பின்னிரவின் அதீதக் கனவுகள்

பின்னிரவில் 
அதீதக் கனவுகளின் களைப்பில்
மீள்கிறது நிஜவுலகு
தலையருகிருற் இடர்கிறது
பூவினும் மிருதுடன் 
அறியும் வாசனையுடனான
நினைவுகளின் அட்சயபாத்திரமாய்
ஒரு சிறு கை
மெதுவாய் அதை தொட்டுணர்கிறேன்

கசியும் நினைவுகளில்.....
உனக்கு, இது நான்
காதுக்குள் அசரீரியாய்
அன்றொரு நாள் கேட்ட வார்த்தைகள்.
உருகிப்போய்
எடுத்தணைத்துக்கொள்கிறேன்

தந்தையர் தினத்தன்று
கிடைத்த கரடிப்பொம்மையை

மெதுவாய்
நினைவுகளின் மகா சமுத்திரத்தில்
நனைந்து, மிதந்து, தொலைந்து போகிறது
மற்றொரு இரவு

கபாலத்தினுள் ஒரு ஒலி
பூக்குட்டீடீடீ


4 comments:

 1. சியும் நினைவுகளில்.....
  உனக்கு, இது நான்
  காதுக்குள் அசரீரியாய்
  அன்றொரு நாள் கேட்ட வார்த்தைகள்.
  உருகிப்போய்
  எடுத்தணைத்துக்கொள்கிறேன் ஃ---

  அருமை...

  ReplyDelete
 2. நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. ..மெதுவாய்
  நினைவுகளின் மகா சமுத்திரத்தில்
  நனைந்து, மிதந்து, தொலைந்து போகிறது
  மற்றொரு இரவு..''
  இயல்பான ஒரு கவிதை....
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 4. உங்கன் பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே

  ReplyDelete

பின்னூட்டங்கள்