வாழ்வுடனான பூசலும் சமரசமும்
இன்று எழுத்தாளர் ஜெயமோகனின் ப்ளாக் வாசித்துக்கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது அவர் எழுதியிருந்த இந்த வாக்கியம் ” இன்று எனக்கு கொஞ்சம் வயதாகிவிட்டது. பூசலை விட சமரசமே பிடிக்கிறது”
அவரது ஆக்கத்தை தொடந்து வாசிக்க முடியாதளவுக்கு மனம் கடந்து போன 45 வருடங்களையும் மெதுவாய்க் கடந்து வரத் தொடங்கிற்று.
எனக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் ஒரே வயதிருக்கும் அல்லது அவர் சற்று வயது குறைந்தவராகக்கூட இருக்கலாம். அவருக்கும் எனக்கு வந்திருக்கும் ஞானம் வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.. அல்லது அதைத் தான் தான் வாழ்வின் புரியாத தத்துவங்கள் என்றும் வாழ்வனுபவம் என்றும் சொல்கிறார்களா??
சமரசத்தில் இரண்டு வகைகளிருக்கிறது போலிருக்கிறது எனக்கு. முதலாவது ஒருவர் மற்றவருடன் செய்யும் சமரசம். மற்றையது நாமே நம்முடன் செய்து கொள்ளும் சமரசம்.
முதலாவது சமசரத்தை அடைய ஈகோ என்னும் பேயை வென்றாக வேண்டும். இது மிகக் கடினமானது.
ஆனால் இரண்டாவது மிக இலகுவானது, மிகுந்த ஆறுதலைத்தருவது.
இளமையும், திமிரும் இருந்த நாட்களில் நானும் கருத்து வேறுபாடுடையவர்களுடன் மோதியவன் தான். ஆனால் அடி தடி என்று பாடசாலைக் காலத்தின் பின்பு இறங்கியதில்லை என்றாலும் இந்தியாவில் மொக்கை போட்டுத் திரிந்த காலத்தில் இயக்கம் அது..அது என்று கதை தொடங்கினால் பிறகு என்ன நட்புகளுடன், அன்று மாலை படம் பார்க்கும் போகும் வரை பேச்சுவார்த்தை இல்லாமல் போகுமளவுக்கு காரசாரமாயிருக்கும். (அடிதடி வார மாதிரி இருக்கும் ஆனால் வராது.)
நோர்வே வாழ்க்கையிலும் விளையாட்டு, பொது வேலைகள், சங்கங்கள் என்று வாழ்ந்து திரிந்த காலங்களிலும் பல நட்புகளை நானும், அவர்களும் ”சமரசம்” என்னும் கையை நீட்டிக் கொள்ளாததனால் இழந்திருக்கிறோம்.
அவற்றில் சிலவற்றில் இன்னும் அந்த வடுக்கள் மறையாதிருப்பது ஏனோ வலிக்கிறது. நிரந்தர வடுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று செய்யப்பட்ட செயல்களல்ல அவை. இருப்பினும் தற்போது திரும்பிப் பார்த்தால் அவற்றைத் தவித்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.
எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் நடந்து கொள்வதென்பது முடியாதென்பதை நான் அறிந்து கொண்டதும் அந்தக் காலத்தில தான். கருத்து வேறுபாடு இருந்தாலும் நட்பாய் இருக்க முடியும் என்று நம்புபவன் நான். இருப்பினும் யதார்தத உலகத்தில் அது இலகுவாயில்லை. இரு கைகளும் தட்டினால் தானே சத்தம் வருகிறது
சிலர் வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத வடுக்களை தந்துபோவார்கள். என் வாழ்விலும் இப்படிப்பட்டவர்கள் சிலர் இருக்கிறார்கள். தேவையில்லாத கதைகள், பொய்க் கதைகள், ரணப்படுத்தும் வார்த்தைகள், முதுகில் குத்துபவர்கள், முகத்தில் உமிழ்பவர்கள், கூட இருந்து குழிபறித்தவர்கள், நட்பென்று பொய் சொன்னவர்கள் என்று ஒரு தொகை அல்லல்கள் கடந்து வந்திருக்கிறேன்.
காலப் போக்கில் இவர்களுடன் சமசரத்தை விரும்பாவிட்டாலும் பூசலில்லாமல் இருக்கவே விரும்புகிறது மனம். இதுவும் ஒரு வித சமரசம் தான். இந்த சமரசம் நான் என்னுடன் செய்துகொண்ட சமரசம்.
இதனாலோ என்னமொ மனதில் இருந்த பாரங்கள், அழுத்தங்கள், வேதனைகளெல்லாம் குறைந்தது போலிருக்கிறது தற்போது.
காலம் போகப் போக பிரச்சனைகளை தவிர்த்து, அல்லது பிரச்சனைகளை தருபவர்களை தவிர்த்து அமைதியாய் வாழவே விரும்பகிறது மனம். வயது தான் காரணமாயிருக்குமோ இதுக்கும்? என்னையறியாமல் நான் வயதாகிக்கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது.
இவ்வளவையும் வாசித்துவிட்டு நான் பூசலின்றி வாழ்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் எனக்கும் உங்களுக்குமிடையில் சமரசம் தேவைப்படுகிறது என்றர்த்தம்.
புரிந்ததா நட்பே?
இன்றைய நாளும் நல்லதே
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எனது நன்றிகள்
.
Subscribe to:
Post Comments (Atom)
Anna,
ReplyDeleteIt's really nice article.It recall our mistakes in our past too."Samarasam " > "Poosal", I saw a simple version of "Ghandiyam" too in this.Thanks for giving me to realize ourselves.
Anna,
ReplyDeleteIt's really nice article.It recall our mistakes in our past too."Samarasam " > "Poosal", I saw a simple version of "Ghandiyam" too in this.Thanks for giving me to realize ourselves.
வ்இந்த இயல்பான சமரச உடன்படிக்கை தன்னுள் நிகழ்வதை அறிந்து கொள்வதற்கு கூட தனக்காக வேறு யாரோ ச்சீரியச யோசித்து கொடுக்க வேண்டிருக்கிறது, அதுவும் தன் வயதை ஒத்தவரே இருப்பினும் :) .
ReplyDeleteஅந்தந்த வயசில அது அது மிகச் சரியா காலம் கொடுத்துட்டே வரும், நாம அத எப்படி உள்வாங்கிட்டு பக்குவமா வெளிய வாரோங்கிறதை பொருத்துதான் இப்போ நீங்க புரிஞ்சிட்ட மாதிரி புரிஞ்சிட்டு கட்டுரையா கொடுக்கிறீங்களா... இல்ல பொலம்பிட்டே காலத்தை கடத்துறோமாங்கிறது.
இன்னொன்னு உங்களுக்கு அந்த கசப்பான அனுபவங்கள் கிடைக்கலன்னா இந்த மனுசன் நீங்க இல்ல, சோ, அததது அப்பப்போ கிடைக்கணும் முழுமைகிட்ட என்பது என்னோட புரிதல். இந்த சாப்டர் பொருத்து!
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே!
ReplyDelete