விபத்தில் தொலைந்த தமிழ்


மேகங்கள்ற்ற வானம், மெது சூட்டுடனான இளஞ்சூரியன், இலையுதிர்காலத்து நிறங்களுடனான சுற்றாடல் என, இன்று காலை விடியும் போது அழகாயும் அமைதியாயும் இரதது. 

காலையுணவை உண்டு கொண்டிருக்கும் போது தங்கையிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், உங்களின் ஆசிரியர் விஜயரட்ணம் மாஸ்டர் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்றிருந்தது. உடனே இலங்கைக்கு தொடர்பு கொண்டு இத்தகவலை உறுதிசெய்யுமாறு கேட்டு, 5 நிமிடங்குளுக்குள் அது உண்மையான தகவல் என்று இலங்கையில் இருந்து வந்த குறுந்தகவல் உறுதி செய்தது. நேற்று முன் தினம் விபத்தென்றில் சிக்குண்டு, காயப்பட்டிருந்து, இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என அறியக்கிடைத்தது.

வாழ்வின் நிதர்சனமான உண்மைகளில் ஒன்றான மரணம், இன்றும் தன்னை விஜயரட்டணம் சேர் மூலமாக நிறுவிப்போயிருக்கிறது. மனம் கனத்துப் போன நிலையில் னது பால்யக் காலமும், விஜயரட்ணம் சேரும், ஏறாவூரும், மெதடிஸ்த மத்திய கல்லூரியும் ிில்
நிழலாடின.

1980களின் ஆரம்பத்தில், ஏறவூரில் வாழ்ந்திருந்த காலின் காலையில், ள் ீட்டி்க பால்வாங்கி வரும் ‌வேலை என்னிடமே தரப்பட்டிருந்தது. காலையில் விஜயரட்ணம் சேரின் மாமனாரின் (மணியத்தார்) வீட்டிற்குப்  போய் பால் வாங்கிவருவேன். அவர்கள் கூட்டுக் குடும்பமாய் வாழ்திருந்தார்கள் என்றே எனது ஞாபகம் சொல்கிறது.

நான் பால் வாங்கப் போகும் போது சேர், தனது சாம்பல் நிற பஜாஜ் வண்டியை  மஞ்சல் ித் துணியினால் துடைத்துக்கொண்டிருப்பார். அவரின் மாமாவை நாம் மணியம் பெத்தப்பா என்றே அழைத்தோம். பெறுங்க மகன் அவர் வருவார், என்பார் சேர்.  றே பழிய பழைய சாரய போத்தலுடன் காத்திருந்தால் மணியம் பெத்தப்பா அதை பாலால் நிரப்பித் தருவார்.

வீடுபோய், உடை மாற்றி, பஸ் எடுத்து பள்ளிக்கு போகும் போது சில வேளைகளில் சேர்,எங்கள் பஸ்சையும் எங்கள் பஸ், சேரையும் கடந்து போகும். யன்னலால் தலை நீட்டி கை காட்டினால் தலையை மட்டும் ஆட்டுவார். பாடசாலைக்கு வந்ததும் யன்னலால் இனிமேல் எட்டிப்பார்க்காதே என்றும் அறிவுரை சொல்வார்.

சேர் படு ஸ்மார்ட் ஆகவே உடையுடுத்துவார். எப்பவும் கறுப்பு பெல்ட் கட்டியிருப்பார். வெள்ளை உடைகளுடனேயே அவரைப் பார்த்தாக நினைவிருக்கிறது. என்றும் அவரின் தலைமுடி கலைந்திருக்காது. சீப்பு வைத்து வாரிக்கொள்வதைக் கண்டிருக்கிறேன். அவரின் பஜாஜ் என்றும் ின் அலரி மரத்தின் கீழ் நிப்பாட்டப்பட்டிருக்கும்.

1980 களில் விடுலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் சேர் ஒரு பெரிய தமிழர் விடுதலைக் கூட்டனித் ”தூண்” என்று பாடசாலையில் ஒரு கதையிருந்தது. அந் நாட்களில் ப்ளொட் இயக்கம் ஒரு வானொலிச்சேவையை வாரமொருமுறை நடாத்திக்கொண்டிருந்தது. அதன் அலைவரிசையை எங்களுக்கு அறிவித்தவர் சேர் தான். மிகுந்த இனப்பற்றுடையவர். தெளி்ந்த அரசியல் ஞானமும் கொண்டவர்.

எனக்கு தமிழின் பால் ஆர்வமேற்பட காரணமாயிருந்த ஆசான்கள் இருவர். ஒருவர் சா்மாசேர், மற்றையவர் விஜரட்ணம் சேர். 11ம் வகுப்பில் பொருளாதாரம் படிப்பித்தவரும் சேர் தான்.

அவர் தமிழை கற்பிக்கும் அழகே தனி. மற்றைய அசியர்களைப் போல் அடி, உதையில் நம்பிக்கை இல்லாதவர். விடலைகளின் மனம், போக்கறிந்து அதனூடாக தமிழை வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல கற்பிப்பார்.

அவர்  கற்பித்த ”நான் மலரோடு தனியாக என்   இங்கு   நின்றேன்” என்ற பாடலும் எனக்குத் தமிழின்பால் ஈர்ப்பைத் தந்தது. 1980   களில்  இலங்கைத்   தொலைக்காட்சியில் ”இரு வல்லவர்கள்” காண்பிக்கப்பட்ட   அடுத்த   நாள் யார்  நேற்று படம் பார்த்தீங்க டீவியில என்ற வகுப்பைத்   தொடங்கினார்.  அடுத்து வந்த  40 நிமிடங்களும் தமிழ் என்னும் தேன்  உண்ட   களைப்பில்  மயங்கிக் கிடந்தேன்  நான்.

அந்தப் பாடலில் ஜெயசங்கர் விஜயலட்சுமியை  கட்டிப்பிடிப்பதே எங்களுக்கு  கிளுகிளுப்பைத் தந்திருந்த காலம் அது. இருப்பினும் அடுத்து வந்த நாட்களில்  அந்த பாட்டை அக்கு வேறு ஆணி வேறாக  பிரித்து, உதாரணங்களை அங்கிருந்தே  எடுத்து உவமானம், உவமேயம் புரிவைத்தார்.

அப் பாட்டில் இருந்த வார்த்தைகள் அனைத்தையும் மனிதர் பிரித்துப் பிரித்து  ஊட்டினார். திகட்டத் திகட்ட தின்று தீர்த்தோம் நாங்கள்.

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் என்னும் வசனம் வந்த போது முழு   வகுப்பும் குசும்புச் சிரிப்பு சிரித்ததை கண்டு எம்முடன் சேர்ந்து   சிரித்தார் தமிழாசனும்.

பாடசாலையில் மிகவும் பிரபலமான ஆசியர்களில் ஒருவர் விஜயரட்ணம் சேர் என்றால் அது மிகையாகாது.

பதின்மவயதின் பருவங்களை அவர் அறிந்ததாலோ என்னவோ நான் விடலைப்பருவத்தில் டுபாடிறி ்து ிி்த ில், அன்பாய் அழைத்து, மகன் உங்களுக்கு அப்பா இல்லை, நீங்க தான் முத்தவர்.  படித்து முன்னுக்கு வரனும் என்றார் ஒரு நாள். தெறித்துத் திரியாதே (குப்படி செய்யாதே)  என்று அவர் சொல்லவேயில்லை. மேல்வகுப்பில் சித்தியடைந்த போது முதுகில் தட்டி கெட்டிக்காரன் என்றதும் அவர் தான்.

புலம் பெயர்ந்து பல ஆண்டுகளின் பின்னான ஒரு நாள் பாடசாலைக்கு போயிருந் போது கண்டதும் முதுகில் தட்டி கடந்து வந்த பாதையை மறக்காதீர்கள் என்றும், பாடசாலை என்பது தாய்க்குச்சமனானது என்றும் றி மனதுக்குள் ஒரு விதை ிதைத்தார். அந்த விதை முளைத்து மரமாகவிருக்கிறது, இன்று.

 வ் வருடம் ஆனி மாதம் எனது ‌பேரன்புக்குரிய அதிபரின் பாராட்டு விழாவிற்கு அவரை அழைப்பதற்கு அவரின் வீட்டுக்குச் ிரன்.

கண்டதும் அவரால் என்னை அடையளம் காண முடியாவிட்டாலும், சற்று நேரத்தில்  சஞ்சயன் தானே என்று அழைத்து ஆச்சர்யப்படுத்தினார். ன்்பட்ட போது வெளிவாசல் வரை வந்து வழியனுப்பிய போது எனது ப்ளாக் வாசிக்கவென அதன் விலாசமும் வாங்கி வைத்துக்கொண்டார். வாசித்திருப்பாரோ?

எங்கள் அதிபரின் பாராட்டு விழாவிற்கான அழைப்பிதழை சேருக்கு கொண்டுபோய்க் கொடு என்று எது என்னைத் தூண்டியது? அது தற்செயலாக எனது மனதுக்கு தோன்றியதா? அல்லது இது தான் நீ அவரை இறுதியாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் என என் மனதுக்கு யாரும் அறிவித்தார்களா? எது எப்படியோ, இறுதியாய் அவரை சந்தித்தது மனதுக்கு ஆறுதலாயிருக்கிறது.

என் ஆசானின் உடல் மறைந்திருக்கலாம், ஆனால் நினைவுகளும், அவர் கற்பித்தவைகளும் என்னுடன் இருக்கும் நான் இருக்கும் வரை.

தமிழ் அறிவித்த என்னாசானுக்கு இது சமர்ப்பணம்.

.

5 comments:

 1. இழப்பின் வலி கொடிது .....இளம் பராய நினைவுகள் ன்னும்பசுமரதாணியாக் இருக்கி றது .அவரது ஆன்மா சாந்திக்கு பிரார்தனைகள்.

  ReplyDelete
 2. //என் ஆசானின் உடல் மறைந்திருக்கலாம், ஆனால் நினைவுகளும், அவர் கற்பித்தவைகளும் என்னுடன் இருக்கும் நான் இருக்கும் வரை.//

  உங்கள் எழுத்தில் ஆசான் குடிக் கொண்டுள்ளார். அவருக்கு இப்படி ஒரு மாணவன் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. அவரின் இழப்பு நமக்கு பெரிய இழப்பு , இத்துடன் எனது ஆழ்ந்த அனுதாவங்கள் அவரின் குடும்பத்தினருக்கு, அவர் எங்கள் ஸ்கூல்லும் படிப்பித்தவர்

  ReplyDelete
 4. ஆசானின் இழப்பின் துயரைப் புரிந்து கொள்கிறேன். இள வயதிலேயே மறைந்த எனது ஆசான் ராசதுரை மாஸ்டர் பற்றி நினைந்தழுகிறேன்.

  ReplyDelete

பின்னூட்டங்கள்