ஒரு கிறிக்கட் மட்ச்சும், மீண்ட நானும்

 எங்களின் சிங்கக் குட்டிகள்.









கதையின் கரு:
இன்று 10.07.2010 மட்டக்ளப்பின் இரு பெரும் பாடசாலைகளான புனித மைக்கல் கல்லூரிக்கும், ‌எமது பாடசாலையான மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையில் ” கிழக்கின் சமர் அல்லது Battle Of Singingfish” என்று அழைக்கப்படும் Big Match (cricket) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்றே, இன்று மைதானத்தில் இருந்து எனக்கு குறுந்தகவல் அல்லது பேஸ்புக் மூலமாக தகவல் வர ஒழுங்கு பண்ணியிருந்தேன்.  எமது பேஸ்புக்ஐ அப்டேட் பண்ணும் பொறுப்பும் என்னிடம் இருந்தது. 

இனி கதைக்குப் போவோம்.
.......................................................

நேற்று படுக்கப் போக முதலே காலை 5 மணிக்கு எழும்ப  வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். காலை எழும்பவும் செய்தேன்.. ஆனால் 5 மணிக்கல்ல 6 மணிக்கு.

மனதுக்குள் திக் கென்றிருந்தது.. அட பசங்கள் துவங்கியிருப்பாங்களே என்றபடி ஓடிப்போய் கணணியை தூக்கி மடியில் வைத்து இயக்கி, இணையத்தினுள் புகுந்து வதன நூல் புகுந்தேன் (வதன நூல் என்றால் facebook என்று சொல்லனுமா..என்ன?)

எனது சுவரை (Wall)ஐப் பார்த்தேன். இப்படி எழுதியிருந்தது அதில்


கிழக்கின் சமர் என அழைக்கப்படும் போட்டி இன்று காலை 9.30 க்கு ஆரம்பமானது

Bt./MCC won the toss & choose batting
openig bats men are

Menakanthan
Riyas

ஆகா.. நம்ப பசங்கள் பட்டிங் எடுத்திட்டாங்கள் என்று  யோசித்தபடியே தேத்தண்ணிக்கு சுடுதண்ணி வைத்து, மற்ற வேலைகளை முடிப்பதற்காக பாத்ரூமுக்குள் புகுந்தேன்

அதற்கு.... குந்துவம் என்று முழங்காலை மடிக்கிறேன், குறுஞ்செய்தி வந்திருப்பதாக கைத்தொலைபேசி சத்தம் போட்டது.
மனசுக்குள் திக்கென்று இருந்தது .. ஓப்னிங் போன பசங்கள் தான் அவுட் போல என்று மனம் பதைபதைக்க.. வந்ததை அடக்கிக் கொண்டு ஓடிப்போய் கைத்தொலைபேசியை தூக்கி பார்த்தேன். 
20/0 என்று இருந்தது அதில்.
அப்பாடா.. என்று நிம்முதியான மூச்சு வந்தது. ஆனால் நெஞ்சுத் துடிப்பு அடங்க நேரமாயிற்று, வயிற்றுக்குள் அடங்கியதை வெளியில் அனுப்பி.. தேத்தண்ணியுடன் சோபாவில் குந்துகிறேன்.. டக் டக் என்று பேஸ்புக்  சாட் பெட்டி சத்தம் போட்டது..
ஒருத்தன் கேக்கிறான் அண்ணண் மடச் இண்டைக்கா என்று.. (வாயில் தூசனம் தான் வந்தது)
 
அவனுக்கு பதில் சொல்லி எனக்கு கிடைத்திருந்த தகவல்களை அப்டேட் பண்ணுகிறேன்.. மீண்டும் குறுஞ்செய்தி வந்த சத்தம் கேட்டது.
மனம் திடுக்கிட்டு பட பட என்று நெஞ்சு டஅடிக்கத் தொடங்கியது. கடவுளே சிக்சர் அடிச்சதை தான் இச் செய்தி சொல்லவேண்டும் என்று மனதுக்குள் நினைத்தபடியே திறந்தேன் குறுஞ:செய்தியை

32/1 11 ஓவர்கள் என்றிருந்தது அதில். 

என்னடா கொடும இது அதுக்கிடையில ஒருத்தன் பொயிட்டான்.. அதோட ரன் ரேட்டும் மோசமா இருக்கே என்று வந்த குறுஞ்செய்தியை அனலைஸ் பண்ணிக்கொண்டே மனம் இப்படி கணக்குப் பார்த்தது.
ரன்ரேட் 2.90.
50 ஓவருக்கு 145 அடிப்பாங்கள்
அதோட இடையில ரன் ரேட் கூடும் அப்ப ஒரு 200 வரும்
எதிராய் விளையாடுபவர்களை மடக்க இது காணும் என்று.
இப்ப மனதுக்குள் ஒரு வித தன்னம்பிக்கை குடிவந்திருந்தது.

ரன் ரேட்ஐ எழுதி கவனமாய் விளையாடுங்கள் என்று எழுதி அப்டேட் பண்ணினேன். மனதுக்குள் ஏதோ அடைத்துக் கொண்டது போலிருந்தது. அசௌகரீயமாய் இருந்தது. எனினும் அடிப்பாங்கள் என்று ஒரு நம்பிக்கையிருந்தது.

திடீர் என்று சீட்டக்கட்டு சரிவது போல நிலமை தலைகீழானது.
தட தட வென விக்கட்டுக்கள் சரியச் சரிய, 
குறுஞ்செய்திகள் துக்கச் செய்திகளை தாங்கி கடல் கடந்து வர,  
பேஸ்புக் சாட் பெட்டிகள் டிக் டிக் என்று சத்தம் போட 
தலை சுற்றிக் கொண்டிருந்தது எனக்கு. 
எனக்கு நான் ஆறுதல் சொல்வதா.. அல்லது துக்கம் பகிர ஓடிவருபவர்களுக்கு ஆறுதல் சொல்வதா என்று புரியாமல் மொட்டையை சொறிந்து கொண்டிருந்தேன். 
வேகமாய் பந்து வீசி விக்கட்டுக்களை விழுத்தும் பையன்கள் மேல் கட்டுக்கடங்கா கோபம் வந்தது.

52/4 18 overs என்றிருந்தது கடைசியாய் வந்த குறுஞ்செய்தி
பேஸ் புக் ஐ துக்கத்துடன் அப்டேட் பண்ணினேன் இப்படி.
என்ன இது.. போற போக்கு ஒரு மாதிரி இருக்கே... என்று.

அண்ணண் ஏதும் செய்யுங்கோ என்று உணர்ச்சிவசப்பட்டார் நிலமையை கண்ட ஒரு அன்பர் ஒருவர்.. (நடக்கிற கதையா அது?)

அதற்குள் இருவர் சாட் இல் வந்து களநிலமைகளை ஆராய்ந்து ரிப்போர்ட் தந்தார்கள். அவர்களின் மனதுக்குள்ளும் பயம் இருந்தது.. ஆனால் வெளியில் காட்டாமல் பில்ட்அப் போட்டபடி அண்ணண், பெடியள் அடிப்பாங்கள் என்றனர்.. நானும் அதையே விரும்பினேன்.

அடுத்து பேஸ்புக் மூலமாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தது. ஒரு விதமாய் ரன் ரேட் ஏறிக் கொண்டிருந்தது. ஆனாலும் மனம் காணாது,  இது காணாது என்று ஓலமிட்டது.
அப்படியிருக்க  இன்றுமொரு விக்கட்டும் போக நிலமை ‎74/5 23 overs என்றிருந்தது.

அடுத்த செய்தி 87
/6/25 என்று தொலைபேசியூடாக வந்து
மூளையில் பதிந்த போது

கெலித்திப் போனது மனது.

சாட்டில் வந்து பலர் அண்ணண் என்ன ஸ்கோர் என்று கேட்டபடியிருந்தனர், என் எரிச்சலின் அளவு கூடிக்கொண்டிருந்தது. (Wall இல் ஸ்கோர் இருந்தாலும் ஏனோ என்னைக் கேட்டனர்.. நல்ல செய்தி  சொல்வேன் என்று எதிர்பார்த்தனரோ என்னவோ)

ஏனோ ஆனைப்பந்தி பிள்ளையார் ஞாபகத்தில் வந்தார்.

அடுத்து வந்த செய்தியும் நல்லாயிருக்கவில்லை 
104/7 29 overs என்றது அது..
மனம் நடுங்கியது போலிருந்தது.. பிறகும் துக்கசெய்திகளுடன் குறுஞ்செய்தி வந்தது. கடைசியாய்
வந்த செய்தி இப்படிச் சொன்னது 125
/10/35.1 ன்று.

இதையும் கனத்த மனதோடு அப்டேட் பண்ணி தேத்தண்ணி குடித்துவிட்டு வருகிறேன்
பேஸ்புக் இல் இப்படி எழுதியிந்தார்கள்..

வெல்வோம்! நாம்!

Yes. u r right.our bowling side was very good.b.cuze 9 bowlers in our team now. so dn't worry booooosssssss...........
உசாரில்லாத மனதுடன் 
ஏதோ பார்த்து செய்யுங்க என்றும்

125/10 35.1 overs சிக்கல் தான்... ஆனால் பயங்கரமாய் பந்தெறிவார்கள் நம்ம பசங்கள் என்கிறார்கள்.. விசயமறிந்தவர்கள்
என்றும் எழுதி மனதை தேற்றிக் கொண்டேன்

அதற்கு ஒருவர்

It is not a big matter.. You can do boys.. என்று ஆறுதலாய் எழுதியிருந்தார்.. வாசித்ததும் சற்று தெம்பு வந்தது.

இதற்கிடையில் மைதானத்தில் இருந்து வீடியோ எடுத்து போட்டிருந்தார்கள். அதையும் பார்த்தேன்.


கனநேரமாக குறுஞ்செய்தி வரவில்லை,
பொறுக்க மாட்டாமல் தொலைபேசியை இயக்கினேன்
பதில் இல்லை.. மனது பலமமாய் அடித்தது
இன்னொரு இலக்கத்துக்கு போன் போட்டேன்
நல்ல வேளை தூக்கினார் போனை அவர். நிலமை என்னய்யா என்றதும்.. தெரியாது தான்  வீட்டில் நிற்கிறேன்.. திரும்பப் போனதும் பதில் போடுகிறேன் என்றார்.

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. மற்றவர்கள் பட்டிங் தொடங்கியிருப்பார்களோ? என்ற சந்தேகமும், நிலமையை அறியும் ஆர்வமும் என்னையாட்ட மீண்டும் தொலைபேசியை இயக்கினேன். ஏறத்தாள 10 ரிங்போன பின் எடுத்தார் அவர். என்னய்யா நிலமை என்ற போது:

1/0 3 overs... என்றார் அவர். என்னடா இன்னும் ஒருத்தனும் அவுட்டாகேல்லயா என்று கெலித்தது மனது.. ஆனாலும் ஒரு ரன் மட்டுமே கொடுத்திருந்தது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது.

அடுத்து
33/0 11 overs...என செய்தி வந்த போது வாழ்க்கை வெறுத்தே விட்டது. என்னய்யா இது.. வயித்த கலக்குது.. ஏதும் செய்யுங்கள்

என்று எழுதி அப்டேட் பண்ணினேன்.

14/0 6 overs என்ற போதும் மனம் அமைதியில்லாமல்.....விக்கட் ”பலி” கேட்டது.
41/1 என:ற போது பெரிதாய் மகிழ்ச்சியடையவில்லை மனம்.
46/2 என்றது அடுத்த செய்தி.. இதயம் சூடாகத் தொடங்கியது.
49/3 சிறு பிள்ளையாய் குதூகலித்தேன். போல் போட்டவனை கட்டியணைத்து தூக்க வேண்டும் போலிருந்தது.

இப்படி அப்பேட் பண்ணினே் எனது பேஸ்புக் ஐ
”49/3 15 overs.. அப்பிடி போடு.. இன்னும் 3 விக்கட் களட்டினா கானும்.. விடாதீங்கோடா”
என்று
திடீர் என்று காற்றில் வந்த குறுஞ்செய்தி என்னை காற்றில் சருகாய் மாற்றியிருந்தது. ஆம் 52 / 4 என்று இருந்தது அதில்.

பேஸ்புக சாட்களால் நிரம்பி வழிய பல நெஞ்சங்கள் பூரித்துக் கிடந்தன
77/6 wicket
87/7 wicket

90/8 wicket

என சொர்க்கத்தை திறந்து காட்டிக் கொண்டிருந்தார்கள் எங்கள் பாடசாலையின் இளஞ் சிங்கங்கள்.

இடையில் இரு கணணி  திருத்த வேலைகளுக்காக ( அது எனது தொழில்) அழைப்பு வந்தது. இப்போ நேரமில்லை மாலை பார்போம் என்று கலைத்தேன்  அவர்களை.  (டேய் உழைப்புடா என்றது வளர்ந்த மனது.. போனால் போகுது அது என்றது எனக்குள் மீண்டிருந்த குழந்தை மனது)

90 ரன் என்றால் இன்றும் 35 ரன் எடுக்குவேணும். இவங்கள் எங்க அடிக்கப் போறாங்கள் என்று மனம் குதூகலித்தது. மனம் குழந்தையாய் மாறி இருக்க உலகம் பஞ்சாய் இருந்தது எனக்கு. (வருடக்கணக்காயிற்று இப்படி இருந்து.. இனிமையான அனுபவம் அது)

என்னையறியாமல் இப்படி ஏதோவெல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன்

நமக்கு குசி தாங்க முடியவில்லை.. ஊரில் நாம இல்லையே...
இனி அமத்திப் போடுவாங்கள்
ஆகா.. போட்டுத்தாக்குறாங்குள் போல...

திடீர் என ஒரு வித தகவலும் வரவில்லை. பேஸ்புக்கும் அமைதியாய் இருந்தது.
மனம் பரபரத்தது..
இருப்புக்கொள்ளவில்லை
வீட்டுக்குள் நடப்பதும், தொலைபேசியை பார்ப்பதும், பேஸ்புக்ஐ பார்ப்பதுமாய் இருந்தேன்.
பொறுமை காற்றில் பறக்க இப்படி எழுதினேன் இப்படி

அய்யோ! அங்க என்னய்யா நடக்குது.. கெதீல அப்டேட் பண்ணுங்கப்பா என்று

திடீர் என 107/8 wicket பேஸ் புக் அறிவித்தது. மனம் தனக்கு தானே ஆறுதல் சொன்னது என்றாலும் நிம்மதி தொலைந்திருந்தது.

110/8 என்று செய்திவந்தது.. மனம் பதைபதைக்க தொடங்கியது. எனோ அசௌகரீயம் உணர்ந்தேன். துக்கம் பகிர்ந்தார்கள் பலர்.
அண்ணண் என்ன நடக்கும் என்றார்.. ஒருவர்
மனதுக்குள் இருந்த எரிச்சல் வார்த்தையாய் தெறித்தது இப்படி
தெரிந்தால் நான் ஏன் இங்க இருக்கிறேன் என்று.. மனிதர் வாய் திறக்கவில்லை அதன் பின்.
117/8 என்று செய்திவர இதய‌ம் ஒரு முறை நின்று மீண்டும் அடிக்கத் தொடங்கியது.. என்னடா இது இன்னும் 9 ரன் அடித்தால் கதை கந்தல் ஆகிவிடுமே என்று பயந்து கொண்டிருந்தேன். 
கையில் கிடைத்த வெற்றி வாய்க்கு கிடைக்காமல் போகுமா? எனறு மனம் குழம்பித் தவித்தது. வந்த சாட் பெட்டிகளை உதாசீனப்படுத்தினேன். மனம் தவியாய் தவித்தது. கோபம் உச்சந்தலையில் குடிவந்திருந்தது. நிதானம் காற்றில் பறந்து கொண்டிருந்தது.
பொறுமை காற்றில் பறந்து  கொண்டிருக்கும் போது
வந்து ஒரு செய்தி பேஸ்புக்இல் இப்படி 117/9
துள்ளிய உயரம் இன்னும் 2 சென்டீமீற்றர் அதிகமாயிருந்தால் தலை ஓட்டையாகியிருக்கும்.
மனம் இழந்திருந்த தைரியத்தை பெற்றிருந்தது. கடைசி ஆள் தானே.. இவன் எங்கே என்று எதிரியை இழக்காரமாய் எண்ணியது மனது.
மீண்டும் காற்றில பறக்கத் தொடங்கியிருந்தேன்.
திடீர் என மீண்டும் செய்திகள் வராமல் அமைதியாகின
ஒரு நிமிடம்
இரண்டு
நிமிடம் என்று எகிறிய நேரம் மூன்று என்று ஓடிய போது
பொறுமை காற்றில் பறக்க, போன் போட்டேன்..
மறுபக்கத்திலும் பதட்டம் தெரிந்தது.. எல்லோரும் எழுந்த நிற்பதாயும்.. எதுவும் நடக்கலாம் என்றும் பதில் வந்தது.

இன்னும் இரண்டு நிமிடங்கள் ஒரு வித செய்தியும் இல்லாமல் போக மீண்டும் போன் போட்டேன்..
அண்ணா.. ஒரு ரண் அவுட் அருந்தப்பில் தப்பி விட்டது என்றும், இன்னும் 4 எடுத்தால் வென்று விடுவார்கள் என்றார் பரிதாபமாக. அடித்து வைத்தேன் போனை.
மனதுக்குள் எதுவும் நடக்கலாம், அதுவும் இது தானே கடைசி விக்கட் என்று மனம் ஆறுதல் சொன்னது.
 
வருவேன் என்ற காதலி வராவிட்டால் எப்படி நெஞ்சிருக்குமொ அதை விட மோசமான நிலையிலிருந்தேன்.  (இந்த நேரத்தில் காதலி வந்திருந்தாலும் அடித்துக் கலைத்திருப்பேன்)
மீண்டும் போன் போட்டேன் நிலமையில் மாற்றம் இருக்கவில்லை.  நெஞ்சு வெளியில் வந்துவிடுமோ என்றளவுக்கு சத்தமாயும், வேகமாயும் துடித்தது. ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை. வேர்த்தது. தோல்வியின் வலி குடிவந்திருந்தது.
இல்லை இன்று வென்றே ஆகவேண்டும் என்று அடம்பிடித்தது மனது.
நேரம் எகிறியது.. ஒரு வித சத்தமும் இல்லை.. எனது உயிர் அடங்கிவிட்டது போலிருந்தது. பொறுக்க முடியாமல் போன் போட்டேன்..

மறுபக்கம் மெளனமாய் இருந்தது சில நேரம்.. புரிந்தது எனக்கு.
அண்ணா அவர்கள்  வென்று விட்டார்கள் என்று பதில் கிடைக்க..
தொப்பென்று விழுந்தேன் சோபாவில். மனம்  தோல்வியின் கனத்தை சுமந்து கொண்டிருந்தது.

சற்று அதிகமாகவே  ஆறி.. 
வென்றவர்களை வாழ்த்தி எழுதியும், எங்கள் சிங்கங்களை வாழ்த்தியும் எழுதி அப்டேட் பண்ணினேன். தோழமைகளின் தோளில் கைபோட்டு ஆறுதலடையத் துடித்து மனது.

வெளிநாட்டு வாழ்க்கையின் வேகத்தில்
மரத்துப் போயிருந்த 

மனதில்
தோழமையின் ஈரம் 
தந்திருந்த ஈரலிப்பில் 
மீண்டிருந்தேன் நான்.
இன்றைய நாள் 
நான் தொலைத்திருந்த 
எனக்குள்ளான குழந்தைத்தனத்தையும், 
கவலை மறந்து காற்றில் கலக்கும் என்னையும்,  
வெற்றியின் மீதான வெறியையும், 
தோல்வியின் கனத்தையும் 
மீட்டுத்தந்திருக்கிறது
மீண்டும்
உயிர்த்திருக்கிறேனோ?


இறுதியாய் 
இதோ... இன்னும் இருக்கிறாய் நீ..
இதோ உன் புனிதப் புமி
இதோ உன் தோழமைகள்..

என்று  என் ஆணிவேர் வரை
ஈரம் உணர்த்திய 
எனது புனிதர்களுக்கு இது சமர்ப்பணம்

இன்றைய நாளும் நல்லதே.

.

9 comments:

  1. Hai,
    It was the best commentary, i ever read in my life.............
    Its because... you were able blend the feelings in higher portion......
    Keep posting...........

    ReplyDelete
  2. கவிதைவரிகளும் வர்ணனையும் அழகாய் வந்திருகிறது

    ReplyDelete
  3. அழகான விறுவிறுப்பான வர்ணனை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இலகுவான நம்ம தமிழ், இலாவகமான வசன நடை என்னை கவர்ந்துள்ளது.... தொடர்ந்து எழுதுங்கள் ஆனால் அவை எம்மக்களின் ஆறாத்துயரை தீர்க்கும் மருந்தாய் இருக்குமானால் நான் ஆனந்தமடைவேன்... 20விகதத்துக்மேல் வறுமையில் வாடும் மட்டக்களப்பான் என றெக்கோட் வைத்திருக்கிறார்கள்......

    ReplyDelete
  5. இலகுவான நம்ம தமிழ், இலாவகமான வசன நடை என்னை கவர்ந்துள்ளது.... தொடர்ந்து எழுதுங்கள் ஆனால் அவை எம்மக்களின் ஆறாத்துயரை தீர்க்கும் மருந்தாய் இருக்குமானால் நான் ஆனந்தமடைவேன்... 20விகதத்துக்மேல் வறுமையில் வாடும் மட்டக்களப்பான் என றெக்கோட் வைத்திருக்கிறார்கள்.... உணர்வான கவிதை நல்லா இருக்கிறது அண்ணா...

    ReplyDelete
  6. It's alive with the real feeling.Very difficult to record such feeling but you made it anna.. All the best!

    ReplyDelete
  7. Sanjayan, Keep up the good work. Please continue to write and I love to read your stories and real life experiences. Prince

    ReplyDelete
  8. நேரடியாக மைக்கல்ஸ் - செண்ட்ரல் மாட்ச் பார்த்த மாதிரி இருந்தது.
    சீவகன்

    ReplyDelete

பின்னூட்டங்கள்