஓட விடப்பட்டு அடித்துக் கொல்லப்படுகிறார். கொலை செ்யப்பட்ட பின் அவர் நிர்வாணமாக ஒரு மரத்தில் தொங்கவிடப்படுகிறார்.அவரின் உடம்பு மழுவதும் சேறு அப்பிக் கிடக்கிறது. கதாநாயகன் அவரை மரத்தில் இருந்து இறக்கியெடுக்கிறார்.

இந்தக் காட்சிகளைப் பார்க்கும் எவருக்கும் இக்காட்சிகளின் பின்புலம் எதைச் சுட்டுகிறது என்பது மிகத் தெளிவாகவே புரியும். தமிழீழ விடுதலைப் பலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறுதி நிமிடங்கள் எவ்வாறு இருந்திருக்கும் என்று கூறப்படும் சில கருத்துக்களை உள்ளடக்கியும், அவர் கொலைசெய்ப்பட்ட பின் காண்பிக்கப்பட்ட உடலில் இருந்த சேறு,  மிகக் குறைவான உள்ளுடுப்புக்கள்  போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டும் இக்காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, இயக்குனர் பாலா ”அங்கு” நடந்ததை இங்கு சிம்பாலிக்காக காட்டுகிறார்.

ஈழத்தமிழர்களில் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது வைத்திருந்த மரியாதையை நாம் அறிவோம். தவிர, அவர் மேதகு (”ஹைனஸ்”) என்னும்  சொற்களைப் பாவித்தும் அழைக்கப்பட்டார் என்பதையும் நாம் அறிவோம். விடுதலைப் பலிகளின் மேல் பற்றுளவராய் இருப்பதோ, இல்லாதிருப்பதோ அவரார் சிந்தனைக்குட்பட்ட செயல். மனிதனாக எவனும் சகமனிதனின் கருத்துக்களை மதிக்க வேண்டும் என்பது மானுடத்தின் எழுதாத விதிகளில் ஒன்று. கருத்துவேறுபாடுகளை தாண்டியும் நண்பர்களாய் இருக்க முடியும் என்பது எனது கருத்து.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியும், தமிழீழ விடுதலைப்பலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதும் ஈழத்தமிழரில் பெரும் பகுதியினரின் மனநிலையை மிகக் கடுமையாக பாதித்திருக்கும் இந் நாட்களில்,  இயக்குனர் பாலா இவ்வாறு தனது திரைப்படக் காட்சிகளை அந் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி காண்பித்திருப்பது மிகவும்  அநாகரீகமான, பண்பற்ற, கண்டிக்கத்தக்க செயல்.

சில வேளைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன  மீது இயக்குனருக்கு பலத்த விமர்சனம் இருக்கலாம். அதையே அவர் இப்படிக் காட்ட முயற்சித்திருக்கலாம். எம்மில் பலருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பலத்த விமர்சனங்கள் இருக்கின்றன. மாற்றுக்கருத்தாளர்கள், தமிழீழ விடுதலைப்பலிகளின் விமர்சகர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் கூட இயக்குனர் பாலா செய்தது போன்ற அநாகரீகமான செய்கைகளை இக் கால கட்டத்தில் செய்யவில்லை. பலரும் ஏனைய ஈழத்தமிழரின் வலிகளை புரிந்து கொண்டு மனிதாபிமானமாகவே நடக்கிறார்கள். அதுவே புரிந்துணர்வுள்ளவர்களின் பண்பு. இவர்களுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இயக்குனர் பாலாவுக்கு இல்லாதிருக்கிறது என்பது மிகவும் வேதனையாகது.

இயக்குனர் பாலாவோ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலை மிகச் செவ்வனே செய்திருக்கிறார் என்பது எனது கருத்து. அச் செயலை நான் பலமாகவே கண்டிக்கிறேன்.

ஈழத்தமிழ் மக்களை  ஏளனம் செய்யும் பல தென்னிந்திய கலைஞர்கிளின் வரிசையில் இயக்குனர் பாலாவும் இணைத்திருப்பது வருத்தத்துக்குரியது.

இப்படியேதும் செய்தால் தான் மத்திய அரசிடம் இருந்து தேசியவிருது கிடைக்குமோ?  மக்களின் மனம்நொந்த விருது எதுவும் கலைஞனுக்கு பெருமை சேர்க்காது என்பது நான் சொல்லித்தானா இயக்குனர் பாலாவுக்கு புரியவேண்டும்.

இப் பதிவு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்டதல்ல. சகமனிதனின் வலிகளை புரிந்து கொள்ளாமல் அவர்களின் மனதினை புண்படுத்தும் இயக்குனர் பாலாவின் செய்கையை நான் ஆதரிக்கவில்லை என்பதற்காகவே எழுதப்பட்டது.


.

42 comments:

 1. naan innum padam parkkalai appidi irunthaal
  savadippanda unnai naan
  paalaa

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. Your imagination is good.
  Even if we assume your imagination is right, just because showing somebody's death, how is it damaging his reputation?

  Is this called "feeling important" or paranoid?

  Summa adichi vidunga sir. kaasa panama :)

  ReplyDelete
 4. mottai thalaikum mulagallkum mudichi. Enga veeta kolliala erira light la thaan nila piragasikuthunu naan kuda ore post elutha mudium, padikaravanga nambara mathiriye points eluthalam, aana athu unmai aagathu.

  Pachai kannai potutu patha, pakarathu ellam pachaiya thaan irukum.

  ReplyDelete
 5. அனானி நண்பரே! இது உங்கள் கருத்து. படம் பார்த்துவிட்டு வந்த பலரின் கருத்தும் இது தான். நான் பேசுவது கலைஞர்களுக்கு இருக்கவேண்டிய பண்பு பற்றியது. இதில் "feeling important" or paranoid எதுவுமில்லை.

  ReplyDelete
 6. //இதை விட படத்தில் ராஜபக்சே என்று ஒரு சொல்லும் வந்து போகிறது.//
  அது படத்தில் எந்த contextல் வருகிறது என்பதை கூட புரியாத உங்களிடம் உரையாடுவது கடினம்.

  //பினாத்தி.. எழுதியது விசரன்//
  சத்தியம்

  ReplyDelete
 7. இயக்குனர் பாலா மீது எந்த தவறும் இல்லை. பிரபாகரனை ஏளனம் செய்வது ஈழத்தமிழ் மக்களை ஏளனம் செய்வது என்று இல்லை.கருணாநிதி, ஜெயலலிதாவை ஏளனம் செய்வது இந்திய தமிழர்களை ஏளனம் செய்வது என்று இல்லை.(அவர்களாவது இந்திய தமிழர்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள்)

  ReplyDelete
 8. baleno @ இயக்குனர் பாலா பிரபாகரனை எதுவும் செய்யட்டும்.அது அவரின் தனிப்பட்ட கருத்து - செயல். எனது ஆதங்கம் அவர் ஏற்கனவே காயப்பட்டிருககும் மனங்களை ஒரு கலைஞனுக்குரிய பண்புகள் இன்றி மேலும் காயப்படுத்தியதே.

  ReplyDelete
 9. You can imagine like this on Tamil Movies. I dont see any connection with Prabakaran and the movie. Dont create any new issues

  ReplyDelete
 10. Bommiah @ நான் மட்டுமில்லை பலரும் அவதானித்த விடயமிது. எனவே அக் காட்சிகள் பலரின் மனதையும் கீறியிருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது.

  ReplyDelete
 11. சகோ, இந்தப் படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை, ஆனாலும் பாலாவின் இச் செயல்...பலரது மனங்களிலும் நீங்கள் பதிவில் எழுதியது போன்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விடயம் தான்.
  கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்பதற்கு அப்பால்,
  பாலாவின் செயலானது புரிந்துணர்வற்ற வகையில் பலரது உணர்வுகளை உதாசீனம் செய்து கேலிக்குள்ளாக்கும் செயல்.

  ReplyDelete
 12. நண்பா நான் இப்படத்தைப் பார்த்தேன். தாங்கள் ஒரு சாதாரண காட்சியில் வந்த ஒரு விடயத்தை ஒரு குறியீடாகக் கருதியதோடு மட்டுமல்லாது அதற்கு ஒரு விளக்கத்தையும் புனைந்துள்ளீர். இது போல திரைப்படங்களை அணுகுதல் நல்லதல்ல. அது பலரின் தவறான புரிதலுக்கு ஆரம்பப் புள்ளியாவது உவப்பானதல்ல.

  ReplyDelete
 13. இந்த குப்பை படத்திற்கு விமர்சம் தேவையா நண்பரே?.எவரும் பார்க்க விரும்பினால் அரங்கிற்கு சென்று அரும்பாடு பட்டு சம்பாதித்த பணத்தையும்,நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.நீங்கள் சொன்னதும் யோசித்தால் அப்படித்தான் தெரிகின்றது.குப்பைகளை ஒதுக்குவோம்.

  ReplyDelete
 14. நம் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்.நான் இந்த படம் பார்த்துவிட்டேன் நண்பரே.அண்ணன் பாலா சிறந்த தமிழீழ உணர்வாளர்.அவருடன் எனக்குள்ள பழக்கத்தை வைத்தே சொல்கிறேன்.நிச்சயம் அவர் தலைவரை இப்படி செய்யமாட்டார்...

  karthik

  ReplyDelete
 15. வேலியில போற ஓணான வேட்டிக்குள்ளார புடிச்சு விட்டுப்புட்டு கூச்சல் போடுறா. இதுக்கு யார் என்னத்த பண்ணமுடியும். இப்படியே போனாக்கா பல்லி பாம்பு பூச்சி பூரான் எல்லாத்தையும் புடிச்சு யட்டிக்குள்ளார விட்டுப்புட்டு கத்திக்கிட்டே இருக்கலாம். என்னவோ பதிவு போட்டுத் தொலைங்க.

  ReplyDelete
 16. தம்பி பாலா பற்றிய அண்ணன் விசரன் தனது பார்வையை படம் பார்த்த பலரின் எண்ணமும்
  என சொல்வதில் நியாமில்லை. மத்திய அரசு விருது தருவதை எண்ணியே படம் செய்கிற
  தேவையை கடந்த கலைஞர் தம்பி பாலா. 'விசரன்' எண்ண தமிழ்?
  பாலாவின் பதிவில் தப்பிதம் கற்ப்பிப்பதில் உங்களுக்கு என்ன தகுதி?
  பல சிங்கள லாலி பாடும் தமிழ் போர்வை பெயராளிகளில் ஒருவராக எனக்கு
  உங்களை தெரிகிறது. உங்கள் சங்கை வீணாக ஊதி கெட வேண்டாம்,
  வேறு நல்ல ஆய்வு பணி செய்க,

  ReplyDelete
 17. //தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியும், தமிழீழ விடுதலைப்பலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதும் ஈழத்தமிழரில் பெரும் பகுதியினரின் மனநிலையை மிகக் கடுமையாக பாதித்திருக்கும் இந் நாட்களில், இயக்குனர் பாலா இவ்வாறு தனது திரைப்படக் காட்சிகளை அந் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி காண்பித்திருப்பது மிகவும் அநாகரீகமான, பண்பற்ற, கண்டிக்கத்தக்க செயல்.//

  பிராபகரன் இறக்கவில்லை என்று பழநெடுமாறன், சீமான், வைகோ உள்ளிட்டவர்கள் சொல்லி வருகிறார்கள், அப்படி இருக்கும் போது நீங்கள் அவர் இறந்ததாகச் சொல்லி அதில் பாலாவின் படத்தையும் கோர்த்துவிடும் உங்கள் ஆதங்கம் ஐயத்திற்குரியது.

  ReplyDelete
 18. கோவி.கண்ணன் @ நண்பரே! எனக்கு அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லையே. அது அவர்களின் கருத்து. இது எனது கருத்து. ஐயப்படுவது உங்கள் உரிமை. இம் மூன்றுக்கும் இந்த பரந்த உலகில் இடமிருக்கிறது.

  ReplyDelete
 19. Harrispan @ திரு கோவி.கண்ணன அவர்களுக்கு கூறிய பதிலே உங்களுக்கும்.தவி, தகுதி தேவை இல்லை சுயமாய் சிந்திக்க.

  ReplyDelete
 20. neengal thamizhar eedupaadu ullavar maathiri theriyavillai. veenaana vilambaram theadum manithar poal irukkirathu. aaraainthu piraku ezhuthungal. nandri

  ReplyDelete
 21. POda vennai Visaran. Blog irunda enna venumunnalum eludhalaama..unaku enna thagudhi irukku? LIkes venumunna, neeya like pannittu iru.chumma bala pera ilukaadha.


  P.S. Anonymous status is my right as you say that each has his own right in this broad world.


  dhil irundha, publish pannuda dei.

  ReplyDelete
 22. Bleachingpowder @ ஆம் . அது ஒரு நகைச்சுவைக் காட்சியில் வந்து போகிறது. அதாவது எமது பிரச்சனை அவரது சிந்தனையில் இருந்திருக்கிறது என்பதற்கு அதுவும் ஒரு உதாரணம் என்பதற்காகவே நான் அதைக் குறிப்பிட்டேன்.

  selvaraj @ தமிழர் ஈடுபாடு என்பதற்கு முன் மனிதநேயம் என்பது வருகிறது.

  Anonymous @ நன்றி உங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 23. அதெல்லாம் இருக்கட்டும் , நீங்க இவகள காப்பி அடிச்சிங்களா? இல்லே அவங்க உங்கள காப்பி அடிச்சாங்களா? see this ....... "http://www.thedipaar.com/cinema/cinema.php?id=7724

  ReplyDelete
 24. அதெல்லாம் இருக்கட்டும் , நீங்க இவகள காப்பி அடிச்சிங்களா? இல்லே அவங்க உங்கள காப்பி அடிச்சாங்களா? see this ....... "http://www.thedipaar.com/cinema/cinema.php?id=7724

  ReplyDelete
 25. காப்பி அடிப்பவர் நான் இல்லை.
  ஏன் என்றால், செய்தி சொல்பவர் ”நான்” ”நான்” என்று சொல்லியா செய்திகளை சொல்வார்கள்? ஈஅடிச்சான் காப்பி என்பது இது தான்.
  அது பற்றி அறியத் தந்ததுக்கு மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 26. அது புண்படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை. நடந்ததை பாலா எடுத்துள்ளார். அவரின் சாவை பார்த்து பழி வாங்குறானே ஒருத்தன். அது தெரியலையா உங்களுக்கு ? சும்மா உளறாதீங்க. பாலா சிறந்த தமிழர்.

  ReplyDelete
 27. Hello sir
  Please do not mess up things with your own imaginations.....it is all about a film which was brought by bala with his own imaginations.....if your say is correct....then we can link out day to day life incidents with any past event....please come out from your dirty imaginations....

  ReplyDelete
 28. இனிய நண்பரே
  உங்களின் உணர்வுகள் எனக்கு புரிகிறது ஆனாலும் இப்படி எதை எடுத்தாலும் ஏதாவது ஒன்றோடு தொடர்பு படுத்தி குறை கூறினால் படைப்பாளியின் சுதந்திரம் பறிக்க பட்டதாக அர்த்தம் ஆகாதா , மேதகு அல்லது ஹைனஸ் என்ற வார்த்தைகள் அவர் ஒருவருக்காகவா உருவாக்கப்பட்டது, புலியை வளர்ப்பதும் பதப்படுத்தி வைப்பதும் தமிழ்க் அரசர்களின் ஜமீன்தார்களின் வழக்கம், இதை போய் நீங்கள் சம்பந்தபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்

  ReplyDelete
 29. திரு விசரன், நான் உங்கள் கருத்தை கண்டிக்கிறேன், ஈழப்போர் நடந்த நேரத்தில் தமிழ்நாட்டில் எழுந்த எழுச்சியும் உயிரை விட்டவர்களையும் நீங்கள் கொச்சைபடுத்தி விட்டீர்கள். எங்கோ அகதியாய் சென்ற நாட்டில் வசதியாய் உட்கார்ந்து பேசுகிறீர்கள், எங்களின் பலருக்கு பிரபாகரன் இன்றும் பலருக்கு தெய்வம் தான், அதனால் தான் கடைசி காட்சியில் வில்லனை உயிருடன் கொளுத்துவார்கள். கடைசி காட்சி மூலம் பிரபாகரனை கொன்ற ராஜபக்சே செத்ததுபோல் உணர வேண்டும், அதை விட்டு விட்டு ஒரு கலைஞனை குறைகூற கூடாது. ராஜபக்சே நுழைந்தான் என்ற காரணத்தால் திருப்பதி கோவிலுக்கு செல்வதை நிறுத்தியவன் நான்.

  நீங்கள் குறை கூற வேண்டியது பரிதாபப்படும் உறவுகளை அல்ல, கொடுங்கோலனுக்கு உதவும் மற்ற நாடுகளை.

  ReplyDelete
 30. தயவு செய்து படத்தை இன்னொரு முறை பார்த்து விட்டு எழுதுங்கள். பாலாவை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு.சீமான்,அமீர்,சசி,பாலுமஹேந்திர,பாலா என்று அனைவரும் ஒரே இயக்குனரின் செல்ல பிள்ளைகள். இவர்களின் அனைவரின் என்ன ஓட்டமும் ஒரே போலதான். சீமானை முதல் முதலில் ராமேஸ்வரத்தில் பேச வைத்ததே பாலா தான். அந்த வீடியோ கிடைத்தாலும் பாருங்கள்,சீமானே அதை சொல்லி இருப்பார். பாலாவுக்கு இருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், அவருடைய படத்தையும் புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம் நண்பரே. படத்தில் ராஜபக்ஷேவை கிண்டல் செய்யும் காட்சி தான் இருக்கிறது. இது கூட புரியாமல் என்னையா படம் பார்த்தீர். இலங்கைக்கு ஆயும் கடத்துவதால் அங்கு பாதிக்க படுவது தமிழன் தான் என்று உரக்க குரல் கொடுத்து நந்தா படத்தையும் இவர் தான் எடுத்தார். அந்த படத்தையாவது புரிந்து பார்த்தீர்களா,இல்லையா?

  ReplyDelete
 31. வணக்கம் ராஜகோபாலன்!

  படைப்பாளியின் சுதந்திரம் எவ்வளவு முக்கிமோ அதை விட அதிகளவு முக்கியமானது அவரின் மனிதநேயம்.
  படத்தை படைக்கும் போது அவர் இலங்கைப் பிரச்சனையை ஒரு நகைச்சுவைக்காட்சியாகக் காட்டுவதன் முலம் இலங்கைப்பிரச்சனை அவரின் கதையுனுள் நகைச்சுவையூடாக உட்புகுகிறது.
  தொடர்ந்து ஹைனஸ் என்னும் பெயர் ( அது ஜமீன்களை அழைக்க பாவிக்கப்பட்டதா, வேறு பெயர்களை பாவித்திருக்க முடியாதா?)
  புலியை மட்டுமா வேட்டையாடினார்கள் ( வேறு மிருகம் கிடைக்கவில்லையா)
  கொலைக் காட்சி (இதை வேறு விதமாக காட்டியிருக்க முடியாதா)

  நான் வெறுமனே ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு கூச்சலிடவில்லை. திரைப்படத்தை என்னுடன் பார்த்த எனக்கு அறிமுகமில்லாத சிலரும் விசனப்பட்ட பின்பே இது பற்றி எழுதினேன். நான் படத்தை விமர்சிக்கவில்லை. அவர் அக் காட்சியமைப்புக்களை மாற்றியமைத்திருந்தால் பல மனங்கள் கீறப்பட்டிருக்காது என்பதே எனது கருத்து. ஈழத்தமிழனாய் இருந்து எம்மக்களின் இன்றைய மனநிலையை அறிந்தவர்களால் மட்டுமே இந்த நுண்ணிய உணர்வினை புரிந்த கொள்ளமுடியும்.

  ReplyDelete
 32. அன்புடன் விசரனுக்கு, பாலா உண்மையான தமிழ் உணர்வாளர். தமிழ் உணவாளர்கள் அனைவரின் மீதும் இதைப்போன்ற அறைவெக்காட்டுத்தனமான குற்றச்சாட்டுக்களை கூறி நம்மிடையெ வேறுபாடுகளை உண்டாக்கும் உங்களைப்போண்றோர்கள்தான் ராஜாபாக்செயின் நண்பர்கள்.இலங்கைதமிழர்களை கொல்ல ராஜபாக்செ வேண்டாம் உங்களை போன்றவற்கலே பொதும்.உங்களுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ்னாட்டு தமிழர்களை வெறுப்புக்கு உள்ளாக்காதீற்கள்.

  ReplyDelete
 33. இந்த மாதிரி சம்பந்தமே இல்லாம கோத்து விட்டு எழுதினது எதற்கு என்று உங்களுக்காவது வெளங்கட்டும்.

  இது மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சி போட்ட கதையாத்தான் படுது.

  ReplyDelete
 34. ஈழத்தமிழ் மக்களை ஏளனம் செய்யும் பல தென்னிந்திய கலைஞர்கிளின் வரிசையில் இயக்குனர் பாலாவும் இணைத்திருப்பது வருத்தத்துக்குரியது.

  தமிழர்களை அவமானப்படுத்தயது,ராஜபக்சே தமிழர்களை இழிவாகநடாத்த வழி சமைத்தது பிரபாகரனும் புலியுமே, பாலாவை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை, பிரபகரனை அவமானப்படுதினால் அதில் தப்பும் இல்லை, உதுக்கு உது வேண்டும், 

  தோட்டக்காட்டான்

  ReplyDelete
 35. நான் இப்ப தான் படம் பார்த்தேன். நீ இங்கே சொல்லியிருக்கிற கருத்துக்கும் படத்துக்கும் சம்மந்தமே இல்லை. வேற விசயமே கிடைக்கலியா? ஏதாவது சின்ன வாய்ப்பு கிடைக்கும் அப்படியாவது புலிகளையும் பிரபாகரனையும் இழிவு படுத்தலாம் என்று நினைத்து தான் தூங்குவாய் போல் இருக்கு. உங்க அறிவை நினைத்து பூரித்து போனேனே. இந்த வழி சரியில்லை வேறு ஏதாவது வழியில் புலிகளை விமர்ச்சிக்க முடியுமா என்று பார் ................ போய் ராஜ பக்ஷேவுக்கு விளக்கு பிடிக்கிற வேலைய பாரு

  ReplyDelete
 36. http://new.vikatan.com/article.php?aid=7549&sid=212&mid=2

  சர்ச்சையில் சிக்கும் திரைப்படங்களின் வரிசை யில் லேட்டஸ்ட் என்ட்ரி... பாலாவின் 'அவன் - இவன்’. இந்தப் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் சிங்கம்பட்டி ஜமீனுக்கு எதிராக இருப்பதால், தென் மாவட்டங்களில் சூடு பறக்கிறது. இந்தப் படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத் துக்குப்போய் இருக்கிறது, ஜமீன்தாரின் குடும்பம்!

  'அவன் - இவன்’ திரைப்படத்தில், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியை அவமதிக்கும் வகையில் இருக்கிறதாம், சில காட்சிகள். குறிப்பாக, தீர்த்தபதி என்ற ஜமீன்தாரை வில்லன் ஆர்.கே., மாட்டுத் தொழுவத்தில் நிர்வாணமாக்கி அடித்துக் கொலை செய்கிறார். அத்துடன், ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயிலை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதும், கூடுதல் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  படத்தின் இயக்குநர் பாலாவைக் கண்டித்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில், 'சொரிமுத்து அய்யனார் பக்தர்கள்’ என்ற பெயரில் ஒட்டப்பட்டு இருக்கும் கண்டன போஸ்டர்களில், 'சிங்கம்பட்டி ஜமீன்தாரையும், சொரிமுத்து அய்யனார் கோயிலையும் அவமதிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். படத்தை இயக்கிய பாலா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  இதனிடையே, சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் இளைய ஜமீன்தார் தாயப்பராஜா இந்த விவகாரத்துக் காக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார். அதில், ''நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கம்பட்டி ஜமீன் மூலமாக மருத்துவ மனைகள், கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், இந்த ஜமீனுக்குப் பாத்தியப்பட்டது. ஆடி அமாவாசை பூஜையின்போது, பல லட்சம் பக்தர்கள் அங்கு கூடுவார்கள். ஆனால், இந்தப் பாரம்பரியம் எதையும் தெரிந்துகொள்ளாமல், ஜமீனையும், கோயிலை யும் அவதூறாகச் சித்திரித்து இருப்பதால், இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்!'' என வலியுறுத்தி உள்ளார்.

  ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியிடம் பேசினோம். ''சிங்கம்பட்டி சமஸ்தானத்துக்கு, ஆயிரம் வருடப் பாரம்பரியம் உண்டு. நாங்கள் சாதி, மத வேறுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் அன்பாக இருப்பதால், மக்களும் எங்கள் மீது பிரியமாக இருக்காங்க. எனக்கு 80 வயதாகிறது. ஒரு துறவியின் மனநிலைக்குப் போயிட்டேன். அதனால், என் மீது பூவை எறிந்தாலும், கல்லை வீசினாலும் கவலைப்பட மாட்டேன். படத்தில் என்னைத் தவறாக விமர்சனம் செஞ்சிருப்பதாக பலரும் சொன்னதை நான் கண்டுக்கலை. ஆனால், என் மீது பாசம் வைத்திருக்கும் மக்கள் ரொம்பவும் கோபத்தில், வேகத்தில் இருக்காங்க. அதனால் இந்தப் பிரச்னை பெருசாகிருச்சு.  என்னையும் இந்த ஜமீனையும் பற்றி முன்பின் அறியாதவர்கள் தவறு செய்ய வாய்ப்பு இருக்கு. ஆனா, பாலா எனக்கு உறவுக்காரப் பையன். படம் எடுக்கிற துக்கு முன்னால், என்னிடம் ஒரு வார்த்தை கலந்து பேசி இருக்கலாம். இப்போது இந்த அளவுக்கு ஆன பிறகாவது என்னிடம் பேசி இருக்கலாம். அல்லது அந்தக் கதாபாத்திரம் 'கற்பனையானது’னு கார்டு போட்டு இருக்கலாம். இது எதையும் செய்யலை. அப்படின்னா திட்டமிட்டே இதை செஞ்சதாதானே அர்த்தம். கொதிச்சுப்போன பலர் போராட்டம் நடத்த என்னிடம் அனுமதி கேட்டாங்க. நான்தான் அவங்களைத் தடுத்தேன். ஆனாலும், மதுரையில் இந்தப் படத்துக்கு தடை கோரி 150 பெண்கள் ரத்தக் கையெழுத்துப் போட்டு முதல்வருக்கு மனு அனுப்பி இருக்காங்க. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சமாதானம் அடையாத என் மகன் சங்கராத்மஜன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செஞ்சி ருக்கார்...'' என்றார் ஆற்றாமையுடன்.

  இயக்குநர் பாலாவிடம் பேசியபோது, ''ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி என்னுடைய சொந்தக்காரர் என்பது தெரியும். ஆனால், இதுவரை ஒரு முறைகூட அவரை சந்தித்து இல்லை. இப்போது உறவினர் என்று சொல்லிக்கொள்ளும் அவர், படம் குறித்து என்னிடம்தான் பேசியிருக்க வேண்டும். அதைவிட்டு நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதற்குக் கட்டுப்படுகிறேன். படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் கற்பனையே என்று டைட்டில் கார்டு போட வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்?'' என்றார் ஷார்ப்பாக!

  - குணா, ஆண்டனிராஜ்

  படங்கள்: எல்.ராஜேந்திரன்

  ReplyDelete
 37. //பிராபகரன் இறக்கவில்லை என்று பழநெடுமாறன், சீமான், வைகோ உள்ளிட்டவர்கள் சொல்லி வருகிறார்கள்,//

  ;-)

  ReplyDelete
 38. சரி ...அப்படியே பிரபாகரனை விமர்சித்தால்தான் என்ன...அவர் என்ன விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா? அவர் இருந்தபோது சரியா விமர்சனம் பண்ணாமதான்..ஒரு லட்சம் பேரை காவு கொடுத்தோம்...இன்னமும் புத்தி வரலை...

  ReplyDelete
 39. விசரன் நானும் மட்டக்களப்பான் கெளப்பான் தான்... நீங்கள் 198+ களில் இந்திய இராணுவத்தின் ஒட்டுண்ணியாக விளங்கிய ஈபிடிபி அல்லது ஈபிஆரெலெப் இயக்கத்தின் பகுதி நேர பங்களிப்பாராக இருந்து, அதனையே மிகைப்படுத்தி அகதி அந்தஸ்து பெற்று அந்நிய நாட்டின் சொகுசு வாழ்க்கை வாழ்பவர். அதனால் உங்களின் பார்வை எப்படி இருக்கும் என்பது, பலருக்கு புரியும். அநேகமாக நீங்கள் மட்டுமல்ல 198+ களில் இந்தியா இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் நாட்டை விட்டு ஓடி வெளிநாடுகளில் தஞ்சம் பெற்று சொகுசு வாழும் மாற்று இயக்கத்தினரின் எழுத்துக்கள் இப்படி தான் இருக்கின்றன.

  எதையோ ஒன்றை ஏதோ ஒன்றுடன் கோர்த்து கதைச்சொல்லும் உத்தி! இது புரிந்தவருக்கு புதிரானதும் அல்ல!!

  பஸ்பன்

  ReplyDelete
 40. அண்ணா... உங்கள் கருத்து என்னை பொறுத்தவரை தவறானது....! திரைப்படத்தை பொறுத்தவரை "ஹைனஸ்" என்னும் சொல்லை அந்த ஊர் ஜமீனை குறித்து அவர் ஒரு மரியாதைக்குரியவர் என்பதை காட்டுவதற்கு திரு பாலா அவர்கள் உபயோகித்திருக்கிறார்... அதை மேதகு . தேசியத் தலைவர் பிரபாகரனோடு ஒப்பிட்டு பார்ப்பது என்னை பொறுத்தவரை தவறு... ஒரு நல்ல வலைப் பூ எழுத்தாளரான நீங்கள் இவ்வாறு சிந்தித்திருப்பது வேடிக்கையான விடயம்...!

  ReplyDelete

பின்னூட்டங்கள்