ஞானச்செருக்கும் கலைத்தாயின் குழந்தைகளும்

சில காலங்களுக்கு முன் இணையத்தில் ஒரு கவிஞரைப் பற்றி அறிக்கிடைத்தது. தற்போது சில நாட்களாக அவரைப்பற்றி எனக்குள் இருந்த நல்லபிப்பிராயங்கள் எல்லாம் சீட்டுக்கட்டு மாளிகைகள் சரிந்து விழுவது போல தற்போது சரிந்து விழுந்திருக்கிறது. காரணம் அவரின் ஞானச்செருக்கும், தற்புகழ்ச்சியும்.

ஞானச்செருக்கு இருக்கலாம், தப்பில்லை. எதற்கும் ஒரு அளவுண்டல்லவா? அதே போலத்தான் தற்புகழ்ச்சியும்.  அந்தக் கவிஞர் விருதுகள், பாராட்டுகள், தனது வெளியீடுகள், கலைப்பயணங்கள் என்று எல்லாவற்றையும் இணையமெங்கும் பேட்டிகளின் போதும், கட்டுரைகளிலும், முகப்புத்தகத்திலும் கூறிவருகிறார். அவரின் திறமை பற்றி நான் இங்கு பேசவில்லை. வேதனை என்னவென்றால் அவரின் திறமை அவர் காட்டும் தற்புகழ்சியினால் அடிபட்டப்போகிறது என்பதே.

பலரும் அவரை ஒரு தற்புகழ்ச்சிக் கோமாளி என்றே பார்க்கிறார்கள்.  இவர் பற்றி வீக்கிபீடியாவில் உள்ள கட்டுரை பலத்த தற்பெருமைகளைக் கொண்டுள்ளது போலிருக்கிறது என்று வீக்கிபீடியா கட்டுரையாளர் ஒருவர்  அவரின் கட்டுரையின் தொகுப்பு பகுதியில் குறிப்பிட்டுள்ளதை அவதானிக்கக்கிடைத்தது.

இவரின் கட்டுரையுடன் மு.மேத்தாவின் வீக்கிபீடியா கட்டுரையை ஒப்பிட்டால், மு.மேத்தாவின் கட்டுரை மிகவும் எளிமையாகவும் தன்னடக்கமானதாயும் இருக்கிறது.

”வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை” என்கிறார் வள்ளுவர். அதாவது எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது என்னும் பொருள் கொணட குறள் இது:

பெயர், புகழ், விருதுகள், பரிசுகள், பயணங்கள் என்பவற்றின் மீதான அவரின் விருப்பத்திற்கு அக் கவிஞரின் மிகக் குறைந்த வயதும் காரணமாயிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது எனக்கு. ஆனால் அண்மைக்கால அனுபவங்கள் ஏனோ வயதுக்கும் ஞானச்செருக்குக்கும் தொடர்பில்லை என்றும் உணர்த்துவது போலிருக்கிறது. ஏன்னெனில் வயதில் முதிர்ந்த கலைஞர்களும், அனுபவசாலிகளுமான பல கலைஞர்கள் தமது ஞானச்செருக்கினால் தமது தரத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள். இது பற்றி அவர்கள் புரியாதிருப்பது வேதனையே

இல்ங்கையின் முக்கிய பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள், புத்திஜீவிகள் என்னும் வரிசையில் இடம்பெறக்கூடிய பலருடன் அண்மைக்காலங்களில் பழகக்கிடைத்திருக்கிறது. அவர்களின் தன்னடக்கம் என்னை கவர்ந்திருக்கிறது. நிறைகுடங்கள் அவர்கள். அதேவேளையில் பல வெறும் பானைகளின் கூக்குரல்களும், போலியான பெரியமனிதத்தன்மைகளும், சுய நன்மைக்காக நிகழ்வுகளை தயாரிக்கும் தன்மைகளும், பொறாமை - போட்டிகளும், மற்றவரின் முன்னேற்றத்தை விரும்பாத்தன்மைகளும் கொண்ட சிலரையும் அண்மைக்காலங்களில் அறியக்கிடைத்திருப்பது வாழ்வின் அனுபவங்கள் என்றால் அது மிகையில்லை.

கற்றதை அப்படியே எவ்வித மாற்றமின்றி ஒப்புவிப்பவர்களும், புதிய தலைமுறையிருக்கு தங்கள் கலையினை சிறந்த முறையில் கற்பிக்காதவர்களும் பெருங்கலைஞர்களாக இருக்க முடியுமா? என்னும் கேள்வி எனக்குள் இருக்கிறது. இப்படியான கலைஞர்கள் பலர் பெருத்த ஞானச்செருக்குடன் உலாவருவதை பார்க்கும் போது வள்ளுவரின் மேற் கூறிய குறள் எவ்வளவு ஆழமானது என்பது புரிகிறது.

என்னைப் பொறுத்தவரை ஒரு கலைஞரின் தரத்தை மாணாக்கரின் எண்ணிக்கை முடிவுசெய்வதில்லை. அக் கலைஞர் எவ்வகையில் மாணாக்கருக்கு தனது கலையை முழு அர்ப்பணிப்புடனும் பயிற்றுவித்து தனது கலையை எதிர்வரும் சந்ததியினரிடம் ஒப்படைக்கிறார் என்பதிலும், மாணாக்கரின் திறமை வெளிப்படுவதிலுமே இருக்கிறது என்பேன் நான்.

ஞானச்செருக்கு இருக்கலாம், ஆனால் அதுவே கலையை அல்லது திறமையை மழுங்கடிக்குமானால் அதனால் என்ன பயன்? எனவே சுயவிமர்சனத்துடன் கூடிய தன்னடக்கமான ஞானச்செருக்கே சிறந்தது என்பேன் நான்.




4 comments:

  1. Please read books and see the videos in the link..

    மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
    இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
    ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

    இங்கே சொடுக்கவும்

    ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
    அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    ReplyDelete
  2. அது தான் இவர் 2 நாளுக்கு முன் உரையாற்றிய இடம் , அங்கு சில தலைப்பாகைகளும் சில கூஜாக்களும் மாத்திரமே சென்றிருந்தார்கள் .. நான் பக்கத்தில் நின்றும் செல்லவில்லை ..இவரின் நகைச்சுவைப் பேச்சுக் கேட்க ஆசை தான் ...ஆனால் அந்த அரைகுறை ஞானச் செருக்கிற்கு முன் போக விரும்பவில்லை...

    ReplyDelete
  3. நீங்கள் குறிப்பிடும் இக்கவிஞர் புலம்பெயர் நாட்டவர்களிடம் பலமுறை ஏமாற்றி பணம் வாங்கியதும் உண்டு. சொல்லகூடாது ஆனாலும் அவருக்கு பணஉதவி செய்தவர்களில் நானும் ஒருத்தி. இவர்கள் தான் இன்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார்கள்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்