நாம் நாமம் வைத்த கதை

பாடசாலை நாட்களில் நண்பர்களை பெயர் சொல்லி அழைப்பதை விட செல்லமாக பட்டப்பெயர்கள் வைத்தே அழைப்பது வழக்கமல்லவா. அப் பெயர்கள் நகைச்சுவைக்காக வைக்கப்பட்டாலும் அவற்றின் பின்னால் ஏதோவொரு கதையிருக்கும். காலப்போக்கில் இந்தப் பெயர்களே நிலைத்தும் நிஜப் பெயர்கள் மறந்தும் போய் விடுகின்றன.

இன்று எனது நினைவில் நிற்கும் பட்டப்பெயர்களினூடா ஒரு சிறு பயணம் செய்ய நினைத்திருக்கிறேன்.




டக்:
இந்த புண்ணியவானுடன் நானும் படித்தேன். இவனிடம் எதைக் கேட்டாலும் ”டக்” எண்டு வாறன், ”டக்” என்ற செய்வம்” என்று கனக்க ”டக்” போடுவதால் கிடைக்கப்பட்ட பெயர் இது. இதில் உள்ள இன்னுமொரு நகைச்சுவை என்னவென்றால் இவனுக்கு ”டக்” என்று பெயர் சூட்டியது நாங்களல்ல, எங்கள் பாடசாலையின் அதிபர் தான்.  இவனின் பெயர் ”டக்”  ஆன பின் ஆங்கிலத்தில் கரைத்துக் குடித்த ஒரு அறிவாளி ஒருத்தன் அதை ”தாரா" (duck) என மொழியெர்த்ததால் இந்த ”டக்” பிற்காலத்தில் ”தாரா” என்றும் அழைக்கப்பட்டான்.


(”டக்” என்றால் விரைவாக என்று பொறுள்படும்)

டப்பி:
இந்த பெரியவருடனும் நான் படித்தேன். நன்றாக கிறிக்கட் விளையாடுவான் பையன். ஆனால் இவரின் பட்டப்பெயருக்கான காரணம் மறந்து விட்டது


நண்டு அல்லது முனிவன்: 
இவ(னு)ரும் எம்முடன் படித்தவ(ன)ர். நண்டு என்று ஏன் பெயர் வந்தது என்று மறந்து விட்டது ஆனால் ”முனிவன்” என்பது சைட் அடிக்காமல் படிப்பே தொழில் என்றிருந்ததாலும், அகத்திய முனிவரின் உயரத்துக்கும் இவனின் உயரத்துக்கும் சம்பந்தமிருப்பதாலும் இவன் முனிவன் என்று அழைக்கப்பட்டான்.

ஊத்தை: நம்மட பெயருங்கோ... ஏதோ.. என்ட சுத்தம் தெரிந்த ஒரு பன்னி வைத்த பெயர்.. (நாசமா போவான்)


இந்தப் பட்டப்பெயரை எழுதுவது அழகல்ல. : நோய் அல்லது பலவீனம் ஒன்றை அடிப்படையாக வைத்து வைக்கப் பட்டது. எவ்வளவு பெரிய வலியை தினம் தினம் இவனுக்கு கொடுத்திருக்கிறோம் என்பதை நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. மன்னித்துக்கொள் நட்பே.


வேடன்: 
1983 இனக்கலவரத்தில் காணாமல் போன நண்பனின் பெயர். காரணம் மறந்துவிட்டது. வேடன் என்பது அவனது ”வேணன்” என்னும் அழகிய பெயரின் திரிபு என்று தான் ஞாபகமிருக்கிறது. இவனுக்கும் இன்னொருவனுக்கும் வார்த்தைக் கைகலப்பு வரும் போது காது வெந்துவிடும் அளவுக்கு புதிய புதிய xxx சொற்களை உருவாக்குவார்கள். 


கிழவி: 
காரணம் மறந்து விட்டது. இன்றும் தொடர்பில் உள்ள ஒருவர்(ன்).


பூனை: 
அமைதியாய் தன்து காரியத்தை கவனிக்கும் (அப்)பாவி.  விவசாய வகுப்பில் வகுப்பில் நாம் ”ஒட்டு முறைகள்” பற்றி படித்த போது தனது வீட்டு பப்பாசி மரத்தில் ரோஜா செடியை ஒட்டி ஒரு விவசாய புரட்ச்சி செய்து, தோற்றவன். அதை அவனின் தகப்பனாரே எமக்கு அறிவித்தார். அதன் பின் நடந்தது ஒரு சோகக் கதை...


குண்டன்: காரண இடுகுறிப் பெயர்


முக்கு தோண்டி: காரண இடுகுறிப் பெயர்


நசுக்கி (1): நசுக்கிடாமல் தன்ட வேலையை செய்பவன்


நசுக்கி (2): மெதுவாக குசு விடுபவன்

மூஞ்சூறு:
எடுத்ததற்கெல்லாம் கோபப்படுபவன். சிரிக்காமலே இருந்ததால் வந்த பெயர் இது. 


கரடி: 

எனது அக்கா ஒருவர் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக இருந்த பாடசாலையில் ஒரு ஆசிரியரை கரடி என்றழைத்திருக்கிறார்கள். அவரைப் போல நடை உடை பாவனைகளில் எனது அக்காவும் இருந்ததால் அக்கா சின்னக்கரடி என்று அழைக்கப்பட்டார்.





இப்படி உங்களுக்கும் பல பட்டப்பெயர்கள் தெரிந்திருக்கும். பின்னூட்டத்தில் மறக்காமல் பதிவிடுங்கள்.

3 comments:

  1. முசுறு - சிரிக்காமல் கணக்கு படிப்பித்த ஒரு டீச்சர்,
    சின் சின் நோனா - ஸ்டைலாக வெளிக்கிட்டு வரும் ஒரு இங்கிலீஷ் டீச்சர்
    எண்ணெய் வடி - எண்ணெய் வடிய வடிய பள்ளிக்கூடம் வரும் ஒரு பெடியன்(பெயர் சொல்ல மாட்டேன்)
    அனஸ்தடிக் - வாய் மணக்கிற ஒரு பெடியன். எங்களுடன் A /L படித்தவன்
    சின்ன கறுத்தான் - கட்டையான ஒரு கறுத்த பெடியன். இவனும் எங்களுடன் படித்தவன் ஆனால் இப்போது உயிருடன் இல்லை

    ReplyDelete
  2. நகைசுவைக்கு மாத்திரமே அன்றி ஒருவரையும் புண்படுத்த அல்ல. படிக்கும் காலங்களில் செய்த குழப்படிகள்.

    ReplyDelete
  3. எனக்கு தெரியும் அந்த ஊத்தயனை, அதோடு அந்த பட்டபெயரை சூட்டியவரையும்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்