மரத்தால் விழுந்தவனை யானை மிதித்தால்...

ஒருவன் மரத்தால் விழுந்திருக்கும்போது மாடு மிதித்தால் தாங்கலாம். ஆனால் யானை மிதித்தால்?

சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டிருக்கிறேன். நேற்று, வைத்தியசாலையில் என்னை சுகம் விசாரிப்பதற்காக வந்த ஒரு ”குசும்பு”, நோா்வேயில் ஆண்கள் மட்டும் வாசிக்கும் ”நாம் ஆண்கள்” Vi menn என்னும்  அதீத கலைரசனை மிக்க சஞ்சிகையை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். அதில் சற்று இசகு பிசகான புகைப்படங்கள் இருந்தன.

எனக்கும் அதை வாசிக்கும் மனநிலை அப்போது இல்லையாததலால், எனது அறையில் இருந்த மேசையில் புத்தகத்தை தலைகீழாகவைத்துவிட்டேன்.

இன்று, இன்னொரு நண்பர் குடும்பசகிதமாக சுகம் விசாரிக்க வந்திருந்தார்.

நாம் உரையாடிக்கொண்டிருக்க நண்பரின் மனைவி, மேசையில் இருந்த அந்தப்புத்தகத்தை எடுத்தபோது எனது இதயம் வாய்க்குள் வந்துவிட்டது. காரணம், எனக்கு  அவ்வப்போது சோறுபோடும் மகராசி அவர்.

அவர் அதை எடுத்தது மட்டுமல்ல, அதை மிக அழகாகப் புரட்டிப்பார்க்கவும் செய்தார். எனது இதயம் பெருஞ்சத்தமாய் அடித்துக்கொண்டது. நண்பனுக்கு கணகளால் சமிக்ஞை செய்தேன். அவன் உடனேயே அதைப் புரிந்துகொள்ளவில்லை.

சில பக்கங்களை புரட்டியபோது நண்பனின் மனைவியின் முகம் இரத்தச்சிவப்பானது.  கோபத்தினாலாயிருக்கலாம்.

நண்பரிடம் ”இங்க பாருங்கப்பா, இவருக்கு என்ன ”வருத்தம்” வந்திருக்கு என்றார் ”வருத்தம்” என்பதை பலமாய் அழுத்தியும் உச்சரித்தார்.

இயன்றளவு படு அப்பாவியாய் முகத்தை மாற்றிக்கொண்டு அவர்களைப்பார்த்தேன்.


நிலமையை உணர்ந்த நண்பன் மனைவியிடம் ”உனக்கு எப்பவும் சந்தேகம்தான், இது ஆஸ்பத்தியின்ட புத்தகம். இங்க பார் வேற புத்தகங்களும் இருக்கு. அவன்ட கட்டிலில பார் அங்க ஒரு புத்தகம் இருக்கு” என்றார்.
நான் என்கையிலில் இருந்த ”ஒரு புளியமரத்தின் கதை” என்னும் புத்தகத்தை காட்டினேன்.

”மன்னியுங்கள், தப்பாக நினைத்துவிட்டேன் என்றார் நண்பரின் மனைவி”

”உண்மையாக இருந்தாலே சோதனை அதிகமமாக வரும்” என்று  அதீத உணர்ச்சியை குரலில் காட்டியபடியே கூறினேன். மீ்ண்டும் தான் தவறுக்கு வருந்துவதாகக் கூறினார். நான் தலையை ஆட்டினேன்.

நண்பரும், மனைவியும் வெளியேறியபோது நண்பன் சற்று பின்வாங்கி, மனைவியை முன்னே செல்ல அனுமதித்தான். மனைவி வெளியே சென்றதும், அந்த சஞ்சிகையை எடுத்து ஜக்கட்டுக்குள் அடைந்துகொண்டான்.

என்னைப் பார்த்து ”சென்றுவருகிறேன்” என்றுகூட சொல்வதற்கு அவனுக்கு நேரம் இருக்கவில்லை.

என்ட ஒஸ்லோ முருகா... நண்பனை காட்டிக்கொடுத்து அவனை ‌சொந்த வீட்டிலேயே அகதியாக்கிவிட்டுவிடா‌தே.

4 comments:

  1. எனக்கொரு சந்தேகம் ,ஒஸ்லோ முருகன் ஒரு பெண்டாட்டிக்காரரா ,ரெண்டு பெண்டாட்டிக்காரரா ?
    த ம ?

    ReplyDelete
    Replies
    1. அழுதுடுவன் ஆமா...

      Delete
    2. நல்ல பதிவு, சஞ்சயன்.

      Delete
  2. என்ட ஒஸ்லோ முருகா... நண்பனை காட்டிக்கொடுத்து அவனை ‌சொந்த வீட்டிலேயே அகதியாக்கிவிட்டுவிடா‌தே.
    ஆஸ்பத்திரியில் இருந்துமா?

    ReplyDelete

பின்னூட்டங்கள்