காதல் ஆசிரியர்கள்

கணிதவாத்தியார் முத்தம்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாகவே இருக்கிறது
எனவே கணக்குப்பண்ணியது பிழை

கெமிஸ்ட்ரி வாத்தியார்
இதயங்களுக்கிடையிலான கெமிஸ்ரி ஒத்துப் போவதால் இது சரி

பொருளாதார வாத்தியார்
நுகர்வோர் மிக அதிகம் பொருட்கள் குறைவு.. அதனால் கள்ளச்சந்தை

உயிரியல் ஆசிரியர்
உடல்கள் இரண்டு ஒன்றாய்.. புதிய உயிர்

விளையாட்டு ஆசிரியர்
இந்த விளையாட்டுக்கு விதிகள் இல்லை

சமய பாடம் கற்பிக்கும் ஆசிரியர்
மொட்சத்திற்கான வழி

தமிழாசிரியர்
எத்தனை பேர் எழுதியும் முடியாத காவியம்

.

2 comments:

 1. :)  http://vaarththai.wordpress.com

  ReplyDelete
 2. //பொருளாதார வாத்தியார்
  துகர்வோர் மிக அதிகம் பொருட்கள் குறைவு.. அதனால் கள்ளச்சந்தை//

  Naattu nadappu ??

  ReplyDelete

பின்னூட்டங்கள்