அப்பாவின் அழகிய ராட்சசி

நேற்று, எனது அப்பாவின் அழகிய ராட்சசியும் எனது அம்மாவுமாகிய சோதிராணியுடன் பேசிக்கொண்டிருந்தேன் . எங்கள் சம்பானையின் சில பகுதிகளை பதிவிடுகிறேன்.


ரிங் போகிறது...
" ஹலோ சோதி  ஹியர்"
"நான் சோதின்ட லவ்வரின் மூத்தமகன் கதைக்கிறேன்"

சிரிக்கிறார்...

"சஞ்சயன் ... தம்பி சாப்பிட்டாச்சா?"
"ம்"
"என்ன சாப்பாடு"
"பாண்"
"கறி?"
"முட்டை"
"வேலைக்கு போறியடா இண்டைக்கு?"
"இல்லை"
"அப்ப என்ன செய்யப் போறாய்?"
" ஒரு தீபாவளி விழாவும், ஒரு partyம் இருக்கிறது அங்கு போய் தண்ணியடிக்க யோசிக்கிறேன்"
"டேய், நீ தண்ணியடிப்பியா"
"கொஞ்சம், ஏன் தண்ணியடிச்சா என்ன கூடாதோ?"
".."
"உங்கட புருசன் அடிக்கேக்க மட்டும் பேசாடமல் இருப்பியள் நாங்கள் அடிச்சா பிரச்சனையே?"
"டேய், நான் அவரோட எப்படியடா இதுகளைக் கதைக்கிறது"
"அது தான் அந்தாள் அப்பவே டிக்கட்  வாங்கீட்டார்"
"டிக்கட் என்டால் என்னடா?"
"அய்யோ.."

பிறகு கதை சற்று அங்குமிங்கும் அலைந்து இப்படித் தொடர்ந்தது

"நேற்று இங்கு ஒரு நல்ல சாத்திரியாரிட்ட உன்ட சாதகத்தை கொடுத்தனான்"
"ஏன் இன்னுமொருக்கா கலியாணம் பேசப் போறீங்களோ"
"உனக்கு 46 வயது, இன்னும் சின்னப் பெடியள் மாதிரித் தான் கதைக்கிறாய், வயதுக்கேற்ற மாதிரி கதையடா"
"சரி, சரி உங்கட சாத்திரியார் என்ன சொன்னவர்?"
"நல்ல காலமாம்"
"யாருக்கு அவனுக்காமே"
"டேய்" ( அதட்டுகிறாராம்)
"உனக்குத் தான்"
"அம்மா, அந்தாளுக்கு எவ்வளவு காசு குடுத்தீங்க"
"... "
 "அம்மா, அந்தாளுக்கு எவ்வளவு காசு குடுத்தீங்க"
 "... " " உன்ட பிரச்சனைகள் ஒரு வருசத்துக்குள்ள, கெதியில தீருமாம்"
"ஏன் அவர் தீர்ப்பாராமோ"
"டேய், விசரக்கதை கதையாதயடா,  கதையக் கேளுடா"
"ம்... சரி சொல்லுங்க"
"புதிய வேலை, சம்பள உயர்வு எல்லாம் கிடைக்குமாம்"
"வேற"
"நீ பெரியாளாகப் போறியாம்"
"சரி.. அவர் இப்ப எங்க இருக்கிறார்?"
"கொழும்பில தான்"
"அம்மா" ( பாசமாக உருக்கமாக அழைத்தேன்)
"என்னடா" ( அவரும் உருகிவிட்டார்)
"அந்த சாத்திரியார என்ட செலவில் ஒரு வருடம் நான் வைத்திருக்கப்போறேன்"
"ஏன்டா"
"அவர் சொன்ன மாதிரி ஒரு வருடத்தில என்ட பிரச்சனைகள் தீரா விட்டால், அவரின்ட தலையில குட்டி குட்டி கேள்வி கேட்கலாம் தானே.. அது தான்"
"பெரியாக்களை மதியடா" ( சற்று சூடாகிவிட்டார்)
"சரி சரி வேற என்னத்தை சொன்னான் சாத்திரி" ( எனக்குள் எரிச்சல் பிக்கப் ஆகிக் கொண்டிருந்தது)
"அவர் என்று கதை, இல்லாட்டி சாத்திரியார் என்று கதை" (குரலில் கோபம் தெரிகிறது)
"சரி .. சாத்தான் என்ன சொன்னார்"  (நக்கல் கலந்த குரலில்)
"நீ திருந்த மாட்டாய்"
சரி சரி அவர் வேறு என்னு சொன்னார்?
"உனக்கு பதவியுயர்வு நிட்சயமாக கிடைக்குமாம்"
"அதெப்படி இவ்வளவு நிட்சயமாய் சொல்கிறார்?"
"உன்ட சாதகத்தை வடிவா பார்த்து தான் சொன்னவர்"
"அம்மோய்" (மிகவும் உருக்கமாய்)
"என்னடா" ( என்னை விட உருக்கமாய்)
"சாத்திரியார் எனக்கு பதவியுயர்வு என்றது சிவலோகப்பதவியாக இருக்கலாம் தானே?"

கடக் என்று தொலைபேசியை அடித்து வைக்கும் சத்தம் கேட்டது.

அப்பாவின் அழகிய ராட்சசி கோபத்திலிருக்கலாம். ஆனால் நான் இன்று மாலை தொலைபேசி எடுத்தால் எல்லாவற்றையும் மறந்து
" டேய் எப்படா இங்க வருவாய்?" என்பார் ஆசையாய்.
இது தான் எல்லா அப்பாக்களினதும் அழகிய ராட்சசிகளின் அழகு.


11 comments:

  1. அருமையான பதிவு :) ரசித்தேன்.

    ReplyDelete
  2. >"டேய், விசரக்கதை கதையாதயடா, கதையக் கேளுடா"

    ம்ம்ம் சரியாத்தான் சொல்லுறார் :-)

    ReplyDelete
  3. இதே குறும்பு இங்கேயும் உண்டு.

    ReplyDelete
  4. தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என நினைத்து
    படிக்கத் துவங்கினேன்
    பதிவு அதைவிட சுவாரஸ்யம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 5

    ReplyDelete
  5. அம்மாவுடன் பேசுவது, கண்ணாடி முன் நிற்பது மாதிரியான அனுபவம்....அதை அனுபவிக்க முடிந்தபதிவு.

    ReplyDelete
  6. அப்பிடியே சிலவேளைகளில எங்கட வீட்ல நடக்கிற விஷயம்போலக்கிடக்கு !

    ReplyDelete
  7. நன்றாக உள்ளது சஞ்சயன்

    ReplyDelete
  8. மிகவும் நன்றாக இருந்தது

    ReplyDelete
  9. மிகவும் நன்றாக இருந்தது

    ReplyDelete

பின்னூட்டங்கள்