உயிர்த்தலுக்கான வழி

நகரும் பாம்பின் ஒலியோடு
மெதுவாய் ஊர்ந்து
உன்னுள் படர்ந்து
உன் சக்தியை உறுஞ்சி
அநாதர உணர்வை உணர்த்தும்
அந்தத் தனிமையுணர்வினைப் பற்றி
நீ எவருடனும் பேசிக்கொள்வதில்லை
நாங்கள் அறிவதையும் நீ விரும்பியதில்லை

உன் வாழ்வினுள்
பிறழ்வுகளை அனுமதித்து இருப்பாயேயானால்
அவற்றை சந்திக்கவும், எதிர்கொள்ளவும்
ஏன் கடந்து போகவும்
கற்றுக்கொள்
அப்போது தான்
நீ காற்றாகி
மீண்டும் உயிர்க்கலாம்
 

3 comments:

 1. கடந்து போகவும் கற்றுக்கொள் வித்தியாச மான உணர்வுடன் கூடிய கவிதை வரிகள்.தொடர்ந்து இப்படியான விடயங்களையும் சேர்த்து வாருங்கள் விசரன் ஐயா!

  ReplyDelete
 2. சிலசமயங்களில் தனிமையே பாதுகாப்பு.யாருக்கும் எதுவும் சொல்லவேண்டாம்.கடக்க வீழ்ந்துவிடாத துணிவுதான் வேணும் !

  ReplyDelete
 3. ///பிறழ்வுகளை அனுமதித்து இருப்பாயேயானால்
  அவற்றை சந்திக்கவும், எதிர்கொள்ளவும்
  ஏன் கடந்து போகவும்
  கற்றுக்கொள்///

  அருமை..........

  தனிமை சில நேரம் துணையாகவும்
  பல நேரம் துன்பமாகவும் இருக்கிறது
  அப்பப்ப வந்து போகும் தனிமை சுகம்
  எப்போதும் தனிமை சோகம்

  யாருமில்லாமல் தனிமை சந்தர்ப்பம்
  பலர் இருந்தும் தனிமை மனோநிலை
  எதுவாக இருந்தாலும் கடந்து போக கற்றுக்கொள்ளவேண்டும்..

  ReplyDelete

பின்னூட்டங்கள்