Norway Cup என்னும் மாபெரும் கால்ப்பந்தாட்டத் திருவிழா

ஓஸ்லோ மாநகரத்தில் தொடங்கியிருக்கிறது மாபெரும் கால்ப்பந்தாட்டத் திருவிழா. ஆம் நோர்வேயின் மிகப்பெரிய கால்பந்து சுற்றுப்போட்டி இன்று ஆரம்பித்திருக்கிறது. உலகக்கால்பந்தட்ட சுற்றுப்போட்டிகளில் மிகப் பெரியவை எனச் சொல்லக்கூடிவற்றில் இதுவுமொன்று.

இதன் சிறப்பு என்னவென்றால்
ஏறத்தாள 1500 க்கு மேற்பட்ட அணிகள்
50 க்கும் மேற்பட்ட நாடுகள்
40.000 வீரர்கள், வீராங்கனைகள்
4000 போட்டிகள்
350 நடுவர்கள்
1600 அதிகாரிகள்
700 க்கும் அதிகமான ஊடகவியளார்கள்

அதிகமான போட்டிகள் Ekebergslett என்னும் மாபெரும்வெளியில் உள்ளமைதானங்களிலேயே நடைபெறும்.

இனிவரும் 7 நாட்களும் நோர்வேயில் இதுவே பேச்சாயிருக்கும,பத்திரிகைளின் முதல் பக்கத்தை வெற்றியும் தோல்வியும், மகிழ்சியும் துக்கமும் ஆக்கிரமித்திருக்கப்போகிறது.

இந்த போட்டிகளுகக்கான ஒழுங்கமைப்பை Bækkelagets Sportsklub என்னும் கழகம் செய்து வருகிறது. இந்தப்போட்டிக்கான முழு ஒழுங்கையும் மக்கள் சிரமதானத்தின் அடிப்படையிலேயே செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.முதவாது போட்டி 1972ம் ஆண்டு 420 அணிகளுடன் நடைபெற்றிருக்கிறது.

முழுவதும் பதின்பவயதினர் பங்குபற்றும் போட்டிகள் என்பதால் இசைநிகழ்சிகள், நடன நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள் என்று மைதானமும் அதைச் சுற்றியபகுதிகளும் ஒரே கொண்டாட்டமாய் இருக்கும். வியாபாரமும் களைகட்டியிருக்கும் ஒஸ்லோ முழுவதும்.

பல வருடங்களுக்கு முன் (1992 என்று நினைக்கிறேன்) இந்தப் போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக Liverpool அணியினர் வந்திருந்தனர். எனக்கு liverpoolஅணியின் மீது 1980 களில் இருந்தே பெருங் காதலிருக்கிறது. இவர்களை எப்படியாவது தரிசித்தே ஆகவேண்டும் என்று மனம் பெருங்கூச்சல் போட்டது. இலங்கையில் இருந்த வரும் பத்திரிகையாளன் என்ற போர்வையில் நுளைவு அனுமதிக்கு விண்ணப்பித்தேன். கிடைத்தது அனுமதி. மைதானத்துக்குள் புகுந்து Ian Rush, Bruce Grobbelaar, Jan Mølby, Steve McManaman, கறுப்பு முத்து என்றளைக்கப்பட்ட John Barnes ஆகியோரை சந்தித்தது ஒரு பெருங்கதை.

 1993ம் ஆண்டு ஒரு நோர்வே இளைஞர் அணிக்கும், அங்கோலா நாட்டைச் சேர்ந்த நிலக்கண்ணி வெடிகளால் அவயங்களை இழந்தவர்களுக்கும் ஒரு போட்டி நடந்தது.அங்கோலா நாட்டவர்களினால் அன்று நிகழ்த்தப்பட்ட அதிசயம் இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.

கோலூன்றி அவர்கள் ஓடிய வேகம்.. அப்பப்பா
மந்திரக்காரர்களா அவர்கள் என்று என்றுமளவுக்கு பந்து அவர்களின் சொல்லுக்கு ஆடியது.
Technical football என்பதனை அன்று தான் கண்டேன்

மெதுவாய் விளையாடி, எதிரி இரண்டு கோல் அடிக்கும் வரை சும்மா இருந்தவர்கள்
பின்பு
சுழன்றார்கள்
சுழன்றாடினார்கள்
ஓடினார்கள்
எதிரியை சிப்பிலி ஆட்டி
3 - 2 என்ற வென்ற போது
மைதானமே பிரமித்திருந்தது
நான் மயங்கியிருந்தேன் அவர்கள் விளையாட்டின் அழகில்.

இம்முறையும் இவர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் விளையாட்டை ரசிக்க நினைத்திருக்கிறேன்.


.

1 comment:

பின்னூட்டங்கள்