சாலையில் ஒரு செம்மறி


ஓரு பயணம் தொடங்கினேன்
பல வருடங்களுக்கு முன்
பாதி தூரம் கடந்தாயிற்று
ஏன் முக்கால்வாசித் தூரமாயுமிருக்கலாம்
சிலவேளைகளில் முடியும் தருவாயிலுமிருக்கலாம்.

முன்பெல்லாம் திருவி‌ழாக்கூட்டமாய் பலர் உடன் வந்தார்கள்
பயணங்கள் இனிமையாய் அமைந்தன
பாதையின் விதிகள் கற்பிக்கப்பட்டன
அவற்றை மீறியபடியும் விதிகளை கற்றுக கொண்டேன்
பாதையின் கிடங்குகளைக் கடக்கையில் 
கைபிடித்து அழைத்தப்போயினர் சிலர்

பாதையின் தன்மைகள் மாறிக்கொண்டே இருந்தன
விழுந்தால் வலிக்காத மணற்பாதையில் தொடங்கி
பாதுகாப்பான ஒழுங்கை, சாலை என்றாகி
காலப்போக்கில்
பாதைகள் அகன்று
நெடுஞ் சாலையாயிற்று
அதிலும் நடக்கக் கற்றுக் கொண்ட போது
பயணத்தின் கால்வாசி கடந்திருந்தேன்

திடீர் என அழகான பாதையில் நடந்து கொண்டிருந்த போது
பயணத் துணையாய் சேர்ந்து கொண்டனர் சிலர்
பயணம் இலகுவானது போலிருந்தது
அதுவும் சிலகாலம் தான்
பாதை கரடுமுறடாகியது
நான் முணுமுணுத்தபடியே
ஒரு ஓரமாய் நடக்கத் தொடங்கினேன்
துஸ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல

எனது வேகத்திற்கேட்ப
கறடுமுறடான பாதையில் தனியே நடக்கிறேன்
தனிமையின் வெம்மை இங்கும் கொடியதாயிருக்கிறது
தூரத்தில் தெரிபவை கானல் நீராகவும் இருக்கலாம்


கரடுமுறடான பாதை நீண்டு போனாலும்
வழியெங்கும் பாதையின் அருகே
எனக்கு மேலே குருவிகள் சில
இசைத்தபடியே வருகின்றன

பயணத்தின் முடிவு வரும் வரை
நான் நடக்கத்தான் வேண்டும்
என்று விதிக்கப்பட்டிருக்கிறது
வாழ்க்கை என்னும் பாதையில்
நடந்துகொண்டேயிருக்கிறேன்
 .....


9 comments:

  1. பயணத்தின் முடிவு வரும் வரை
    நான் நடக்கத்தான் வேண்டும்
    என்று விதிக்கப்பட்டிருக்கிறது..........true

    ReplyDelete
  2. somewhat your writing have some good contents about a travel.. hope u can write better than this.. thank you visaran..and also i should thank for your kind comment about my writings.

    ReplyDelete
  3. வாழ்க்கை வாழ்வதற்கே

    ReplyDelete
  4. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தனிமையின் வலியை இதைவிடச் சொல்ல முடியாது விசரன்

    ReplyDelete
  6. nice I have enjoyed!!!!!!

    விருப்பு வெறுப்பு இல்லாமல்
    நட்பும் பகையும் இல்லாமல்
    யாசிப்பும் யோசிப்பும் இல்லாமல்
    அருகில் இல்லாமலும் விலகிச் செல்லாமலும் ...

    ReplyDelete
  7. //சாலையில் ஒரு செம்மறி //
    அது நீங்களா?

    ReplyDelete
  8. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  9. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
    எஸ் சக்திவேல் @ வேணா ....

    ReplyDelete

பின்னூட்டங்கள்