எல்லோருக்கும் பின்னால்
மூன்றடி தொலைவில்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
மரணம்.
எப்போது வேண்டுமானாலும்
எட்டிப்பிடித்து விடும்
தூரத்தில் தினமும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சாலை கடக்கையில்,
வாதிடுகையில்,
புகை பிடிக்கையில்
அதன்
முக பாவங்கள்
மாறி மாறி ஜொலிக்கின்றன.
ஒரு சிலர்
மரணத்தின் பின்னால்
நடந்து கொண்டிருக்கிறார்கள்
அவர்களை
மரணம் கடந்திருக்கக் கூடும்.
அழைத்து
நண்பனாக்கிக் கொள்ள
யாருக்கும் தைரியமில்லை.
கூட இருந்தே
குழி பறிக்கும் உத்தரவாதம்
அது.
அதனுடன்
யாரும் உரையாடுவதுமில்லை.
அது
தனியே நடந்து கொண்டிருக்கிறது,
ஒரு நிழல்போல.
நிழலின் நிஜம் போல
.............................
சத்தியமாக நான் எழுதவில்லை. ரசித்தேன்... சுட்டேன்...
இதை எழுதியது சேவியர். அவரின் அற்புதமான பிளாக் பார்க்க
http://xavi.wordpress.com/
நன்றாயிருக்கிறது.
ReplyDeleteஎனது மரண அழைப்பிதழ் இங்கே
http://chummaah.blogspot.com/2009/06/blog-post_10.html