அது ஒரு துன்பியல் சம்பவம்


எனது இலக்கிய அரசியலில் இன்று ஒரு துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது. அதனால் உருவாகிய சினம் இன்னும் அடங்குவதாயில்லை.  சுத்தத் தமிழ், சுனாமியாய் வந்த போது அடக்க முடியாமல் சற்று அதிகமாகவே கக்கியும் விடடேன். சில நேரங்களில் ”அடங்க மறு, அத்துமீறு” என்பது  அவசியமாயிருக்கிறது, சில ”இலக்கியவாதிகளுடன்”  உரையாடுவதற்கு.

முகப்புத்தகத்தில் 10 கொமன்டும், 40 லைக் உம் கிடைத்தவுடன்  தான் ஒரு இலக்கியவாதி என்று கூக்குரலிடும் நவீன இலக்கியவாதிகள் கூட்டத்தைச் சேர்ந்தவன் நானில்லை. தவிர நான் ஒரு இலக்கியவாதியா என்னும் கேள்விக்கே விடை தெரியாதவன் நான்.

எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். எனக்கும், என் அனுபவங்களுக்கும் இடையே நடக்கும் ஒரு சோர்வில்லாத போட்டியே எனது எழுத்து. அண்ணண் எஸ்.ரா அவர்கள் ஒரு இடத்தில் ”எறும்புகள் இழுத்துக்கொண்டு போகும் வெல்லக்கட்டயைப் போல உலகை எனது இருப்பிடததுக்குள் இழுத்துக்கொண்டு வர முயன்றதன் விளைவுதான் என் எழுத்துக்கள்” என்கிறார். அவரின் வார்த்தைகள் எனக்கும் பொருந்துகின்றன.

தவிர எனக்குத் தெரியாதததை யாரிடமும் கேட்டறியும் வெட்கமும் இல்லை, தெரியாது என்று  சொல்ல தயக்கமும் இல்லை. இலக்கிய உலகிலுள்ள இரவின் மின்மினிப்பூச்சிகளை விட, அதே இலக்கிய உலகின் மண்ணுக்கள் இருக்கும் மண்புழுக்களின் அருகாமையே எனக்குத் ‌தேவையாய் இருக்கிறது.

என்னடா இவன் புலம்புறானே என்று  நீங்கள் நினைக்கலாம். காரணத்தை  அறிய விரும்புபவர்கள் இங்கு போய் வரவும். http://www.facebook.com/note.php?note_id=1552040487326

எனக்கு வந்திருந்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்காகவே அந்தப் பதிவை எழுத வேண்டியேற்பட்டது. அதில் பலர் பல கருத்துக்களைச் சொன்னார்கள். எனக்கும் சில விடயங்கள் புரிந்தன. அதை ஒரு ஆரோக்கியமான விவாதமாயே நான் பார்க்கிறேன்.

இன்று ஒரு அன்பர் தொ(ல்)லைபேசியில்,  உனக்கு உது தேவையில்லாத வேலை. கண்ட கண்டதுகளெல்லாம் உனக்கு திட்டுதுகள்.  உனக்கு தேவையா இது? அதை எழுதியிருக்க் தேவையில்லை, அப்படி எழுதுறதால என்ன பிரயோசனம் என்பவற்றோடு நிறுத்தாமல், அதைவிட இன்னும் அதீதமாய் எனது சுயத்தினுள் நீச்சலடிக்க முட்பட்ட போது , எனக்கு கண்ணாலும், காதாலும் புகை வர, வாயில் நல்ல தமிழ்  ஊற ... வடிவேலுவின் பாஷையில் சொல்வதானால் ”ரணகளமாகிப்” போனது  எமது சம்பாசனை.

எனக்குத் தெரியாததை நான் கேட்டறிகிறேன். அதாவது நான் சுகமாயில்லை என்பதை அறியுமளவுக்கு நான் சுகமாயிருக்கிறேன். இதுவே நானாயிருந்திருக்கிறேன். இனியும் இப்படித்தான் இருப்பேன்.

”யார் நமக்கரசர்? இங்கு எவர் இடல் நியமம்?'  இதையும் அந்த உரையாடலினூடாகவே அறிந்தேன்.

தான் சுகமாயில்லை என்பதை அறியுமளவுக்கு சிலர் சுகமாயில்லை என்பது, மிகவும் சீரியஸ்ஆன வருத்தம். அந்நோய் கண்டவர்களுக்கு சுகம் வரலாம், ஆனால் ஆள் தப்பாது.

நான் போகும் திசை எது என்பதை அறியாமல் நடக்க, நான் தயாராக இல்லை. விமர்சனங்களும், உரையாடல்களும், மாற்றங்களும் எனது பாதையின் வழிகாட்டிகள்.

சக மனிதனை ”கண்ட கண்டதுகள்” என்று நாம் விழிக்கும் போதே நமது ”இலக்கியத்” தரம் மிகத் தெளிவாய்ப் புலப்படுகிறது.  ”கண்ட கண்டதுகளிடம்” கற்றுக் கொள்வதற்கு எனக்கு எக்கச்சக்கமாய் இருக்கிறது. அவர்களும் தாம் சுகமாயில்லை என்பதை அறியுமளவுக்கு சுகமாயிருக்கிறார்கள். பெறவும் கொடுக்கவும், கற்கவும் கற்பிக்கவும் எமக்கிடையில் எவ்வளவோ இருக்கிறது. திட்டுவாங்கியும் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு என்னிடம் உண்டு, அவர்களிடமும் நிட்சயம் இருக்கும். நான், என் பலவீனங்களுடனும், பலங்களுடனும் மனிதனாய் ஏற்றுக்கொள்ப்படுவதையே விரும்புகிறேன். நான் ஒன்றும் சூப்பர் மேன் இல்லை என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன்.

சுயம் என்பது எவருக்கும் புனிதமானது. மற்றவரின் சுயத்தினருகே செல்வதென்பதே நீங்கள் மற்றவர் மீது வைத்திருக்கும் அன்பையோ, நட்பையோ கொச்சைப்படுத்துவதற்கு சமமாகும். மற்றவரை அவரின் சுயத்தடன் வாழ அனுமதிப்பதே உண்மை அன்பு அல்லது நட்பாகிறது.

என்மீதான அன்பினால்(?) நீங்கள் அதை எனக்குச் சொல்லியிருக்கலாம். தங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால் அதை பெற்றுக்கொள்ள நான் இன்னும் முன்னேறவில்லை. மன்னியுங்கள் இந்த காட்டுமிராண்டியை.


இன்றைய நாளும் ஒரு விதத்தில் நல்லதே

.

5 comments:

 1. போன பதிவிற்கான தலைப்பின் விவாதம் பற்றிய இந்த பதிவின் தலைப்பு சர்ச்சைக்குரியது! (இது எனக்கு: எப்படிரா இப்படி புரியாம எழுதற?)

  ReplyDelete
 2. தமிழ் தங்களிடத்தில் விளையாடியிருக்கிறது நண்பரே...

  ReplyDelete
 3. யார் அந்த வார்த்தைகளால் நோவடித்த கொலைகாரன்! ஆனால் பழமுள்ள மரத்தில் தானே கல் எறிய இயலும். சினம் கொண்டு உடல் நலனை கெடுத்து கொள்ளாதீர்கள் சகோதரா.

  ReplyDelete
 4. Thalaivaa Don't worry.. Neengal Nalla Eluththaalar.. Enakku theriyum ippa oorukkum Theriyum.. Naaanum karuththa paalaththukku arukey valarnthavan thaan..

  ReplyDelete
 5. பினனூட்டங்கள் ஊகங்களையோ தப்பபிப்பிராயங்களயோ ஏற்படுத்தாதவாறு இருத்தல் வேண்டும். அப்படியானவொரு ஒரு பின்னூட்டத்தை அகற்றியுள்ளேன்.

  ReplyDelete

பின்னூட்டங்கள்