கேள்வி கேட்பவன் தேசியத்தின் எதிரியா?உண்மையில், இன்றுவரை என் எழுத்தில் நான் பெருமைகொண்டது கிடையாது. அதன் வீச்சை, அதன் தாக்கத்தை, ஒரு ”பகுதியினருக்கு” அது கொடுக்கும் "கிலி"யை நான் இன்றுவரை அறிந்திருக்கவில்லை.

எனது எழுத்தும், விமர்சனங்களும், நோர்வேயில் 2009க்குப்பின் மக்களை ஏமாற்றும் ஒரு பகுதியினருக்கும், அதன் விசுவாசிகளுக்கும் பெரும் பிரச்சனையாய் இருக்கிறது என்பதை பல மக்கள் மத்தியில் ”அக் கும்பலாலும், விசுவாசிகளாலும்” ஒப்புக்கொள்ளப்பட்டது. அது மட்டுமல்ல ”எழுதாதே” என்னும் தொனியில் உத்தரவும் வந்தது.

இதையும் மீறி, மக்களின் அதரவு எனக்கு இருந்தது என்பதானது எனது செயற்பாடுகளின் உண்மைத்தன்மையையும், உழைப்பையும், எனது எழுத்துக்கள் நியாயமானவை என்பதையும் ”அவர்களுக்கு” எடுத்துக்கூறியிருக்கும். 

”அவர்களுக்கு” அது புரிந்திருக்குமா என்பது வேறு கதை.
நான் தொடர்ந்தும் இப்படியே எழுதுவேன் என்ற பின்பும் ”கும்பலின்” நரித்தனமான, ஜனநாயகவிரோத விளையாட்டுக்களையும் மீறி எனது செயற்பாட்டில், எழுத்தில் நம்பிக்கைவைத்து, குறிப்பிட்ட ஒரு பதவியை தந்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அப்பதவியை, ஒரு நிறுவனத்தின் நன்மைகருதி ஏற்க மறுத்தமைக்காக மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கேள்விகேட்பவன் தேசியத்துக்கு எதிராவன் என்னும் நிலையில் இருந்து, ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எப்போது விளித்துக்கொள்ளப்போகிறோம்? கருத்து முரண்பாடுடையவனோடு எப்போது உரையாடப்போகிறோம்?

நான் எங்கே தேசியத்துக்கு எதிராக எழுதினேன்? என்ற கேள்விக்கும், எங்கே சிங்களவர்களுக்கு ஆதரவாக உரையாற்றினேன்? என்ற அவர்களின் குற்றச்சாட்டுக்களுககான எனது கேள்விகளுக்கு ”குத்தகைக்காரர்களிடம்” இருந்து பதிலே இல்லை. இருந்தால்தானே பதில் வருவதற்கு.
.
புனைவு, எழுத்தாளர்கள் மத்தியில் மட்டும் இல்லை.”எடுபிடிகளிடமும்” அதிகமாக இருக்கிறது என்பதற்கு மேலுள்ள பந்தி சாட்சி.
குத்தகைக்காரர்கள் மன்னிக்கவேண்டும். சஞ்சயனோ அவனது எழுத்துக்களே என்றும் விற்பனைக்கில்லை.
So I am very sorry guys

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்