தேசியத்தின் விசுவாசிக்கு ஒரு துரோகியின் பதில்

தேசியத்தின் விசுவாசிக்கு ஒரு துரோகியின் பதில்
நோர்வே ஈழத்தமிழர் அவை உறுப்பினரான திரு. சிவராஜா அவர்கள்,  08.04.2014 அன்று நோர்வே தமிழ்முரசம் வானொலியில் என்னை துரோகி என்று குற்றம்சாட்டியதற்கான எனது பதில்:

சிலரிடம், உதாரணமாக ஒரு மாட்டைப்பற்றி நீ பேசவேண்டும் என்று கூறினால், அவர்களுக்கு மாடுபற்றி அவர்களது பேரறிவு மட்டுப்படுத்தப்பட்டிருப்பின், அவர்கள் மாட்டினை இழுத்துவந்து ஒரு மரத்தில் கட்டியபின் மரத்தைப்பற்றி பேசுவார்கள். கேட்டால் மாடு மரத்தில் கட்டப்பட்டுள்ளது என்பார்கள். இப்படித்தான் இருக்கிறது ஈழத்தமிழர் அவை உறுப்பினரின் உரை.

நோர்வே ஈழத்தமிழர் அவையின் முக்கிய பிரமுகர்கள் இருவர் என்னை பல காலமாக துரோகி என்று வருகின்றனர். இவர்கள் எப்போதும் என்னுடன் நேருக்கு நோ் உரையாடவோ, வாதிக்கவோ வந்ததில்லை. பானையில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு. இவர்களின் கொள்கைக்கு உடன்படாதவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் தேசியத்தின் துரோகிகளே என்னும் குறுகிய சிந்தனையோட்டத்தில் நீந்திக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

திரு. சிவராசா அவர்கள், அதி புத்திசாலித்தனமாக பிரதேசவாதம் காட்டாமல், என்னைத் தாக்குகிறேன் என்று நினைத்து, அவர் தனது ஆழ்மனத்தில் உள்ள பிரதேசவாதத்தையும், என்மீதான காட்டத்தையும் கக்கியிருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. இங்கும் பானையில் இருப்பதுதான் அகப்பையில் வந்திருக்கிறது..

உங்களின் வாதங்களை மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது உணர்ச்சியின் அடிப்படையில் முன்வைக்காதீர்கள். வலுவான ஆதாரங்களையே சற்றாவது சிந்திக்கும் மனிதர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். கேள்வி கேட்காத காலம் மலையேறிவிட்டது.

சிவராஜா அவர்களே! ஒன்று தெரியுமா உங்களுக்கு? நீங்கள் அங்கம் வகிக்கும் நோர்வே ஈழமக்கள் அவை ஒழுங்குசெய்யும் ”நியாயமான” போரட்டங்களில், உங்களைவிட நானே அதிகம் சமூகமளித்திருக்கிறேன் என்பதை, உங்களுக்கு இணையாக என்னை துரோகி என்று பாராட்டி மகிழும்  மற்றைய  அரசியல்வாதிகள் உங்களுக்கு கூறியிருக்கக்கூடும். முரண்நகை என்னவென்றால் சில நோர்வே ஈழத்தமிழர் அவை அரசியல்வாதிகளைவிடவும் நான் உங்கள் கூட்டங்களில் அதிகம் கலந்துகொண்டிருப்பதே.

எனது படுவான்கரை புத்தகத்தை வாசித்துப்பாருங்கள். தேசியத்துக்கு பாடுபட்ட போராளிகளை, போராட்டத்திற்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்களை விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்னும் நீங்களும் உங்கள் நண்பர்களும் எவ்வாறு கவனிக்கிறீர்கள், ஆதரவளிக்கிறீர்கள் என்னும் பேருண்மை தெரியவரலாம். உங்கள்  நண்பர்கள் இப்புத்தகத்தை ஓஸ்லோவில் வெளியிடுவதை தடைசெய்ய பெரும்பாடுபட்டார்கள் என்பதையும் அறியத்தருகிறேன்.

அப்புத்தகம் வெளிவந்த பின், போராளிகளை ஆத்மார்த்தமாக நேசிக்கும் அற்புதமான மனிதர்களின் உதவியுடன், 133 மனிதர்களின் வாழ்க்கைய‌ை என்னால் வளமான திசையில் மாற்ற முடிந்திருக்கிறது.

மேற்கூறிய இரண்டு விடயங்களையும் எனது தற்பெருமைக்காக கூறவில்லை. ஏன் கூறினேன் என்பதை இப்பதிவின் இறுதியில் புரிந்துகொள்வீர்கள்.

உங்களது வானொலி உரையில் நீங்கள் முக்கியமாகக் குறிப்பிட்ட விடயம் என்னவென்றால் நான் ‌தமிழ்த் தேசியத்தையும், போராளிகளையும் கேவலப்படுத்துகிறேன், கொச்சைப்படுத்துகிறேன் என்பதாகும். அதற்கு நான் இன்னும் சிலருடன் இணைந்து ஒழுங்குசெய்த நாட்டிய நாடகத்தை காரணமாக முன்வைத்திருந்தீர்கள்.

அந்நாடகத்தின் கரு ”அன்பே சக்தி, அன்பு எதிரியையும் அணைத்துக்கொள்ளும்” என்பதாகும். இன்னொருவிதத்தில் அன்பே சிவம், சக மனிதனையும் உன்னைப்போல் நேசி என்னும் உயர்ந்த கருத்தையே இந்த நாட்டிய நாடகம் பேசுகிறது.

அனால் உங்களின் மித மிஞ்சிய பேரறிவுக்கு அந்த நாட்டிய நாடகத்தின் கருவாகிய ”அன்பே சக்தி, அன்பு எதிரியையும் அணைத்துக்கொள்ளும்” என்னும் கருத்து தேசியத்திற்கு எதிரானது என்று தோன்றுகிறது அப்படித்தானே? அதனால்தானே நான் என்னைத் துரோகி என்றீர்கள்.

அந்த நாட்டிய நாடகத்தில் தீயசக்தி மன்னிக்கப்படுகிறது.

உங்களுக்கு அது தேசியத்திற்கு எதிரானதாகத் தெரிகிறது. இதனால்தான் அந்த நாட்டிய நாடகம் தமிழ்க் குழந்தைகளை கெடுக்கிறது என்றும், அவர்களை தவறான வழியில் வழிநடத்துகிறது என்றும், இந்த நாடகத்திற்கு மேடைஒழுங்குகளை செய்த என்னை துரோகி, ராஜபக்சேயின் எச்சில்நாய் என்றும் பெயரிட்டீர்கள்.

அதாவது, உங்களின் தேசியத்தில் எதிரியை மன்னிப்பது தவறு என்றீர்கள்.

தேசியத் தலைவர் தான் எதிரியை வெற்றிகொண்ட நேரங்களில், மற்றும் தன்னிடம் சரணடைந்த எதி‌ரிகளை மிகுந்த மரியாதையுடன் நடாத்தி, வைத்தியசிகிச்சையளித்து, மன்னித்து,‌ அவர்களின் குடும்பங்களை அழைத்து, அவர்களின் குடும்பத்தவர்களிடம்ஒப்படைத்தி

ருக்கிறார் என்பதை உலகமே அறியும். ஒரு இராணுவச் சிப்பாயின் மனைவி கர்ப்பமாய் இருக்கிறாள் என்பதை அறிந்த அவர், அந்த சிப்பாயை விடுதலைசெய்த உண்மைச் சம்பவமும் இருக்கிறது. அவரும் எதிரியை மன்னித்திருக்கிறார்.

தேசியத்தலைவரின் பெருந்தன்மையான கருத்தையே அந்த நாட்டிய நாடகமும் கூறுகிறது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தேசியத்தலைவரின் சிந்தனையை, கருத்தை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் எவ்வாறு தேசியத்தின் விசுவாசியாக இருக்கமுடியும்?

எனவே நீங்களும் துரோகி என நிறுவவேண்டியிருக்கிறது.  நீங்கள் என்னை விளித்தது போன்று நானும் உங்களை எச்சில்நாய் என்று விளிக்கலாம். ஆனால் நான் உங்களளவுக்கு மலினப்பட விரும்பவில்லை.

நீங்கள் ”தேசியத்தலைவரை தேசியத்தின் துரோகி” என்று கூறுகிறீர்கள் என்று நான் இன்று முகப்புத்தகத்தில் எழுதுவதற்கான முக்கிய காரணங்களில் மேற்கூறியது முக்கியமானது.

நான் உங்களை துரோகி என முகப்புத்தகத்தில் எழுதியதற்கு மேற்கூறியது மட்டுமல்ல காரணம்.

இவ்வாறு பொதுவெளியில் கேவலமாகப் பேசப்பட்டால், அது ஊரெல்லாம் பரவி எவ்வகையான வேதனைகளை, மன உளைச்சல்களை உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தரும், சமூகம் உங்களை எவ்வாறு நோக்கும் என்பதை நான் அனுபவித்தவன். அதை எனக்கு கற்பித்தது நீங்களும், உங்கள் ஈழத்தமிழர் அவை அரசியல்வாதிகளும்தான்.

நீங்கள் என்னை துரோகி, உளவாளி என்று தூற்றியது மட்டுமல்ல, என்னுடன் பழகும் பெண்களுடன் இணைத்து நீங்கள் பேசியதையும், அது எத்தனை மனிதர்களுக்கு எவ்வளவு மனஉளைச்சலைக் கொடுத்தது, கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நான் நன்கு அறிவேன்.

நீங்களும் உங்கள் நண்பர்களும், உங்களுடன் இணைந்து செயற்பட்டவர்களுடன் கருத்துரீதியாக முரண்பட்டபின் அவர்களை எந்தளவுக்கு கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தி, சமூகத்தில் இருந்து ஒதுக்கி, அவர்களின் முகத்தில் உமிழ்ந்திருக்கிறீர்கள் என்பதை சற்றேனும் மனச்சாட்சியுள்ள மனிதர்கள் அனைவருக்கும் புரியும், தெரியும்.

இப்படியான உங்களின்  முறைகேடான செய்கைகள், மற்றையவர்களுக்கு நீங்கள் கொடுத்த மன உளைச்சல்கள், வேதனைகளை நீங்களும் உணர்வுபூர்வமாக உணர்ந்துகொள்ளவேண்டும், இவ்வாறான உங்களின் மலினமான செய்கைகளை உங்கள் குடும்பத்தாரும், மக்களும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு நான் எழுதினேன்.

ஆனால், என் நெஞ்சுக்கு மிக நன்றாகத் தெரியும் நீங்கள் துரோகி இல்லை. விலைபோக முடியாத மனிதர் நீங்கள். உங்களின் மக்கள் மீதான கரிசனம் உண்மையானது. உங்களைப் போன்றவர்களினாலேயே எங்கள் போராட்டத்தின் தீபம் அணையாது இருக்கிறது. இது நீங்கள் சார்ந்திருக்கும் கொள்கையுடைவர்களுக்கும் பொருந்தும்.

உங்கள் கருத்துடன் உடன்படாதவர்கள் , மாற்றுக்கருத்துடையவர்கள் அனைவரும் துரோகிகள், எச்சில் நாய்கள், பெண்பித்தர்கள் என்று வசைபாடுவதை இனியாவது நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களைப்போன்று நாமும் எம்மக்களை நேசிக்கும் மனிதர்களே. நாம் எம்மால் முடிந்தவகையில், எமது சிந்தனைகளின் வழிகாட்டலில், எம் மக்களுக்காக இயங்குகிறோம். நாமும், எமக்கான விடுதலையை விரும்பும் உங்களைப்போன்ற உண்மையான விசுவாசிகளே. எமது இலக்கு ஒன்று. நாம் பயணிக்கும் பாதைகள் மட்டுமே வேறுபட்டவை. பாதைகள் வேறு என்பதன் அர்த்தம் எதிரியுடன் சல்லாபிக்கிறோம் என்பதல்ல. எங்கள் கொள்கைகள், சிந்தனைகள் வேறுபட்டவை என்பதற்காக நீங்கள் எங்களை துரோகிகள், எச்சில் நாய்கள், பெண்பித்தர்கள் என்பது எப்படி நியாயமாகும்?

இனியாவது மாற்றுக் கருத்தாளர்களுடன் கருத்தியல் ரீதியாக உரையாட, வாதிட கற்றுக்கொள்ளுங்கள். பொதுவெளியில் நியாயமான முறையில் ஒரு சகமனிதனுடன் பேசமுடியாதளவுக்கு நாம் என்ன பரம எதிரிகளா? ஒரு குறிக்கோளுக்காக செயற்படுபவர்கள், ஒரே இனத்தவர். நாமே நம்மை எதிரிகளாகப் பார்த்துக்கொண்டும், வசையாடிக்கொண்டும், மனங்களை ரணப்படுத்திக்கொள்வதாலும் எதிரியே எம்மை வென்றுகொண்டிருக்கிறான் என்பதை நாம் எப்பொது உணர்ந்துகொள்ளப்போகிறோம்?

உங்கள் கையில் மக்களமைப்புக்களும், ஊடகங்களும் இருக்கிறன என்பதற்காக எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம், எவரையும் வசைபாடலாம் என்னும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உங்களின் நியாயமற்ற செய்கைகளும், வசைபாடல்களும் வெளியே தெரியவரும்போது, உங்களை, உங்கள் மக்கள்அமைப்புக்களை, உங்களது ஊடகங்களை மக்கள் புறக்கணிக்கத் தொடங்குவார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

2009ம் ஆண்டுக்கு முன்னிருந்த எங்கள் பலம் இன்று நோர்வேயில் சிதறிப்போயிருப்பதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கு இப்போதாவது புரிந்திருந்தால் மகிழ்ச்சி.

என்றோ ஒரு நாள் வாசித்த ஒரு கவிதையின் சில வரிகள் நினைவிற்கு வருகின்றது

ஒளி நிறைந்த சூரியனை நோக்கி
எல்லா உயிரினங்களும் கையசைத்து மகிழும்போது
எமக்கு மட்டும் ஏனிந்த ஒளிவெறுப்பு?இவ்வண்ணம்

நாம் மீண்டும் தோழர்களாவோம் என்ற அதீத நம்பிக்கையுடன்
சஞ்சயன்

2 comments:

 1. தனி மனிதன் தனது பிரச்சனைகளை எப்படிக் கையாள்கின்றான், சமூகம் தனது பிரச்சனைகளை எப்படிக் கையாள்கிறது,
  உலகம் பிரச்சனைகளை எந்தக் கண்கொண்டு பார்க்கிறது போன்றவற்றை ஒரு தட்டில் வைத்து அளவீடு செய்ய முடியாது.
  தனி மனிதன் தனது பிரச்சனையை சமூகம் தீர்க்கவேண்டும் என்றோ, சமூகம் தனது பிரச்சனைகளை உலகம் திர்க்க வேண்டும் என்றோ,
  உலகம் தனது பிரச்சனயைப் படைத்தவன் தீர்க்க வேண்டும் என்றோ நினைப்பது பிரச்சனைகளுக்கான தீர்வல்ல.
  முரண்பாடுள்ள மனிதனும், சமூகமும் இருந்ததும், இருப்பதும், இருக்கப்போவதும் நியதி; தேவை!
  தனது பிரச்சனைக்குக் காரணம் சமுகம் என்று மனிதனும், சமூகம் தனது பிரச்சனைக்குக் காரணம் உலகம் என்றும் தப்பித்துக் கொள்ளுதலும்
  நவீன உலகில் கைவந்த கலை என்பதைக் கண்கூடாகக் கண்டும் அனுபவித்துக்கொண்டும் இருக்கின்றோம்.
  "Media power" என்பதும் அதனைப் பயன்படுத்தும் அதிகார நோக்கம் கொண்ட தனிமனிதனும், சமூகமும் இருக்கத்தான் செய்கின்றன. ஆண்டான், அடிமை
  சொற்பதங்களை இதற்குள்ளும் புகுத்தலாம். ஒலிவாங்கியைக் கையில் எடுத்தால், தனது/ தமது நலன்களைத் தக்கவைக்க/ காப்பாற்ற யாரை வேண்டுமானாலும்
  திட்டித் தீர்க்கலாம் என்ற நோக்கமும், அமைப்புகளை கையில் வைத்திருந்தால் தாமே மக்கள் அங்கீகாரம் பெற்றோர் என்ற மமதை கொண்டோரும்,
  இணையத் தளங்களை நடத்தினால், சரி பிழைகளைத் தீர்மானிக்கும், கட்டளையிடும் வல்லமையுள்ளோர் தாமே என்ற செருக்குக் கொண்டோரும்
  எமக்குள் நிறையவே உள்ளனர். இதில் "தேசியம்" என்ற போர்வைக்குள் வாழ்வோரின் அட்டகாசம் அளவுகடந்தது.

  புலம்பெயர் "தேசிய"த்தின் காவலர்கள் தேசியத்தை எந்த இடத்தில் கொண்டுசென்று விட்டனர் என்பது எல்லோருக்கும் தெரியும். தங்கள் கையாலாகாத் தனத்தைக்
  காப்பாற்ற மாற்றுக் கருத்துக் கொண்டோர்மீது இவர்கள் தொடர்ந்தும் வீசும் நச்சு அம்புகள் எண்ணிலடங்கா. இதற்கு இவர்கள் ஊதுகுழல்களாக
  "தேசியவாத" முலாம் பூசப்பட்ட ஊடகங்கள் வேறு.
  எதிரியால் ஏற்படும் காயங்களை விட, சக நண்பர்களாலும், உறவுகளாலும், சகோதர அமைப்புகளாலும் ஏற்படுத்தப்படும் காயங்கள் ஆழமானவை.
  எமது போராட்ட காலகட்டத்தில்கூட சகோதரப் படுகொலைகள், உள்கொலைகள், அரசியல் கொலைகள், உள்ளே இருந்தே நடாத்தப்பட்ட காட்டிக் கொடுப்புகள்,
  பழிவாங்கல்கள் ஏராளம்; இபோதும் அதன் தொடர்ச்சி நிகழ்ந்துகொண்டே உள்ளது.

  யாரைக் குறிவைக்கிறோம், ஏன், எதற்காகக் குறிவைக்கிறோம் என்ற நோக்கமே இல்லாமல், காத்திரமான விமர்சனம் வைக்கப்படாமல் நடாத்தப்படும்
  தனிநபர் வசைபாடல்கள், அதற்கு ஒத்து ஊதுகின்ற ஊடகவியலாள்ர்கள் சிலர் என்று எமது சமூகம் பின்நோக்கியே நகர்த்தப்படுகின்றது. அதிகார நோக்கத்தை
  மையமாகக் கொண்டு "தேசிய" முலாமுடன் வாழுகின்ற கூட்டத்தின் முகத்திரை பல இடங்களில் கிழிக்கப்பட்டாலும், அவர்கள் மீண்டும் மீண்டும்
  முளைத்தெள முயற்சிப்பது ஒன்றும் புதிதல்ல. "தேசிய" உணர்வுக்கு ஒருசிலர் மட்டுமே சொந்தக்காரர்களாக வலம் வருவது அவர்களது அறியாமையையும்
  அரைகுறை அரசியல் அறிவையுமே வெளிப்படுத்துகின்றது. நண்பர்களையும் எதிரிகளாக்கிய, இன்றும் ஆக்கிக்கொண்டிருக்கின்ற ஒரு சில "தேசிய"
  முலாம் பூசிய கூறுகள் எமது சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம், அவசியம். இதனை நேர்மையான "தேசிய" நலனை
  நோக்காகக் கொண்டியங்கும் அமைப்புகள், தனிமனிதர்கள் செய்யவேண்டியது காலத்தின் அவசியம்.
  மாற்றுக் கருத்துகளை காழ்ப்புணர்வுடன், வெறும் மேலோட்டமாகவும், ஆதாரங்கள் இன்றி அவதூறாக விமர்சிப்பதும், அமைப்புகளை தமது குறுகிய நலன்களுக்காகப்
  பயன்படுத்துவதையும் பன்முகக் கண்கொண்டு பார்ப்பவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
  "கீரைக் கடைக்கு எதிர்க்கடை தேவை" என்பதை நாம் உணர்ந்தும் புரிந்தும் கொள்ளவேண்டும். தவறுகள், சறுக்கல்கள் ஆதாரத்துடனும், தெளிவாகவும்
  முன்வைக்கப்படவேண்டும். தவிர்த்து தவறான வழியில் எம்மிடமுள்ள வளங்களைப் பயன்படுத்துவோமானால் மீண்டும் மீண்டும் பல "முள்ளிவாய்க்கால்களை"
  எமக்கு நாமே தேடிக் கொள்வோம் என்பது எனது கருத்து.

  "பார்க்க வேண்டியவர்கள்" கண்களுக்காக மட்டும் இது எழுதப்பட்டுள்ளது, மற்றையோர் இதனை ஒரு தகவலாக மட்டும் பார்க்கவும்!

  "அடிக்க வேண்டிய இடத்தில் அடிக்கத் துணிந்த"
  - நோர்வேத் தமிழன்

  ReplyDelete
 2. தனி மனிதன் தனது பிரச்சனைகளை எப்படிக் கையாள்கின்றான், சமூகம் தனது பிரச்சனைகளை எப்படிக் கையாள்கிறது,

பின்னூட்டங்கள்