போர் போர் போர்


போர் போர் போர்
வாழ்க்கைப் போர்

கைதியும் நான்
கைப்பற்றியவனும் நான்

வெற்றியும் நான்
தோல்வியும் நான்

பெற்றதும் நான்
இழந்ததும் நான்

அழித்தவனும் நான்
அழிக்கப்பட்டவனும் நான்

மரணித்ததும் நான்
உயிர்த்ததும் நான்

ஆனால்

போர் நடந்த
வாழ்க்கை என்னும் பூமி மட்டும்
ஏதுமறியாதது போல்
வாழ்ந்துகொண்டிருக்கிறது..

.

3 comments:

 1. your blog looks nice!


  ˙noʎ ʞuɐɥʇ ˙ǝʇısqǝʍ ʎɯ ʇısıʌ ǝsɐǝןd

  ReplyDelete
 2. நண்பரே! வநது பார்த்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 3. hi, do you like riding a bike?

  ReplyDelete

பின்னூட்டங்கள்