சுவாமி நித்தியானந்தாவும், ஆசாமி சஞ்சயானந்தாவும் (வேற யார்... நாம தான்)


நான் ஒரு விசரன் என்பது தெரிந்தவர்களும்
மற்றவர்களின் கருதுக்களை மதிப்பவர்களும்
வாசித்த பின் கத்தியெடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்பவர்களும் மட்டுமே இதை வாசிக்கலாம்.

முக்கியமாக இதை பார்த்த பின்பே மிகுதியை வாசிக்க வேண்டுகிறேன்.

 மனித வர்க்க சுவாமிகளில், லிங்கம் வாந்தி எடுப்பவர்களில் இருந்து, அம்மா அப்பா கடவுள், பிரேமானந்தா, நித்தியானந்தா, அந்த ஜி, இந்த ஜி, மரத்தடியில் குந்தியிருக்கும் கள்ளச்சாமி என நைல் நதியை விட நீளமான இந்த லிஸ்ட் இல் இருக்கும் எவருடனும் நமக்கு கோவம் அல்லது பிரச்சனை என்று ஒன்றுமில்லை. ஆனால் பிடிப்புமில்லை, நம்பிக்கையுமில்லை. தவிர, யார் பிஸ்னஸ் செய்தாலும், எனக்குப் பிரச்சனை இல்லாதவரைக்கும் எனக்கு பிரச்சனையில்லை.

கோயிலுக்கு போவேன். ஆனால் அமைதி கிடைக்கும் கோயில்களை கண்டு கனகாலமாகிறது. எந்தக் கோயிலுக்குள் போனால் அமைதி, நிம்மதி கிடைக்கிறதோ அதுவே  எனக்கு கோயில். புத்தவிகாரை, தேவாலயம், கோயில்கள், வேற்று மத ஆலயங்கள் பலவற்றில் எனக்கு அமைதியும், நிம்மதியும் கிடைத்திருக்கிறது. ஆனால் வெளிநாட்டு தமிழ் கோயில்களில் ..... வேண்டாமய்யா பிரச்சனை எனக்கு.

நேற்று முன்தினம் எனக்கு மிக மிக நெருங்கவர்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தனர்.  அதில் ஒரு யூ டியூப்க்கான இணைப்புமிருந்தது. பிரச்சனை என்னவென்றால் அந்த இணைப்பு சுவாமி நித்தியானந்தா 2010 ஜூலை 10ம் திகதி ”சுதந்திரம்” பற்றி ஆற்றிய  உரை. அண்மையில் தான் இவரை சிறையில் இருந்து வெளியே விட்டிருந்தார்கள் என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

எனக்கு இதை அனுப்பியவர்கள், ஏதும் லொள்ளுக்கு அனுப்பினார்களோ  அல்லது சீரியசாக அனுப்பினார்களோ என்று இன்னும் புரியவில்லை. ஆனால் நானும் இந்த சுவாமியின் உரையே பின்பற்றவேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால்......எருமையின் மேல் மழைத்துளி மாதிரித்தான் இது எனக்கு.

எனக்கும் இந்த சாமியாருக்கும் சத்தியமாக தொடர்பில்லை. அண்மைக் காலத்தில் சரத்பொன்சேகா மாதிரி இவரையும் வாட்டி எடுத்தார்களாம் என்றும், அது கறுப்புகண்ணாடிக்காறரின் டீவிக்களின் திருவிளையாடலாம் என்றெல்லாம் கதை பரவித் திரந்ததை நீங்களும் அறிந்திருப்பீர்கள் தானே.

சுவாமி ஒருத்தியை என்ன, பலருடன் என்னவும் செய்தாலும் அது என்னை ஆச்சரியப்படுத்தப் போவதோ, மனவருத்தப்படுத்தப் போவதோ இல்லை. அது அவரின் சொந்தப்பிரச்சனை.

இந்த சாமி ஏதோ கொலை செய்திருந்தாலாவது பறவாயில்லை பெரிதாகக் கதைக்கலாம் இதை. இந்த மனிசன் ஓருத்தியுடன் படுத்தார் என்பதனை ஏதோ செய்யக்கூடாததை செய்த மாதிரி கத்துகிறார்கள்.

எனக்கு யேசுநாதரின் உங்களில் யார் குற்றமற்றவனோ அவர்கள் கல்லெறியலாம் என்ற கதை தான் ஞாபகத்தில் வருகிறது.

விஞ்ஞானரீதியில் பார்த்தால் சிவனுக்கும், பார்வதிக்கும் அது நடக்காமல் எப்படி இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கும்? உலகம் வாழ்வதும், உருள்வதும் அதனால் தானே. இதற்குப் போய் அந் மனிதரை இவ்வளவு இம்சைப்படுத்தியிருக்கத் தேவை இல்லையே என்பது எனது கருத்து.

அதேவேளை ஒருவன் 3 பெண்டாட்டிகளுடன் உலா வருவதையும், அரசியல்வாதி ”அந்த மாதிரி” பலருடன் தினமும் நடந்து  கொள்வதையும் .. ம் ஏதோ நடத்துறாங்கள் நடத்தட்டும் என்று விட்டுவிடுகிறோம்.
என்ன நியாயம இது?

எனது கேள்வி என்னவென்றால், தங்களை சுவாமிகள் என்று அழைத்துக் கொள்வோரை லௌகீகத்தில் விழுந்தெழும்பிவர விட்டால் என்ன என்பதாகும்? (அவருக்கும் நம்ம கஸ்டம் விளங்கணுமுள)

அப்படி அவர் லொகீகத்தில் இருந்தால் என்ன புனிதம் கெடுகிறதா? சமயம் வாழ்வைத்தானே போதிக்கிறது? கடவுளுக்கு சேவை செய்பவர், தன்னைத்தானே சுவாமி என்பவர்கள்  அல்லது ஊராரால் சுவாமி எனப்படுபவர்கள் ஆகியோர் லெளகீகத்தில் ஈடுபட்டால் என்ன? இதை நம்ம சமயம் தடுக்கறதா? படிச்சவங்க, நாலும் தெரிஞ்சவங்க யாரும் இருந்தா இதற்கான பதிலைத்தாருங்களேன்.

அய்யா சுவாமி நித்தியானந்தரே! உமக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைக்காதீர்கள். சத்தியமாக அந்த வேலை மட்டும் நான் செய்ய மாட்டேன்.

சுவாமீ நீங்கள் ஆற்றிய உரையில்

அகிம்சா! நான் வயலன்ஸ் (non violence) என்றெல்லாம் தூள் கிளப்புகிறீர்கள்,
பாடி, கீடி என்கிறீர்கள்,
உடம்பில்லாமலும் ஒரு இனிமையான அனுபவத்தைப் பெறலாம் என்கிறீர்கள்
பயோ மெமரி, டவுன்லோட்
ப்ளீஸ் அன்டர்ஸ்டான்ட் என்கிறீர்கள்
சரண்டர்
ஏஜ் லஸ் (age less) பாடி
எதிரியை பழிவாங்காதே என்றும்
பேசுகிறீர்கள்..

நல்லது.. மிக்க மகிழ்ச்சி

ஆனால்

எனக்கேதோ நீங்கள், உங்கள் எதிரிகள் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியை, உங்கள் மொழியில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல உங்கள் உரையுனூடாக வாந்தியெடுக்கிறீர்கள் போலிருக்கிறது..

நல்லதில்லையே இது....
நீங்கள் செய்யவேண்டாம் என்பதை நீங்களே செய்வது சரியா, சாமீ?

பக்தர்களுக்கு கொடுக்கப்பட்ட, தங்கமுலாம் பூசிய மணிக்கூடுகள் மங்குவது போலவும், வாந்திக்குள்ளால் வந்த லிங்கங்கள் போலவும், காற்றில் நீறு வருவதும் போலத்தான் உங்கள் உரையும் எனக்குத் தெரிகிறது.

சுவாமீ! நீங்க நல்லவரா? கெட்டவரா?

இறுதியாக:
சுவாமியை கிண்டல் பண்ணுவது நோக்கமல்ல. எனது சிந்தனையை பதிவதே நோக்கம். நான் விசரன் என்பதால் இதை விசரக் கதை என்று சொல்லிவிடுங்கள, உங்களுக்கு,அது பிடிக்கவில்லை என்றால்.

வாழ்க ‌சைவம்.

3 comments:

 1. ///இந்த சாமி ஏதோ கொலை செய்திருந்தாலாவது பறவாயில்லை பெரிதாகக் கதைக்கலாம் இதை. இந்த மனிசன் ஓருத்தியுடன் படுத்தார் என்பதனை ஏதோ செய்யக்கூடாததை செய்த மாதிரி கத்துகிறார்கள்///

  பின்பு என் சாமி / பிரமச்சரி என்று சொல்ல வேண்டும் , நான் சராசரி மனிதன் என் தொழில் அறிவுரை கூறுவது என்று சொலிவிட்டு போ!

  ReplyDelete
 2. சுவாமீ! நீங்க நல்லவரா? கெட்டவரா?

  பதில் : எல்லா ஆசா பாசம் உள்ள பீழைக்க தெரித்த சராசரி மனிதன்

  ReplyDelete
 3. CLICK AND READ

  1 கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!! -.

  2.
  கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி –.


  3.
  பைபிளில் உள்ளவை.: சகோதரியை கற்பழித்து ஒதுக்கியவன்
  ."

  4.
  தகப்பனை கற்பழித்த புத்திரிகள்.  5.
  கற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக.


  6.
  கர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக ? கர்த்தரை வ‌ழிப‌டாத‌ ஆண்க‌ள் பெண்க‌ள் மீது தண்டணையாக‌ கட்டுக்கடங்காத காமத்தீயை பற்றி எரிய செய்து இழிவான பாலுணர்வு அதிக‌ரிக்க‌ செய்து அவர்களை தகாத ஓரினசேர்க்கை உறவு கொள்ள விட்டு விட்டார் கர்த்தர்.. – பைபிள்.


  7.
  தந்தையுடைய வைப்பாட்டிகள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக.ஊரார் முன்னிலையில் கற்பழித்தவன்.


  8. .
  32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா?


  9.
  ஓரு வேசிக்கு எச்சரிக்கை.

  =================

  ReplyDelete

பின்னூட்டங்கள்