முருகா! நீதான் உன்ட சமயத்த காப்பாத்தனும்....

இந்து மதம் தழைத்து வளர வேண்டும், எதிர்காலச் சந்ததிகளும் அதைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கிலேயே இது எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்த அல்ல. நகைச்சுவையுடன் எனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறேன். தவிர நான் முக்கியமாக வெளிநாடுகளில் இருக்கும் கோயில்களையே கருத்தில் கொண்டே இதை எழுதியிருக்கிறேன். ஆனால் சில கருத்துக்கள் அனைத்துக் கோயில்களுக்கும் பொதுவானவை.

இந்த பதிவின் மூலப்பிரதி  2009 டிசம்பர் மாத யுகமாகினியில் வெளிவந்திருந்தது.


என்னைப் பொறுத்தவரை இந்துமதம்  சற்றேனும் இளசுகளை உள்வாங்கும் நடவடிக்கைகளைச் ஆரம்பிக்காவிடின் இன்னும் 20 வருடக்காலங்களின் பின் ”நம் மதம் இனி மெல்லச் சாகும்” என்று பாரதியின் style இல் நிச்சயமாகச் சொல்லலாம்.

முக்கியமாக வெளிநாடுகளில் பிறந்து வளரும் எமது இரண்டாவது சமுதாயத்தினருக்கு எமது மதத்தின் நெறிகளைகளையும், முறைகளையும் அவர்களின் பாஷையில் எடுத்தியம்ப நாம் மறந்திருப்பதனால் எமது மதம் மீது அவர்களுக்கு பற்றற்றிருக்கிறது.

ஆலயங்களில் ஏன் இளையவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது?

இளையவர்களை உள்வாங்கும் என்ன என்ன நடவடிக்கைகளை இந்தக் ஆலயங்கள் செய்கின்றன?

இளையவர்களின் யதார்த்தமான  மதம் சம்பந்தமான கேள்விகளுக்கு எவ்விதமாக பதிளிக்கிறோம்?

பணமே கடவுளாகிவிட்ட கோயில்களில் வாழ்வு, தியானம், நற்சிந்தனை போன்றவற்றை தொடர்ச்சியாக ஏன் இளையவர்களுக்கும், எங்களுக்கும் கொடுக்க மறுக்கிறோம்?

நாம் சற்றே சிந்திக்கவேண்டியிருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது எனக்கு.
உங்களுக்கு?
.......................................

எனக்கு கோயில்களைப் பிடிக்காமற் போன காரணம், அவர்கள் இன்னமும் பழசைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நைன்டீன் டுவன்டி யில பாடின அதே பஜனை ராகத்தில இன்னமும் கையைத் தட்டி Tractorக்கு பின்னால ஒரு பழசு கத்த மற்ற விசருகளும் ஜிங் ஜாங் தட்டி, தவளைகள் மாதிரி அந்த முதல் பழசு கத்தினதயே கத்துறது தான்.

பாரதி, சிறுமை கண்டு பொங்குவாய் என்று இதையும் சேர்த்து தான் பாடினான்.. எங்க விளங்குது எங்கட சனத்துக்கு அது.

இளசுகள் எப்படி அதுக்குள்ள வருங்கள்? அதுகள் இந்தக் காலத்தில காற்றின் சுதந்திரத்தை வேண்டி அறிவின் அடிப்படையில் சிந்திக்குதுகள். எங்கட பழசுகளின்ட கூத்துகள ”senior citizens” என்டதுக்காக மட்டுத்தான் பொறுத்துக் கொண்டிருக்குதுகள். அதுக்காக நீங்க செய்யுறது சரி எண்டு misunderstand பண்ணாதிங்கண்ணா...

பழைய பஜனையை யுவன் சங்கர் ராஜாவின் இசை மாதிரி இளைஞர்களின் மொழியில் மாற்றி அதை rap பண்ணிப் பாடி, hip pop dance கலந்து விட்டுப் பாருங்கள் கோயிலில் பழசுகளுக்கு நிற்க இடமிருக்காது.
அப்படி நடக்க விடுவாங்களே....விட மாட்டாங்கள் உந்த படிச்ச பூச்சாண்டிகளும், எங்கட கோதாரிவிழுந்த பழசுகளும்?

Let me talk today

இன்டைக்கும் கிருபானந்தவாரியார் மாதிரி சொற்பொழிவு ஆற்றினால்..இளசுகள்
Hey man, Who is his old guy?
Boring ya
He is killing me..ya

எண்டு சொல்லி வெளியால ஓடுங்கள்.

அதையே இளசுகளின்ட taste ஏற்ற மாதிரி linguistic language, body language மாற்றி, technology கொஞ்சம் கலந்து விட்டுப் பாருங்கள் சமயச் சொற்பொழிவுகளை இளமை கொண்டாடும். சைவம் தழைக்கும்.

come-on ya

வேட்டி, பாவாடை, தாவணி போட்டுத் தான் கோயிலுக்கு வரோணுமே? You know what? I think lord Shiva will love "Levis" jeans as our youngsters do.

To my generation and those who are older than us.....

கடவுள் மனதின் சுத்தத்தை மட்டும் தான் பார்ப்பார். உங்கட costly காஞ்சிபுர வேட்டியையும், மடிப்புக் கலையாத நடிகையின் பெயர் கொண்ட sareeயையுமே பார்க்கிறார்... வாயில நல்லா வருது...shut up and listen

உங்களில எத்தின பேர் கோயிலுக்கு வந்து உண்மையா கும்பிடுறியள்.... அங்க ஜொள்ளு விடுறதும், மற்றவளின்ட சாரியையும், சங்கிலியையும் தான் பார்க்கிறீங்க. What I mean is உங்கட மனது புழுத்து நாறுது. ஆனால் உங்கட costly வேட்டி and saree மட்டும் நல்லா இருக்கு... Got my point?... good

விடுங்கோ இளசுகளை அதுகளின்ட பாட்டில. அதுகளுக்குத் தெரியும் கோயிலுக்கு அரை நிர்வாணமா வரக் கூடாது எண்டு. அப்படி வந்தாலும் அதுகளின்ட மனது சுத்தம். ஆனா உங்கட கண்ணை bleach போட்டு கழுவி மனதை Dettol போட்டு கழுவ வேணும்.

ஒரு இனத்தவர் தான் கோயிலில பூசை செய்யோணுமோ? மவனே விசரக் கிளப்பாத. கடவுளுக்கு, நீயும் நானும் ஒன்று தான். அவர் மனிசரத் தான் படைச்சவர். கடவுளிட்ட கேட்டுப்பாருங்கோ... He will laugh at you.

இளசுகளிட்ட விட்டுப்பாருங்கோ...

மந்திரங்களை எங்களுக்கு புரியுற மாதிரி உங்கட டமில்ல தருவார்கள். உங்கள விட விசேடமாய் ஆங்கிலத்திலயும், frenchலயும், spanishலயும் சைவசமயத்தை ஆராய்ந்து, மற்ற சமயங்களோட விவாதித்து உலகம் வியக்கச் செய்வார்கள். மதங்களைக கை கோர்க்கச் செய்வார்கள். எங்கள மாதிரி இவன் சோனி, அவன் வேதக்காரன், அவன் பிக்கு என்டு விசர்த்தனமா பினாத்தாதுகள்.

Be quiet and let them play

என்ன கோயில் திருவிழாவோ? நோட்டீஸ் அடிக்கோணுமோ.. ஓம் ஓம் அதில பெருசா சாமிட படம் போட்டு old தமிழில் 50 தேவாரம் போட்டு (கனபேருக்கு விளங்காது) அதைவிட முக்கியமா ஆர் அந்த நோட்டீஸ் அடிச்சது என்று பெரிதா போட்டு பப்லிசிடி தேடுற உங்கட கூத்த 45 வருசமா பார்த்துக்கொண்டு தான் வாறன். I am getting tired of you guys..

இளசுகள் என்டால் ‌Hi, Let us start a website for our festival எண்டும்  linux serverல தொடங்கி Tomcat ல html ல எழுதி website போட்டு.  Facebook, twitter என்று ஆயிரம் செய்வான் (என்னது மந்திரம் மாதிரி இருக்கோ நான் கதைக்கிறது.. அது சரி நான் தான் கொஞ்சம் யோசித்திருக்க வேணும் மோட்டுப் பழசுகளோட கதைக்கிறன் எண்டு... Sorry guys)

உங்கட போஸ்டர் பக்கத்து ஊருக்கும் போகாதே (ஏன் என்றால் அது குறைந்த சாதிக்காரன்ட ஊரெல்லோ)

இளசுகளின்ட web site முழு உலகுக்கும் அறிவிக்கும் முருகனின் திருவிழாவை.

உங்கட போஸ்டருக்கு வழுவழுப்பான பேப்பரும் (அதை செய்ய 10 மரம் வெட்டணும்), கனக்க மையும் வேணும். அவன் environment friendly விசயத்தை simpleஆ முடிப்பான்... environment friendlyலியா? அது என்ன என்டு கேட்டால், I'll kill you man.

நீங்களெண்டால் உங்கட சாதிக்கு மட்டும் தான் சொல்லி கொண்டாடுவீர்கள். அவங்கள், முழு உலகுக்கும் அறிவிப்பார்கள் ”Come and celebrate with us” என்று.

நீங்களெடுத்த Video வெளிநாட்டில இருக்கிற உங்கட பிள்ளேட்ட போக மாதங்கள் வேணும். அவனோ live telecast, webcast என்டு உங்களுக்கு விளங்காத tecnologyல உடனுக்குடன் முருகனை உலகுக்கே காட்டுவான்.

I think you are getting scared, aren't you?
But, I am not going to stop here
I've got more stuff today
I want to talk

உங்கட தர்மகர்த்தா எண்ட பில்ட்அப் எல்லாம் அவர்களுக்கு பிடிக்காது கணக்கு வழக்குகளை ஒளித்துப் பித்தலாட்டம் பண்ணுவதும் பிடிக்காது. Hey guys! We are living in a democratic country, let everybody know about our accounts என்பான். காசு கணக்கு கேட்டவுடனே உங்களுக்கு மூத்திரம் போக வேணும் போல இருக்குமே இப்ப.

அதை விட உங்ளிட்ட இருக்கிற காசப் பார்த்து...Oh my god.. Do you have so much money? Why can't you build a home for poor kids in Vavuniya and Matara? என்பான்......என்ன ஒரு நாத்தம் அடிக்குது... ஓ உங்களுக்கு வயித்தகலக் கீட்டுது போல. அய்‌யோ பாவம்.

கோயிலுக்குள்ள அங்கவீனமுற்றவர்களும், அவர்களின் சக்கர நாற்காலிகளையும் வருவதற்கு ஏதும் செய்திருக்கிறீங்களே? என்னது....ஓம் ஓம் .... அந்த நொண்டிக்கு என்னத்துக்கு கோயில், செய்த பாவத்துக்கு தானே கடவுள் நல்லா கொடுத்திருக்கிறார் என்டு நீங்கள் முணுமுணுக்கிறது கேட்கிறது. Does anybody have a gun here?

இளமை என்ன சொல்லும் தெரியுமோ? Let make this temple available for everybody .

Install a lift என்பான்

காது கேளாதவனுக்கு ”அவர்களது பாசையில்” கோயில் சம்பந்தமான சகலதையும் விளக்குவான்
கண் தெரியாதவனுக்கு ”‌அவர்கள் மொழியில்” புத்தகமே செய்வான்

கேக்குது...... கேக்குது

உந்த சனியன்களைக் (என்னை) கோயிலுக்குள்ள விட்டதால தெய்வக்குற்றம் வந்திட்டுது என்று குசு குசுப்பது கேக்குது....மவனே! .. உன்ன கொல்லாம விட்டாத் தான் தெய்வக்குற்றம் வரும். Shut up and keep quiet.

திருவிழாவில பலி கொடுக்கப் போறியளோ சனம் நேர்ந்து விட்ட மிருகங்களை? அது சரி... மிருகங்களுக்கு எங்க உயிரின்ட அருமை தெரியப் போகுது. போட்டிக்கு 1001 ‌தேங்காயுடைச்சு புண்ணியம் தேடுற மனிசரெல்லே நீங்கள். ஹய்யோ..    ஹய்யோ

உன்ட வாரிசு என்ன சொல்லும் தெரியுமோ?

Be kind with animals too
Give the animals to our poor people எண்டும் சொல்லும்
தேங்காய அநியாயமாக்காம ஏழைகளுக்கு கொடு என்றும் சொல்லும்

மனிதம் மறந்த உனக்கெல்லாம் இது விளங்கவே போகுது.... Poor guys

உன்னைய மாதிரி உன்ட தாத்தா காலத்து ‌முட்டாள் வேலையை, ஏன் என்று கேள்வி கேக்காமல் கீறுப்பட்ட ரெக்கோட் (mp3 என்டால் உனக்கு விளங்காது) மாதிரி செய்ய மாட்டான் நீ செய்தெடுத்த உன்ட வாரிசு.....You old guys need some fresh air.இளசு பிள்ளையாருக்கு cosmetics operation செய்து.. diet போட்டு, exercise பழக்கி சூர்யாவின்ட six pack வயிறு மாதிரி ஆக்கி, trend பழக்கி They will make him look sexy (இந்த sexy என்ற சொல்லின் அர்த்தம் வேறு ஹி ..ஹி)

உங்க பாருங்கோ..... sexy எண்ட சொல் கேட்டு கோயிலில தூங்கி வழிந்த பழசுகளெல்லாம் எழும்பி இருக்கிறதை.. அய்யோ..

என்னது... பிள்ளையார சூர்யா மாதிரி sexy ஆக்கின மாதிரி சரஸ்வதியையும் நயன்தாரா மாதிரி உடுக்கச் சொல்லுறதோ?.....டேய் எடுங்கடா அந்த கத்திய.... bloody hell.
உந்த ரசன மட்டும் உங்ளிட்ட இருக்கு...

You know what? Young guys are going to start gymnastic classes at the temple.

டேய் யாராவது அந்த பழசின்ட செவிட்டு மெசின ஓன் பண்ணி விடுங்கோ.... சனியன், நான் class என்டத glass என்டு நினைத்து லைன்ல நிக்க எழும்புது

கொஞ்சம் பொறு....
இன்னொன்டு gym தேவையோ எண்டு கேக்குது? பின்ன ... பேத்தை மாதிரி வண்டியும், ரெண்டு படி ஏறினா இடுப்பை பிடித்துக் கொண்டு, ஓடிக் களைத்த குதிரை மாதிரி புஸ் புஸ் எண்டு மூச்சு விடுறதும், பத்து ஆஸ்பத்திரியில இருக்கிற எல்லா வருத்தங்களையும் ஒரு ஆளே வைத்திருக்கிறதும் யார்? அவங்களே? Seniors please don't ask silly questions.

Can you dance ருத்ரதாண்டவம் as lord Shiva, just for olny one minutes?.....only for just one minute? we might need an ambulance.. and ten doctors for you

கோயில் புக்கைய வயிறு முட்ட திண்டுட்டு பின்பக்கம் போய் diabetes குளிசை போடுறது இளசுகளில்லை.

We need healthy food
Shall we make some fresh smoothies? என்பான் அவன்

திருவிழா முடிய கோயில உன்னை மாதிரி பொதுக் கக்கூசாக மாற்றி வைக்க மாட்டான்
வடிவா ப்ளான் பண்ணி We need to be clean and save the environment என்பான்
உனக்கு தெரிந்த சேவ்....காசு மட்டுமாய் தான் இருக்கும்.. Oh god please help these guys

உனக்கும், உன்ட தர்மகர்த்தாவுக்கும், ஜால்ரா போடுற கூட்டத்துக்கும் சுய விமர்சனம் என்று என்று டமில்ல ஒரு சொல்லு இருக்கென்று தெரியுமோ?.... ஆனா I went to Oxford university in UK in 1960s என்று புழுத்துப் போன சுயபுராணம் படிப்பீங்கள்...Hey man! learn some self-criticism.

மற்றப் பக்கத்தில விட்டுப்பார்

பிழைகள் உணர்ந்து, திருந்தி, மன்னித்து, கை கோர்த்து நடப்பான்... (உங்களுக்கு மன்னிக்கவோ, கைகோர்க்கவோ தெரியாதே)

இன்டர் நெட்டில் வாதப் போர் நடாத்தி, கருத்துக் கேட்டு, எழுதி, பகிர்ந்து, அலசி ஆராய்ந்து Fasebook, Twitter என்று போய்....

வேண்டாம் உதெல்லாம் உங்களுக்கு விளங்காது.......... Come and visit your youngsters' world

என்ன ஒவ்வொரு நாளும் கட்டாயம் பஜனை நடக்குதோ?
எத்தன பழசுகள், எத்தன இளசுகள் அங்க இருக்கினம்?
ஓம்... ஓம்......... 15 பழசு மட்டுமோ..ஓ.கே

அமைதியான வாழ்வு, குடும்பம், தாம்பத்யம் பற்றி கதைக்கக் கூடாதோ கோயிலில? Then, how was lord Shiva able to produce two kids? Answer me please..

இன்னமும் ராமர் காட்டுக்கு போனார்.... ராவணன் கடத்தீட்டுப் போனான் என்டல்லோ கதைக்கிறீங்க.

இளசுகள் ராவணனைப் பார்த்து சிரிக்குதுகள்... buddy, see this ten head graphic man....எண்டு சொல்லி சிரிக்குதுகள்...ராவணன் என்ன software பாவிக்கிறார் என்று உன்ட மகன் இல்ல உன்ட கொள்ளுப் பேரன் கேக்கிறான்? பதில் சொல்லன்டா பழசு...Do you have a முட்டை in your mouth?

ஏதும் புதுசா செய்யமாட்டீங்களே கோயிலில?... உங்களால ஏலாது எண்டு சொல்லுங்கோ... accept it ..guys

ஊருக்குள்ள பாருங்க எத்தனை பிரச்சனை எண்டு. நீங்க என்ன செய்யுறீங்க சமுதாய வளர்ச்சிக்கு? ஆனா நாங்க கோயிலுக்கு வரணும், உங்கட உண்டியல நிரப்போணும்...bloody hell

என்ன....வாய மூடோ?
கனக்கக் கதைக்கிறனோ?
I hope "that buffollow god" with a rope in his hands ..I mean எமன் should come now

Please listen what your young bloods want to do

கோயிலும் சமூகமும் என ஆய்வு செய்வான்
மதம் விளக்குவான்.. (உன் மதம் அடக்குவான்).மனிதம் பேசுவான்
குடும்பம், தாம்பத்யம் பற்றி விளக்கி, யதார்த்தம் பேசி வெளிச்சம் தருவான்

I know that you can't tolerate this
Sorry buddy
But we don't care

At last

(ப‌ழசுகளுக்கு)
Give way for youngsters, unless சைவம் செத்துப் போகும் கெதியில

.

2 comments:

  1. நல்ல பதிவு .......வாழ்த்துகள்

    ReplyDelete
  2. ஹீ ஹீ. "சிட்னி முருகன் துணை" என்றூ மஞ்சள் துண்டு ஓடர் பண்ணியுள்ளேன். அதையும் மாற்றவேண்டுமா?

    "சிட்னி முர்கா, ஹெல்ப் மீ பா"- இது எப்படி?

    ReplyDelete

பின்னூட்டங்கள்