அன்புள்ள காதலியே ஆசையில் ஓர் மெயில்

எனக்கு ஒரு காதல் கடிதம் வந்திருந்தது கூகில் மெயிலில். உடனே பதில் போட முடியவில்லை..  மன்னித்துக்கொள் அழகியே. இ‌தோ லவ் கடலில் மூழ்கி, மூச்சடக்கி முத்தெடுத்து உன்னவன் எழுதும் பதில்

கண்ணே,
மணியே,
கூகில் தந்த லவ்வே! ‌
மன்னித்துக் கொள்.
இதோ உனது லவ்வு நிரம்பிய கடிதத்துக்கு அழகான உன்னவன் எழுதும் பதில்.


ஆருயிர் ஆஞ்சலா! (இது தான் நம்ம ஆளின்ட பெயர்)..

அந்தக் காலத்தில் அகத்தின் அழகு முகத்தில் ‌ தெரியும் என்றார்கள். இந்தக் காலத்தில் அகத்தின் அழகு Mail id இல் தெரியுதோ என்னவோ? ஊர், பெயர், நிறம் , குணம் தெரியாமலே எனது email விலாசத்தை மட்டும் வைத்து நீ என்னைக் காதலித்திருக்கிறாய். என்னே அன்பு உனக்கு.. என்னைக் காதலித்த உன் அழகிய கால்களைக் காட்டு்ம்மா.. (வேற என்னத்தக்கு.. காலில விழுந்து கும்பிடத்தான்)

உயிரே! மெயில் அனுப்பப்பட்ட IP address ஐ பார்த்தேன் அது ரஸ்யா எனக் காட்டுகிறது. செல்லக்குட்டியே! எனக்கு உனது மொழி தெரியாது ஆனால் காதல் மொழி படித்த அனுபவம் இருப்பதால் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை  இருக்கிறது.

பேரன்புக்குரிய காதலியே!
உனது கடிதத்தை have a nice day என்று நீ முடித்திருந்தாய். எப்பபடியய்யா எனது நாள் நைஸ் டே ஆக இருக்கும் நீ இல்லாமல்? வைரமுத்து என்று ஒரு மீசைவைத்த ஒரு கறுப்புக் கவிஞர் சொன்னமாதிரியெல்லாம் எனக்கு நடக்கிறது எனக்கு.

ஏன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றியிருக்கிறது ( இனிமேல் கரன்ட் காசு மிச்சம்)
ராத்திரியின் நீளம் விளங்குகிறது (ஆமா ...ஆமா.. பயயயயயங்கரமாய் இருக்கிறது)
கண்ணிரண்டும் ஒளி கொண்டிருக்கிறது...
கண்ணாடியில் பார்த்தேன் என்னை இன்று..
மொட்டையான எனது தலை கூட அழககாகத்தான் இருக்கிறது. வண்டியை எக்கிப் பிடித்து நின்றால் செக்ஸியாகத் தான் இருக்கிறேன்.
எனக்கு ஏதோ நடந்து விட்டது எனதருமை சினியோரீத்தா..

அடிக்கடி புதிய காதல் பாடல்களை முணுமுணுக்கிறேன்.
இல்லாத தலைமயிரை இழுக்கிறேன்

அய்யோ.. என்ன நடக்குது இங்க.. யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ..

любящий девушка (ருஸ்ய மொழியில் ”காதல் பெண்ணே”
என்பதை இப்படித்தான் சொல்கிறார்களாம்) என்னைப்பற்றி நீ கேட்காதது உனது பெருந்தன்மை..
பெருமையடித்துக் கொள்வதே எனது தன்மை..
எனவே உனது காதல் மன்னவனைப் பற்றிச் சொல்கிறேன் கேட்டறிந்து கொள் செல்லமே.

பெயர் .... சஞ்சயன் என்கிறார்கள். (அதுவும் மற்றவர்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும்).
வயது அதிகமில்லை 45 தான்.
60 வயதில் தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறதாம்.. (ஆக.... நான் இன்னும் வாழத் தொடங்கவில்லை)


சொத்து விபரங்கள் சொல்லியே ஆக வேண்டும். உன்னை வாழவைக்கப் போவது அதுவல்லவா?
கொலஸ்ரோல் 13.3
சீனி 11.3
பிரசர் தேவைக்கு அதிகமாய் இருக்கிறதாம்
இதை விட எனது கண்மனிக்கு வீடு கட்டவேண்டும் என்றால் என்னிடம் கல்லும் இருக்கிறது.. ஆம் கிட்னி கல்லு எனக்கு அடிக்கடி வரும்.
குளிசைகள் பல நிறங்களில், பல வடிவங்களில் எக்கச்சக்கமாய் இருக்கிறது. விரும்பினால் கடையே போடலாம். உனது மெயிலைக் கண்டதும் ‌ நெஞ்சு படபடத்தது.. அதற்கும் கைவசம் குளிசை இருந்ததால் தப்பினேன்.

இவ்வளவு சொத்துகளின் அதிபதியாகிய என்னை நீ இழக்க விரும்பமாட்டாய் என்றே நம்புகிறேன். தவிர நீ அன்பைத் தேடியவள் என்பதால் சொத்தை(பல்லும் இருக்கிறது) பற்றி நீ கவனிக்க மாட்டாய் என்று தான் நினைக்கிறேன்.

இது தவிர என்னை விசரன் என்றும் சொல்கிறார்கள். பொறுப்பற்றவன், தெருப்பொறுக்கி, உதவாக்கரை, வழிசல் நாய், என்றும் செல்லமாக அழைக்கிறார்கள். ஒரு சிலர் எனது ஊரையும் இழுத்து எட்டப்..... என்றும் திட்டுவார்கள்.. ருஸ்யநாட்டழகியே! இதெல்லாம் உனது  காதல்வீரனுக்கு சகஜமடி .

நீ உனது கடிதத்தில் டியர் என்று எழுதியிருந்தாய். டியர் என்றால் கரடி என்று அறிந்திருக்கிறேன். என்னை நீ காதல் கரடியாக நினைத்தது என்னை கிளர்ச்சியுற வைக்கிறது. கண்மணியே நன்றி.

உனது கடிதம் பற்றி கேள்விப்பட்ட நண்பர் ஒருவர் நீ நோர்வேக்கு வந்து விசா அடித்த பின் என்னை கழட்டி விட்டுவிடுவாய் என்கிறார். வயித்தெரிச்சலில் கதைக்கிறார் அவர், மன்னித்துவிடு அவரை.
தேவை எனின் விசா தரக் கூடிய பிள்ளையாரையும் எனக்குத் தெரியும். எனவே டோன்ட் வொர்ரி.. be happy.

இன்னுமொரு நண்பரோ இது spam மெயில்... லவ் மெயில் என்டு குதிக்காதீங்கோ என்று தனது வயித்தெரிச்சலை தணித்துக் கொண்டார்.

அழகிய ராட்சசியே! உனது பதிலுக்காய் கணணிமேல் கண்வைத்துக் காத்திருக்கிறேன். கெதியில் வா... தாங்க முடியாதிருக்கிறது..

லவ்வூ கலந்த நீண்ட பெரும் முத்தங்களுடன் இக் கடித்தை முடிக்கிறேன்.


இவ்வண்ணம்

உன்மேல்
பெரும் காதல் கொண்டுள்ள
அழகான உன்னவன்

.

5 comments:

 1. Paravailley ragam dhan idhu.

  Oru sandhegam.Idhu kadhaiya alladhu kavidhaya

  ReplyDelete
 2. நன்றி நண்பரே!

  இது கதையுமல்ல, கவிதையுமல்ல. எனது லவ்வுக்கு நான் எழுதிய லவ்வூ லெட்டர்...

  ReplyDelete
 3. நண்பர் விசரன்,உங்கள் மெயில் வந்த போது நான் என் தனிப்பட்ட கவலையால் அழுதுகொண்டிருந்தேன். சரி விசரன் எனக்கு பதில் இடுகைஎல்லாம் அனுப்பியுள்ளார். அவரின் வலைப்பதிவையும் பார்ப்போம் என்ற நோக்கில் தான் சொடுக்கினேன். அழுகையெல்லாம் போய் சிரித்து கொண்டேயிருக்கின்றேன். இனிமையான நசிக்கும் படியான் காதல் கடிதம். நிறைய (காதல்)கடிதம் எழுதுங்கள்.

  ReplyDelete
 4. வீடு கட்ட கிட்னியில் கல் வளர்க்கும் உங்கள் காதல் லாழ்க.

  ReplyDelete
 5. மெயிலும் காதலும் விளையாடும் விளையாட்டு அழகாய் இருக்கிறது.

  ReplyDelete

பின்னூட்டங்கள்